காதலர் தினத்தன்று வெளியாகும் லோகேஷ் கனகராஜின் 'DC' க்ளிம்ப்ஸ்!

நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார்டிசி படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
காதலர் தினத்தன்று வெளியாகும் லோகேஷ் கனகராஜின் 'DC' க்ளிம்ப்ஸ்!
Published on

முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம்வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் டிசி படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படம் முழு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக ஹிந்தியின் முன்னணி நடிகையான வாமிகா கபி நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ பிப்.14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  

X

Maalai Malar
www.maalaimalar.com