search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wedding Anniversary"

    • இந்திய கிரிக்கெட்டில் முன்னணி வீரராக விராட் கோலி உள்ளார்.
    • விராட் - அனுஷ்கா ஜோடி திருமண நாளை கொண்டாடினர்.

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி நேற்று தங்களின் ஆறாவது திருமண நாளை கொண்டாடினர். இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருமண நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.


    உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நடைபெற்ற திருமண நாள் கொண்டாட்டத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா கருப்பு நிற உடை அணிந்திருந்தனர். இது தொடர்பான பதிவில், " இன்றைய தினம் காதலன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் முழுமையாக கழிந்ததால், கிராமில் பதிவிட அதிக தாமதம் ஆகி விட்டது. 6+ இன்ஃபினிட்டி எமோஜி, காதல் சின்னம் எமோஜி, எனது நியுமெரோ யூனோவுடன்" என குறிப்பிட்டு கோலியுடன் கட்டியணைத்து நிற்கும் புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா பகிர்ந்துள்ளார்.



    அனுஷ்கா ஷர்மா மட்டுமின்றி விராட் கோலியும் தனது இன்ஸ்டாகிராமில் அனுஷ்கா ஷர்மாவுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

    • ஓராண்டு ஓடிவிட்டதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வியப்புடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • லவ் யூ தங்கமே..! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் நம் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

    தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்காக சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் அதை தகர்த்தெரிந்து ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர்.

    விக்கேனஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி அன்று திருமணம் செய்துக் கொண்டனர்.

    திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

    இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

    இதற்கு மத்தியில் நாட்கள் ஓடிவிட்டதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வியப்புடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஆம்.. நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து ஓராண்டு ஆகிறது. ஜூன் 9ம் தேதி (இன்று) தங்களது முதலாமாண்டு திருமண நாளை விக்னேஷ் சிவன்- நயன்தாரா கொண்டாடுகின்றனர்.

    இந்நிலையில், விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

    நேத்து தான் திருமணம் முடிந்ததுபோல் உள்ளது. திடீரென எனது நண்பர்கள் முதலாமாண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி வருகின்றனர்.

    லவ் யூ தங்கமே..! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் நம் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

    இன்னும் பயணிக்க வெகுதூரம் உள்ளது..!

    ஒன்றாகச் சாதிக்க நிறைய இருக்கிறது..!

    நம் வாழ்வில் உள்ள நல்ல மனிதர்களின் அனைத்து நல்லெண்ணத்துடனும், கடவுளின் அனுகிரகத்துடனும் மிகப்பெரிய ஆசீர்வாதம், நம் திருமணத்தின் இரண்டாம் ஆண்டில் கொண்டு வரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • வருகிற 19-ந்தேதி அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக திருமணமுத்தாற்றில் ஆரத்தி விழா.
    • நதிக உற்பத்தியாகும் இடத்தில் இருந்து காவிரியில் கலக்கும் இடம்வரை பாதயாத்திரை செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலையின் தெற்கில் ஏற்காடு மலையில் பிறக்கிறது திருமணி முத்தாறு. இந்த நதி சேலம் நகரத்தில் நுழைந்து சேலம், நாமக்கல் மாவட்டம் வழியாக சுமார் 120 மைல்கள் ஓடி பரமத்தி வேலூர் அருகே நஞ்செய் இடையாறு என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது.

    மிகவும் பழமையான, புனிதம் நிறைந்த இந்த நதி, மணிமுத்தா நதி, வீர மணிமுத்தாறு என்றெல்லாம் அழைக்கப்பட்டது. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்து எடுக்கப்பட்டது. பிரசித்திப் பெற்ற செவ் வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக் கப்பட்டது என்பார்கள்.

    அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. இன்றைக்கும்கூட அணைமேடு அருகில் ஒரு நந்தவனம் இருக்கிறது.

    சேலம் ஸ்தல புராணத்தில் பாடப்பட்ட பாடல் ஒன்று 'சேலம் மணிமுத்தா நதியின் ஒரு திவலை நீர் உண்டால் உடல் பாதகங்கள் அகலும் பரம ஞானம் உண்டாகும்' என்கிறது.

    திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர் (சேலம்), கரபுரநாதர் (உத்தமசோழபுரம்), வீரட்டீஸ்வரர் (பில்லூர்), பீமேஸ்வரர் (மாவுரெட்டி), திருவேணீஸ்வரர் (நஞ்சை இடையாறு) ஆகிய ஐந்து திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப்பட்டவை.

    இந்த 5 கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம்.பஞ்ச காலத்தில் பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கை.

    திருமணிமுத்தாற்றின் கரைகள் கனிம வளம் மிக்கவை. இன்றளவும் அங்கே அள்ள அள்ளக் குறையாமல் இரும்பு, மேக்னசைட், குரோமைட் வெட்டி எடுக்கப்படுகிறது. ஒருகாலத்தில் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது எனச் சொல்கிறாகள். தற்போது இந்த நதி சுருங்கி சாக்கடைகளால் புனிதம் கெட்டு காட்சியளிக்கிறது.

    இந்த நதியின் புனிதத்தை காக்கவும், இழந்த அதன்பெருமைகளை மீட்டெடுக்கவும் ஆன்மீக அமைப்புகள் திரண்டுள்ளன. அதன் முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக திருமணமுத்தாற்றில் ஆரத்தி விழா நடத்தவும், நதிக உற்பத்தியாகும் இடத்தில் இருந்து காவிரியில் கலக்கும் இடம்வரை பாதயாத்திரை செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சேலத்தில் இன்று நடை பெற்றது. இதில் பல்வேறு சங்கங்கள், சமூக, ஆன்மீக அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் திருமணி முத்தாறு நதியின் புனிதம் காக்க தீர்மானிக்கப்பட்டது. நதி ஆரத்தி விழாவை பிரமாண்டமாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    ×