என் மலர்

  சினிமா

  மீண்டும் வில்லனாக நடிக்கும் பிரசன்னா
  X

  மீண்டும் வில்லனாக நடிக்கும் பிரசன்னா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `அஞ்சாதே' படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நடிகர் பிரச்சனா, தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
  `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக `நரகாசூரன்' என்ற படத்தை இயக்கினார். பைனான்ஸ் பிரச்சனையால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக `நாடக மேடை' என்ற படத்தை இயக்குவதாக அறிவத்தார். அந்த படம் பாதியில் நிற்கிறது.

  இந்த நிலையில், அவரது அடுத்த படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரசன்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் முன்னதாக அஞ்சாதே, முரண் உள்ளிட்ட படங்களில் வில்லத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திரவம் என்ற இணைய தொடரில் நடித்து வருகிறார்.  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  Next Story
  ×