ஆன்லைனில் வாங்கிய 'கேக்' சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி- பிறந்தநாள் கொண்டாடிய போது சோகம்

போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இருந்து கேக்கின் மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.முடிவு விபரம் வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
ஆன்லைனில் வாங்கிய 'கேக்' சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி- பிறந்தநாள் கொண்டாடிய போது சோகம்
Published on

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி. கடந்த 24-ந்தேதி மான்வியின் 10-வது பிறந்த நாளை குடும்பத்தினர் கொண்டாடினர்.

அதற்காக சிறுமி தனது தந்தையிடம் கேக் கேட்டுள்ளார். அவர் பாட்டியாலாவில் உள்ள ஒரு பேக்கரியில் ஆன்லைன் மூலமாக கேக்கை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி வினியோகிக்கப்பட்ட கேக்கை குடும்பத்தினர் முன்பு வெட்டி பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். அப்போது ஒவ்வொருவருக்கும் மான்வி கேக் ஊட்டி உள்ளார்.

பின்னர் அவரும் கேக் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் மான்விக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டு உள்ளது. உடனே அவரது தொண்டையும் வறண்டு போனதாக கூறியதோடு, அவர் மாறி மாறி வாந்தி எடுத்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் இது போன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சிறுமி மான்வியை அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மான்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக் கெட்டு போனதாலும், அதை சாப்பிட்டதுமே சிறுமி உயிரிழப்புக்கு காரணம் என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இருந்து கேக்கின் மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதன் முடிவு விபரம் வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com