search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "daughter marriage"

    • அறியாமை காரணமாக நான் இப்படி இரும்பு பெட்டியில் பணத்தை சேமித்து நஷ்டம் அடைந்துவிட்டேன்.
    • என்னுடைய நிலையைக் கருத்தில் கொண்டு அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டம் பார்வதிபுரம் அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்தவர் ஆதி மூலம் லக்ஷ்மணா. விவசாயி.

    இவர் தன்னுடைய மகளுக்குத் திருமணம் செய்வதற்காக சுமார் ரூ. 2 லட்சம் பணத்தை இரும்பு பெட்டி ஒன்றில் பத்திரப்படுத்தி சேமித்து வைத்திருந்தார்.

    இந்நிலையில், நேற்று மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணம் மொத்தம் எவ்வளவு இருக்கிறது என்று எண்ணிப் பார்ப்பதற்காக இரும்பு பெட்டியைத் திறந்து பார்த்தார்.

    அப்போது இரும்பு பெட்டியில் இருந்த பணம் கரையான் அரிக்கப்பட்டு துண்டு துண்டாக இருந்தது. இதை கண்ட ஆதி மூலம் லக்ஷ்மணா அதிர்ச்சடைந்தார்.

    பெட்டியை தலைகீழாக கவிழ்த்துப் பார்த்த போது உள்ளே வைத்திருந்த சுமார் 2 லட்ச ரூபாய் பணத்தை கரையான்கள் கடித்து துண்டு துண்டாக சேதப்படுத்தியிருந்தது தெரிய வந்தது.

    இதனால் மனவேதனை அடைந்துள்ள ஆதிமூலம் லக்ஷ்மணா, அறியாமை காரணமாக நான் இப்படி இரும்பு பெட்டியில் பணத்தை சேமித்து நஷ்டம் அடைந்துவிட்டேன்.

    என்னுடைய மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். என்னுடைய நிலையைக் கருத்தில் கொண்டு அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கேரள மாநிலத்தில் மகளின் மணவிழா கச்சேரியில் பாடி மயங்கி விழுந்த தந்தை இறந்த செய்தி மறைக்கப்பட்டு திருமணம் நடந்தேறியது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத் (வயது 55).

    இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது 3 பிள்ளைகளில் 2 பேருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

    இளைய மகளான ஆர்ச்சாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளையும் பார்க்க தொடங்கினார். கொல்லத்தை சேர்ந்த ஒரு வாலிபரை தனது மகளுக்கு வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்தார். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறத் தொடங்கின.

    திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தமும் கோலாகலமாக நடந்தது. கடைசி மகளின் திருமணம் என்பதால் விஷ்ணு பிரசாத் செலவைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வந்தார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

    இசைக்கச்சேரியில் பாடகர்கள் பாடிக்கொண் டிருந்த போது விஷ்ணு பிரசாத்தின் நண்பர்கள் சிலர் அவரையும் பாடல் பாடும்படி கூறினார்கள். விஷ்ணுபிரசாத் நன்றாக பாடக்கூடியவர் என்பதால் அவரும் அதை ஏற்று ஒரு பாடலை உற்சாகமாக பாடத் தொடங்கினார். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் மேடையில் மயங்கி சரிந்தார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தந்தையின் நிலையைப் பார்த்து ஆர்ச்சாவும் கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறிய உறவினர்கள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை தொடரும்படி கூறிவிட்டு, உடனடியாக விஷ்ணுபிரசாத்தை அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மறுநாள் திருமணம் என்ற நிலையில் விஷ்ணுபிரசாத் இறந்த தகவலை அவரது மகளிடம் தெரிவித்தால் அவரால் அந்த துக்கத்தை தாங்க முடியாது என்பதாலும் அதன் மூலம் விஷ்ணுபிரசாத் ஆசை, ஆசையாக தனது மகளுக்கு நடத்த திட்டமிட்ட திருமணம் தடைபடும் என்பதாலும் அந்த தகவலை ஆர்ச்சாவிடம் தெரிவிக்காமல் மறைக்க கனத்த மனதுடன் உறவினர்கள் முடிவு செய்தனர்.

    திருமண கோலத்தில் சோகத்துடன் ஆர்ச்சா.

    அதன்படி ஆர்ச்சாவிடம் தந்தை நலமாக இருப்பதாகவும், திருமணத்திற்கு அவர் வந்துவிடுவார் என்று கூறி சமாதானம் செய்தனர். அதன்பிறகு நேற்று திட்டமிட்டபடி ஆர்ச்சாவுக்கு திருமணமும் நடைபெற்றது. தனது கழுத்தில் தாலி ஏறும் வரை தந்தை திருமண மண்டபத்திற்கு வரவில்லை என்பதால் அவரை மகள் கலங்கிய கண்களுடன் தேடிக் கொண்டே இருந்தார். மணமகனும், உறவினர்களும் அவரது தந்தை எப்படியும் வந்துவிடுவார் என்று ஆறுதல் கூறி திருமணத்தை நடத்தி முடித்தனர். அதன் பிறகே ஆர்ச்சாவிடம் அவரது தந்தை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. திருமணம் நடந்து புதிய வாழ்க்கை தொடங்கும் சந்தோ‌ஷத்தை அனுபவிக்கும் முன்பு தனக்கு நல்ல கணவரை தேர்ந்தெடுத்து கொடுத்த தந்தை திருமணத்தை காணும் முன்பே மரணமடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆர்ச்சா கதறி அழுதது அங்கு கூடியிருந்த அனைவரையும் உருக்குவதாக இருந்தது.


    தேங்காய்திட்டில் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை தேங்காய்திட்டு புதுநகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). மீனவர். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகனுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் நடந்த நிலையில் வளர்மதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார்.

    மனைவி இறந்த சோகத்தில் இருந்து வந்த செல்வம் 2 மகள்களுக்கு எப்படி திருமணம் செய்து கொடுக்க போகிறோம்? என வேதனையில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வம் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை செல்வத்தின் உறவினர் விஜயன் அங்குள்ள கோவில் பின்புறம் உள்ள தோப்புக்கு சென்ற போது அங்குள்ள ஒரு மரத்தில் செல்வம் கைலியால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேனி அருகே கள்ளக்காதலனுக்கு மகளை திருமணம் செய்து வைத்த தாய் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே உத்தம பாளையம் சின்னஓபுலாபுரம் வரதராஜபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி லதா(வயது38). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ராஜ்குமார்(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த விசயம் முத்துச்சாமிக்கு தெரியவரவே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

    கள்ளக்காதலனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தால் தங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது என லதா நினைத்தார். எனவே தனது 13 வயது மகளை தனது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

    கடந்த 20-ந்தேதி ராஜ்குமாருக்கும், சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து முத்துச்சாமி ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராஜ்குமார், லதா, தமிழன், ஈஸ்வரி ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூரில் பேஸ்புக் காதலனுடன் மகள் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் செல்வலட்சுமிநகர் எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது 65). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கருப்பாத்தாள்(58). இவர்களுடைய மகள் தீபா(25). பட்டதாரி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன்(27) என்பவருக்கும் இடையே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

    இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அவர்கள் தொடர்ந்து காதலித்தனர்.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிய தீபா நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தீபாவின் பெற்றோர், தனது மகளை காணவில்லை என்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தீபா, தான் காதலித்து வந்த தங்கபாண்டியனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

    தனது மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டாள் என்ற தகவல் தெரிந்ததில் இருந்து கருப்பாத்தாள் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ×