என் மலர்
நீங்கள் தேடியது "ஆன்லைன் கேக்"
- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு கேக்கின் ஸ்கிரீன்ஷாட் பயனர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
- விலை குறித்து பயனர்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.
இன்றைய காலக்கட்டத்தில் ஆன்லைன் விற்பனை என்பது பலராலும் விரும்பப்படுகிறது. இதனால் பலரும் வீட்டில் இருந்தப்படியே விரும்பியதை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கிறார்கள். அப்படி ஆன்லைனில் விலை, பொருளின் தரம் பார்த்து ஆர்டர் செய்து டெலிவரி ஆகும் போது சில சமயங்களில் நாம் ஆர்டர் செய்ததற்கு பதில் வேறு பொருளோ, பொருள் சேதமோ என பலவிதமான சம்பவங்களை கேள்விபட்டிருப்போம்.
ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு கேக்கின் ஸ்கிரீன்ஷாட் பயனர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது, "தந்தையர் தின சிறப்பு ஹேசல்நட் சாக்லேட் கேக்" என்று பட்டியலிடப்பட்டுள்ள இந்த பொருளின் விலை ரூ. 5 லட்சம். இது எழுத்துப்பிழை அல்லது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் இந்த விலை குறித்து பயனர்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தந்தைக்கு மிகவும் விலையுயர்ந்த பரிசை வழங்க விரும்பினால் இந்த கேக்கை வாங்கி தரலாம் என்றும் சிலர் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கேக்கிற்குள் வைரங்கள் அல்லது தங்கம் இருக்கிறதா என்று தங்கள் அப்பாக்கள் கேட்பார்கள் என்றும் கூறுகின்றனர். இப்படி பலரும் நகைச்சுவையாக பதிவிட்டனர். இதனிடையே, மற்ற கேக்குகள் விலையை குறிப்பிட்டு சிலர் விலை தவறாக பதிவிடப்பட்டுள்ளதாக கூறினர்.
தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான தந்தையர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினத்தையொட்டி பல சிறப்பு அறிவிப்புகளை பல ஆன்லைன் நிறுவனம் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இருந்து கேக்கின் மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
- முடிவு விபரம் வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி. கடந்த 24-ந்தேதி மான்வியின் 10-வது பிறந்த நாளை குடும்பத்தினர் கொண்டாடினர்.
அதற்காக சிறுமி தனது தந்தையிடம் கேக் கேட்டுள்ளார். அவர் பாட்டியாலாவில் உள்ள ஒரு பேக்கரியில் ஆன்லைன் மூலமாக கேக்கை ஆர்டர் செய்துள்ளார்.
அதன்படி வினியோகிக்கப்பட்ட கேக்கை குடும்பத்தினர் முன்பு வெட்டி பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். அப்போது ஒவ்வொருவருக்கும் மான்வி கேக் ஊட்டி உள்ளார்.
பின்னர் அவரும் கேக் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் மான்விக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டு உள்ளது. உடனே அவரது தொண்டையும் வறண்டு போனதாக கூறியதோடு, அவர் மாறி மாறி வாந்தி எடுத்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் இது போன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறுமி மான்வியை அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மான்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக் கெட்டு போனதாலும், அதை சாப்பிட்டதுமே சிறுமி உயிரிழப்புக்கு காரணம் என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இருந்து கேக்கின் மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதன் முடிவு விபரம் வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.






