என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண நாள்"

    • எங்கள் நான்காம் ஆண்டு திருமண விழாவில் கடவுள் எங்களுக்கு அளித்த ஒரு பெரிய ஆசீர்வாதம்.
    • ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

    பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ்வின் மனைவி, நடிகை பத்ரா லேகாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

    தம்பதியினர் தங்கள் 4 ஆம் திருமண நாளில் பெற்றோர் ஆகியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை தம்பதியினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

    அவர்களின் பதிவில்," இது எங்கள் நான்காம் ஆண்டு திருமண விழாவில் கடவுள் எங்களுக்கு அளித்த ஒரு பெரிய ஆசீர்வாதம். எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன" என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2021 இல் ராஜ்குமார் ராவ் மற்றும் பத்ரா லேகா திருமணம் செய்து கொண்டனர்.

    ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.    

    • துர்கா தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார்!
    • வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம்!

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 50-வது திருமண நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை கடற்கரை சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் துர்கா ஸ்டாலினுடன் சென்று மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து தன் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து இருவரும் ஆசி பெற்றனர்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக - என்னில் பாதியாக துர்கா அவர்கள் நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார்!

    அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி!

    எதிர்பார்ப்புகளற்ற அன்பும் - விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம்.

    வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எம்.எஸ்.தோனி 2010 ஆம் ஆண்டு சாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • எம்.எஸ்.தோனி - சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    எம்.எஸ்.தோனி - சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    இந்த நிலையில், இன்று தங்களது 15வது திருமண நாளை தோனி - சாக்சி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

    இந்நிலையில், திருமண நாளை ஒட்டி சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

    • மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால்.
    • இவர் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி சுசித்ராவை திருமணம் செய்துக்கொண்டார்.

    மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எம்புரான் மற்றும் துடரும் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இவர் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி சுசித்ராவை திருமணம் செய்துக்கொண்டார். இவர் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் பாலாஜியின் மகளாவார். இந்த தம்பதிக்கு பிரனவ் மற்றும் விஸ்மய என்று ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் நடிகர் மோகன்லால் நேற்று அவர்களது 36 வருட திருமண நாளை கொண்டாடினர். இதை மோகன்லால் அவரது மனைவிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து அதில் " என் அன்புள்ள சுச்சிக்கு ஹேப்பி ஆனிவர்சரி. என்றென்றும் நன்றியுடன், என்றென்றும் உன்னுடையவனாக..." என காதல் நிறைந்த பதிவை பதிவிட்டுள்ளார்.

    • கோலிவுட் கொண்டாடும் ஜோடிகளில் ஒன்றான அஜித், ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி நேற்றுடன் 25 ஆண்டுகளாகிவிட்டது.
    • இந்த வீடியோவில் இருவரும் செம க்யூட்டாக இருப்பதால் இணையவாசிகளும் ரசிகர்களும் அஜித்துக்கும் ஷாலினிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்தபோது அஜித் குமார், ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

    இவர்களின் திருமணத்திற்கு மொத்த திரையுலகமும் திரண்டு சென்று வாழ்த்தியது. அரசியல் தலைவர்கள் தொடங்கி முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

    கோலிவுட் கொண்டாடும் ஜோடிகளில் ஒன்றான அஜித், ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி நேற்றுடன் 25 ஆண்டுகளாகிவிட்டது.

     

    இந்த நிலையில், 25-வது ஆண்டு திருமண நாளை அஜித்- ஷாலினி ஜோடியாக கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அஜித்- ஷாலினிக்கு இருவரும் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டுக் கொள்கிறார்கள். இந்த வீடியோவில் இருவரும் செம க்யூட்டாக இருப்பதால் இணையவாசிகளும் ரசிகர்களும் அஜித்துக்கும் ஷாலினிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    25-வது திருமணநாளை கொண்டாடிய அஜித் குமார், ஷாலினி தம்பதிக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். இதை அஜித் ரசிகர்களும் கொண்டாடினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2019-ம் ஆண்டு விஷால் தனது முதல் திருமண நாளை உற்சாகமாக கொண்டாடினார்.
    • அடுத்தடுத்த திருமண நாள்களை விஷால் முதல் திருமண நாள் அளவுக்கு கொண்டாடவில்லை.

    எந்த ஒரு செயலையும் புதிதாக செய்யும் போது, ஆர்வமும், மீண்டும் அதனை எப்போது செய்யலாம் என்ற எண்ணமும் இருக்கும்.

    அதுவே பழகி விட்டால் அதன்மீது இருக்கும் ஆர்வமும் குறைந்து விடும். இது நாம் செய்யும் செயல்களுக்கு மட்டுமல்ல. நமது பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களை கூட மறந்து போவதுண்டு.

    அப்படி தனது திருமண நாளை மறந்து போன மும்பை வாலிபர் ஒருவருக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம் மும்பை நகர மக்களை பதற வைத்துள்ளது.

    அந்த வாலிபரின் பெயர் விஷால். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்பனா என்பவருக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி திருமணம் நடந்தது.

    2019-ம் ஆண்டு விஷால் தனது முதல் திருமண நாளை உற்சாகமாக கொண்டாடினார். ஆனால் அடுத்தடுத்த திருமண நாள்களை அவர் முதல் திருமண நாள் அளவுக்கு கொண்டாடவில்லை. ஆனால் மறக்காமல் மனைவிக்கு வாழ்த்து மட்டும் சொல்லிவிடுவார்.

    இந்த நிலையில் தான் விஷாலின் 5-வது திருமண நாள் கடந்த வாரம் வந்தது. குடும்ப சூழ்நிலை மற்றும் மனைவியின் மீதான நாட்டம் குறைந்தது போன்றவற்றால் விஷால், தனது திருமண நாளை மறந்து போனார். அதோடு மனைவிக்கு வாழ்த்தும் சொல்லவில்லை.

    முதல் நாள் இரவு வரை கணவரிடம் இருந்து வாழ்த்து வரும் என காத்திருந்த மனைவி, மறுநாளும் அவர் வாழ்த்து சொல்லாததால் கடுப்பாகி போனார்.

    இதுபற்றி கல்பனா தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் கல்பனாவின் கணவரை திட்டி தீர்த்ததோடு, அலுவலகத்திற்கு சென்ற அவரை உடனே வீட்டுக்கு வருமாறு அழைத்தனர்.

    அவர் வந்ததும் திருமண நாளில் மனைவிக்கு வாழ்த்து சொல்ல மறந்தது ஏன்? என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதில் பிரச்சினை முற்றி அவர்கள் விஷாலை சரமாரியாக தாக்க தொடங்கினர். இதை தடுக்க வந்த விஷாலின் தாயாருக்கும் அடி-உதை விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த விஷால் மற்றும் அவரது தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி மும்பை போலீசார் விஷாலின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    இதுபற்றி அறிந்த மும்பைவாசிகள், திருமண நாளை மறந்து போனது ஒரு தப்பாடா? எங்களை போன்ற பலர் இதை நினைத்து பார்ப்பதே இல்லை என்று கூறினர்.

    • ஓராண்டு ஓடிவிட்டதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வியப்புடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • லவ் யூ தங்கமே..! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் நம் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

    தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்காக சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் அதை தகர்த்தெரிந்து ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர்.

    விக்கேனஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி அன்று திருமணம் செய்துக் கொண்டனர்.

    திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

    இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

    இதற்கு மத்தியில் நாட்கள் ஓடிவிட்டதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வியப்புடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஆம்.. நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து ஓராண்டு ஆகிறது. ஜூன் 9ம் தேதி (இன்று) தங்களது முதலாமாண்டு திருமண நாளை விக்னேஷ் சிவன்- நயன்தாரா கொண்டாடுகின்றனர்.

    இந்நிலையில், விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

    நேத்து தான் திருமணம் முடிந்ததுபோல் உள்ளது. திடீரென எனது நண்பர்கள் முதலாமாண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி வருகின்றனர்.

    லவ் யூ தங்கமே..! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் நம் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

    இன்னும் பயணிக்க வெகுதூரம் உள்ளது..!

    ஒன்றாகச் சாதிக்க நிறைய இருக்கிறது..!

    நம் வாழ்வில் உள்ள நல்ல மனிதர்களின் அனைத்து நல்லெண்ணத்துடனும், கடவுளின் அனுகிரகத்துடனும் மிகப்பெரிய ஆசீர்வாதம், நம் திருமணத்தின் இரண்டாம் ஆண்டில் கொண்டு வரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.
    • கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியை கண்டது இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ். நானும் ரவுடி தான் திரைப்பட படப்பிடிப்பு பணிகளில் விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. நயன்தாரா சமீப காலமாக படத்தில் நடித்து கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.

    இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடியுள்ளனர்.

    சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்ட நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி இந்த புகைப்படங்கள் அனைத்தையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர்.

    அதில் இரண்டு குழந்தைகளுடன் படகில் போவது, அவரது மகன்கள் இருவரும் ட்ரவுசர்கள் அணிந்து மிகவும் க்யூட்டாக இருக்கின்றனர். மேலும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் அதில் நயன் தாராவை தூக்கி விலையாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அப்பதிவில் வெட்டிங் ஆனிவர்சரி வாழ்த்து தெரிவித்து

    'உன்னை திருமணம் செய்து கொண்டது என் வாழ்வில் நடந்த சிறந்த விஷயம் என் உயிர் உலகம் நீயே. லவ் யூ லாட்ஸ் என் தங்கமே. இன்னும் நிறைய வேடிக்கையான நேரங்கள், நினைவுகள் மற்றும் வெற்றிகரமான தருணங்களுக்கு நீண்ட தூரம் உன்னுடன் செல்ல வேண்டும். . எப்பொழுதும் எங்களுடன் நின்று நம்மைப் பாதுகாத்து, நமது பெரிய பெரிய லட்சியங்களை வெற்றிகொள்ளச் செய்ய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நமது உயிர் & உலகம் உடன்." என்று பதிவிட்டுள்ளார்.

    சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நயன்தாரா நடித்து வருகிறார். அடுத்து மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 , டெஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.

    நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    அண்மையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தனது மகன்களுடன் விக்னேஷ் சிவன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நயன்தாரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், "உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கு தந்தையர் தினம் வாழ்த்துக்கள்" என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எம்.எஸ்.டோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • எம்.எஸ்.டோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.டோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    இன்று தங்களது 15 ஆம் ஆண்டு திருமண நாளை எம்.எஸ்.டோனி - சாக்ஷி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



    திருமண நாளை ஒட்டி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    • திருமண நாளை தோனி - சாக்ஷி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
    • 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    எம்.எஸ்.தோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    இந்த நிலையில், இன்று தங்களது 15வது திருமண நாளை தோனி - சாக்ஷி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    திருமண நாளை ஒட்டி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    மேலும், சாக்ஷி வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தோனியின் ரசிகர்கள் இருவரைக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • சஞ்சு சாம்சன் 2018 ஆம் ஆண்டு சாருலதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
    • அப்புகைப்படத்தில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய அவரது மனைவி சாருலதா கீப்பிங் செய்கிறார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி சாருலதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் திருமண நாளை ஒட்டி இன்ஸ்டாகிராமில் தங்களது புகைப்படத்தை பகிர்ந்து சஞ்சு சாம்சனின் மனைவி வாழ்த்து கூறியுள்ளார். அப்புகைப்படத்தில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய அவரது மனைவி சாருலதா கீப்பிங் செய்கிறார்.

    இந்த பதிவிற்கு கீழே வாழ்நாள் முழுவதும் என்னை காப்பவர் (keeper for life) என்று சஞ்சு சாம்சன் கமெண்ட் செய்துள்ளார்.

    ×