search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உலகை திரும்பி பார்க்க செய்த அறிவுஜீவி இயற்பியலாளர் - ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தநாள் இன்று
    X

    உலகை திரும்பி பார்க்க செய்த அறிவுஜீவி இயற்பியலாளர் - ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தநாள் இன்று

    • கூகுள் டூடுலில் இரண்டரை நிமிட யூடியூப் வீடியோ வெளியிடப்பட்டது.
    • கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார்.

    ஸ்டீபன் ஹாக்கிங் என்ற ஒரு பெயர் உலகில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்றாகும். அவரது பெயர் பொதுவாக சக்கர நாற்காலியில் இருக்கும் ஒரு நபரின் படங்களுடன் நினைவுப்படுத்தப்படுகிறது. ஆனாலும் அவரின் சாதனைகளை எண்ணிபார்க்கும் போது அவரின் இயக்கமின்மை அவரை ஒருபோதும் நிறுத்தவில்லை என்பது புரியும்.

    ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8, 1942 இல் பிறந்தார். அண்டவியல், கோட்பாட்டு இயற்பியல் துறைகளில், குறிப்பாக கருந்துளைகள் மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் ஆகியவற்றில் அவர் செய்த அற்புதமான பணிகளுக்காக அவர் பரவலாக அங்கீகரிக்கப்பட்டார்.


    ஹாக்கிங்கிற்கு 21 வயதில் ஒரு அரிய நரம்பியல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது அவரது உடலை படிப்படியாக செயலிழக்கச் செய்தது. உடலை கிட்டத்தட்ட உடலை அசைக்க முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இருந்தபோதிலும், அவர் தனது கல்விப் பணியைத் தொடர்ந்தார். ஆக்ஸ்போர்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும்,கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் இருந்து முனைவர் பட்டமும் பெற்றார்.

    பிக் பேங் கோட்பாட்டின் மூலம் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய நமது புரிதலுக்கு ஹாக்கிங் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார். அவரது அறிவியல் சாதனைகளுக்கு மேலதிகமாக, ஹாக்கிங் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் அறிவியலின் தொடர்பாளராகவும் இருந்தார்.


    அவர் எழுதிய பல்வேறு புத்தகங்கள் விற்பனையில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன. அறிவியல் மற்றும் சமூகத்தில் ஹாக்கிங்கின் தாக்கம் அளப்பரியது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார். அவர் ராயல் சமுதாயத்தின் (சொசைட்டி) சக உறுப்பினராகவும், பல மதிப்புமிக்க அறிவியல் நிறுவனங்களின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

    ஹாக்கிங் தனது 76வது வயதில் மார்ச் 14, 2018 அன்று காலமானார். ஸ்டீபன் ஹாக்கிங்கின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் டூடுலில் இரண்டரை நிமிட யூடியூப் வீடியோவை வெளியிட்டது. அதில் கணினியால் உருவாக்கப்பட்ட அவரது குரல் இடம்பெற்றிருக்கிறது.



    Next Story
    ×