search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Google Doodle"

    • கூகுள் டூடுலில் இரண்டரை நிமிட யூடியூப் வீடியோ வெளியிடப்பட்டது.
    • கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார்.

    ஸ்டீபன் ஹாக்கிங் என்ற ஒரு பெயர் உலகில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்றாகும். அவரது பெயர் பொதுவாக சக்கர நாற்காலியில் இருக்கும் ஒரு நபரின் படங்களுடன் நினைவுப்படுத்தப்படுகிறது. ஆனாலும் அவரின் சாதனைகளை எண்ணிபார்க்கும் போது அவரின் இயக்கமின்மை அவரை ஒருபோதும் நிறுத்தவில்லை என்பது புரியும்.

    ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8, 1942 இல் பிறந்தார். அண்டவியல், கோட்பாட்டு இயற்பியல் துறைகளில், குறிப்பாக கருந்துளைகள் மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் ஆகியவற்றில் அவர் செய்த அற்புதமான பணிகளுக்காக அவர் பரவலாக அங்கீகரிக்கப்பட்டார்.


     

    ஹாக்கிங்கிற்கு 21 வயதில் ஒரு அரிய நரம்பியல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது அவரது உடலை படிப்படியாக செயலிழக்கச் செய்தது. உடலை கிட்டத்தட்ட உடலை அசைக்க முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இருந்தபோதிலும், அவர் தனது கல்விப் பணியைத் தொடர்ந்தார். ஆக்ஸ்போர்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும்,கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் இருந்து முனைவர் பட்டமும் பெற்றார்.

    பிக் பேங் கோட்பாட்டின் மூலம் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய நமது புரிதலுக்கு ஹாக்கிங் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார். அவரது அறிவியல் சாதனைகளுக்கு மேலதிகமாக, ஹாக்கிங் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் அறிவியலின் தொடர்பாளராகவும் இருந்தார்.

     


    அவர் எழுதிய பல்வேறு புத்தகங்கள் விற்பனையில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன. அறிவியல் மற்றும் சமூகத்தில் ஹாக்கிங்கின் தாக்கம் அளப்பரியது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார். அவர் ராயல் சமுதாயத்தின் (சொசைட்டி) சக உறுப்பினராகவும், பல மதிப்புமிக்க அறிவியல் நிறுவனங்களின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

    ஹாக்கிங் தனது 76வது வயதில் மார்ச் 14, 2018 அன்று காலமானார். ஸ்டீபன் ஹாக்கிங்கின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் டூடுலில் இரண்டரை நிமிட யூடியூப் வீடியோவை வெளியிட்டது. அதில் கணினியால் உருவாக்கப்பட்ட அவரது குரல் இடம்பெற்றிருக்கிறது.



    • நிலவின் தென் துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா.
    • விண்வெளி துறையில் இந்தியாவின் புதிய சாதனைக்கு உலக நாடுகள் வாழ்த்து.

    நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது. இதனை கொண்டாடும் வகையில், கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு உள்ளது. சிறப்பு டூடுலில் சந்திரயான் 3  நிலவை சுற்றி வருவதும், தென் துருவத்தில் கால் பதித்ததும், இந்தியா சிரிப்பது போன்ற கார்டூன் வண்ணமயமான நிறங்ளில் அழகாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. டூடுலை கிளிக் செய்ததும், சந்திரயான் 3 பற்றிய தகவல்கள் மற்றும் செய்தி குறிப்புகள் அடங்கிய சிறப்பு பக்கம் திறக்கிறது.

    கடந்த ஜூலை 14-ம் தேதி ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 40 நாட்கள் நெடிய பயணத்தை நிறைவு செய்யும் வகையில், சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர், நேற்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி வரலாறு படைத்தது.

     

    இதுவரை அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா போன்ற நாடுகள் தான் நிலவில் தரையிறங்கி இருக்கும் நிலையில், நிலவில் கால்பதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதுதவிர நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. 

    விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் புதிய மைல்கல் சாதனைக்கு, உலக நாடுகள் மற்றும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலதுறைகளை சேர்ந்தவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜி என்ற எழுத்தில் இன்பம் என்ற வார்த்தை இருக்குமாறும், எல் இருக்க வேண்டிய இடத்தில் திருவள்ளுவரின் உருவத்தை "மினிமலிஸ்டிக் ஆர்ட்" வகையில் அமைத்துள்ளார்.
    • இ என்று எழுத்து மற்றும் மற்ற அனைத்து எழுத்துக்களும் கூகுள் லோகோவில் இருக்கும் நிறங்களை கொண்டு அமைத்துள்ளார்.

    ஓசூர்:

    ஓசூர் பகுதியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் லூகாஸ் (வயது 33), இவர் திருக்குறள் ஆர்வலர்.

    திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு கூகுள் டூடுல் வெளியிட வலியுறுத்தி ஒரு கற்பனையான கூகுள் டூடலை "சுகர் ஆர்ட்" ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார்.

    5,000 மேற்பட்ட கூகுள் டூடுலை வரைந்து பார்த்து இதற்கு முன்பு வந்த எந்த டூடுல் மாதிரியும் இல்லாமல் இப்போது உருவாகியிருக்கும் இந்த டூடுல் தனித்தன்மையோடு உள்ளது. மேலும் அதே நேரத்தில் திருக்குறளையும் வெளிப்படுத்துமாறு வடிவமைத்துள்ளார்.

    ஜி என்ற எழுத்தில் திருக்குறள் என்ற வார்த்தை இருக்குமாறும், ஓ என்ற எழுத்தில் அறம் என்ற வார்த்தை இருக்குமாறும், ஓ என்ற எழுத்தில் பொருள் என்ற வார்த்தை இருக்குமாறும் வடிவமைத்துள்ளார்.

    ஜி என்ற எழுத்தில் இன்பம் என்ற வார்த்தை இருக்குமாறும், எல் இருக்க வேண்டிய இடத்தில் திருவள்ளுவரின் உருவத்தை "மினிமலிஸ்டிக் ஆர்ட்" வகையில் அமைத்துள்ளார். இ என்று எழுத்து மற்றும் மற்ற அனைத்து எழுத்துக்களும் கூகுள் லோகோவில் இருக்கும் நிறங்களை கொண்டு அமைத்துள்ளார்.

    கூகுள் நிறுவனம் இதுவரைக்கும் கன்பியூசியஸ், ஷேக்ஸ்பியர், லியோ டோல்ஸ்டோரி என அநேக உலக அறிஞர்களுக்கு டூடுல்ஸ் வெளியிட்டு கவுரவபடுத்தியுள்ளனர்.

    மற்ற உலக அறிஞர்களோடு ஒப்பிடும்போது திருவள்ளுவர் யாருக்கும் சளைத்தவரல்ல. அதனால் திருக்குறள் தந்த இந்திய ஞானி திருவள்ளுவருக்கும் ஒரு இன்டர்நேஷனல் அல்லது இந்தியன் டூடுல் வெளியிட வேண்டும் என்று எனது டூடுல் ப்ரோபோஸால்-ளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார்.

    இந்திய விஞ்ஞானி பிரசந்தா சந்திரா மகாலனோபிசு 125-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் டூடுலால் கொண்டாடி வருகிறது. #GoogleDoodle #PrasantaChandraMahalanobis
    புதுடெல்லி:

    இந்திய விஞ்ஞாஅனி பிரசந்தா சந்திரா மகாலனோபிசு மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர். கணிதம் மற்ரும் அறிவியியலில் மிகவும் சிறந்து விளங்கிய இவர் கண்டுபிடித்த அளவீடுக்கு இவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    மகாலனோபிசு தொலைவு என்ற இந்த அளவீடு பல அளவீடு முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய புள்ளிவிவர நிறுவனம் நிறுவப்படுவதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்தார். இவர் பொருளாதாரம் மற்றும் கணிதத்துறையில் ஆற்றிய பணி மூலம் உலகில் உள்ள மக்களால் அறியப்பட்டார்.



    இந்நிலையில், மகாலனோபிசு பிறந்த தினமான இன்று அவரை பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மகாலனோபிசு தனது 78 வது வயதில் ஜீன் 28-ம் தேதி மரணம் அடைந்தார். #GoogleDoodle #PrasantaChandraMahalanobis

    உலக தந்தையர் தினமான இன்று இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் கொண்டாடி வருகிறது. #GoogleDoodle #FathersDay

    புதுடெல்லி:

    தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர்களை கவுரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தை இந்த தினம் முழுமையடையச் செய்கிறது.

    இன்று (ஜூன் 17-ந் தேதி) உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினத்தில் அனைவரும் தந்தைக்கு நேரிலோ அல்லது அலைபேசியிலோ வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். வேறு பல நாடுகளில், பிற நாட்களில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன்  17-ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
     
    இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையை கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு  கவுரவிக்கப்படுகிறது. 
     


    தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம். குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை.  குழந்தையின் ஆரோக்கியம் மீது தாய் கவனம் செலுத்துவது போல, அதன் முன்னேற்றத்துக்காக ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை. ‘அன்னையிடம் அன்பை  வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்’ என்ற பாடல்வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

    இந்நிலையில், அப்படிப்பட்ட அப்பாக்களை கொண்டாடும் வகையில் இன்று (ஜூன் 17) பல்வேறு நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக தந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில் ‘சிறப்பு டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது. #GoogleDoodle #FathersDay
    உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று மாலை தொடங்க உள்ள நிலையில் அதனை கூகுள் டூடுலாக கொண்டாடி வருகிறது. #GoogleDoodle #FIFA2018
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

    இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று தொடங்குகிறது. இது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.


    அதனை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதே போல் ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக மணற்சிற்பம் ஒன்றை வடித்துள்ளார். இது பார்வையாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GoogleDoodle #FIFA2018


    ×