search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fathers Day"

    தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பதிவிட்ட டிவிட்டில் அவரது தந்தை அவருக்கு கற்றுக்கொடுத்த முக்கிய பாடம் குறித்து கூறியுள்ளார். #ViratKohli #FathersDay
    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் கடந்த 16-ம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் மறைந்த அவரது தந்தை பிரேம் கோலிக்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் தனது டுவிட்டரில் தந்தையுடன் சிறுவயதில் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருந்தார். 

    அதில், இந்த தந்தையர் தினம் மறக்கமுடியாத ஒரு நாளாகும், உங்கள் தந்தையுடன் இந்த தினத்தை சிறப்பானதாக ஆக்குங்கள், என பதிவிட்டிருந்தார். மேலும், ‘ஆரம்பத்தில் இருந்து கடினமாக உழைக்கவும், என் சொந்த கடின உழைப்பில் முழு நம்பிக்கை வேண்டும் எனவும், மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்க கூடாது என்பதையும் எனக்கு, அவர் கற்று கொடுத்தார். அந்த பாடம் இப்போது என் வாழ்வில் முக்கியமாகிவிட்டது. அவர் சரியான திசையில் என்னை வழிநடத்தினார். நன்றி அப்பா!’, எனவும் அவர் கூறியுள்ளார்.  



    கடந்த 2006-ம் ஆண்டு விராட் கோலிக்கு 18 வயது இருக்கும் போது அவரது தந்தை மரணமடைந்தார். அந்த சமயத்தில் அவர் கர்நாடகா - டெல்லி இடையேயான ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #ViratKohli #FathersDay
    தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா உன் அன்பிற்கு முன்னே என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தந்தையர் தின வாழ்த்துக்களை தமிழில் டுவிட் போட்டு அசத்தியுள்ளார். #HarbhajanSingh ‏#FathersDay
    மும்பை:

    இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வானவர் ஹர்பஜன் சிங். இதையடுத்து, ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் போட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார். தமிழில் அசத்தலாக பல டுவீட்களை பதிவு செய்து கலக்கி வருகிறார். 

    இன்று நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பிரபலங்கள் தங்கள் அப்பாக்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஹர்பஜன் சிங்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துக்களை உருக்கத்துடன் தமிழில் டுவிட் போட்டு அசத்தியுள்ளார். அத்துடன், சிறு வயதில் தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா உன் அன்பிற்கு முன்னே. ஈடு இணை இல்லா அற்புதம் நீ!! வாழ்க்கையின் அர்த்தம் புரியவைத்த தீர்க்கதரிசி நீ!! சுயநலம் என்ற வார்த்தை தெரியாத வள்ளல் நீ!! உலகின் அனைத்து தந்தையர்க்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் நான் உட்பட  அப்பா... என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

    ஹர்பஜனின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் ஹர்பஜனுக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    #HarbhajanSingh ‏#FathersDay
    உலக தந்தையர் தினமான இன்று இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் கொண்டாடி வருகிறது. #GoogleDoodle #FathersDay

    புதுடெல்லி:

    தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர்களை கவுரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தை இந்த தினம் முழுமையடையச் செய்கிறது.

    இன்று (ஜூன் 17-ந் தேதி) உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினத்தில் அனைவரும் தந்தைக்கு நேரிலோ அல்லது அலைபேசியிலோ வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். வேறு பல நாடுகளில், பிற நாட்களில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன்  17-ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
     
    இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையை கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு  கவுரவிக்கப்படுகிறது. 
     


    தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம். குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை.  குழந்தையின் ஆரோக்கியம் மீது தாய் கவனம் செலுத்துவது போல, அதன் முன்னேற்றத்துக்காக ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை. ‘அன்னையிடம் அன்பை  வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்’ என்ற பாடல்வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

    இந்நிலையில், அப்படிப்பட்ட அப்பாக்களை கொண்டாடும் வகையில் இன்று (ஜூன் 17) பல்வேறு நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக தந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில் ‘சிறப்பு டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது. #GoogleDoodle #FathersDay
    ×