என் மலர்

  நீங்கள் தேடியது "Anushka Sharma"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருக்கும் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். #HappyNewYear2019 #ViratKohli
  ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மெல்போர்ன் டெஸ்ட் நேற்று முடிவடைந்தது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி சிட்னி சென்றுள்ளது.

  இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவது மனைவி அனுஷ்கா ஷர்மாவை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இன்று அவர்கள் சிட்னியில் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

  விராட் கோலி தனது டுவிட்டரில் ‘‘இந்தியா மற்றும் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். சிறப்பான ஆண்டாக அமைய கடவுள் ஆசிர்வதிப்பார்’’ என்று பதிவிட்டுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிங்கப்பூர் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஆளுயர மெழுகுச் சிலை இன்று திறக்கப்பட்டது. #AnushkaSharma #MadameTussauds #SingaporeMadameTussauds
  சிங்கப்பூர்:

  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆளுயர சிலை வைக்கப்பட்டுள்ளன. 

  இதேபோல், லண்டன், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகங்களில் மெழுகுச்  சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகங்களை பார்வையிட வருபவர்கள் தங்களது மனம் கவர்ந்த பிரபலத்தின் சிலை அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதுண்டு.

  சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்டோருக்கு மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 

  இந்நிலையில், இங்கு பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஆளுயர மெழுகுச் சிலை இன்று திறக்கப்பட்டது.

  இந்த மெழுகுச் சிலையில் கையில் ஒரு விலையுயர்ந்த கைபேசியும் இயங்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அனுஷ்காவின் கையில் உள்ள கைபேசி மூலமாகவே ‘செல்பி’ எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் புதிய வசதியுடன் இந்த சிலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #AnushkaSharma #MadameTussauds #SingaporeMadameTussauds
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷர்மா, சுய் தாகா படத்தில் நடித்தது கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது என்று கூறியிருக்கிறார். #Anushka
  வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘சுய் தாகா’. 2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது. மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

  வருண் தவான் இந்த படத்தில் மௌஜி என்ற கதாபாத்திர பெயரில் நடித்துள்ளார். சைக்கிள் என்பது சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம். வருண் கதாபாத்திரத்திற்கு இந்த சைக்கிளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் சரத் கட்டார்யா.

  "மௌஜி சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான். எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான். கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம். சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள், தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்" என நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.  'வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் முன்பக்கம் நான் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும். வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது" என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

  'யாஷ் ராஜ் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள ‘சுய் தாகா - மேட் இன் இந்தியா’ என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆட்டநாயகன் விருதுக்குரிய எனது இரு இன்னிங்சையும் எனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார். #ViratKohli
  இங்கிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்டில் 97, 103 ரன்கள் வீதம் விளாசிய இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

  இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘ஆட்டநாயகன் விருதுக்குரிய எனது இரு இன்னிங்சையும் எனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் எனக்கு நிறைய உத்வேகம் அளிக்கிறார். தொடர்ந்து அளித்துக் கொண்டு இருக்கிறார். எத்தகைய சூழலிலும், ‘நம்மால் முடியும் மனம் தளரக்கூடாது’ என்று எனக்கு பக்கபலமாக இருந்து நம்பிக்கை அளிப்பவர் அவர் மட்டுமே. இந்த பாராட்டுக்கு அவர் தகுதியானவர்’ என்றார்.  #ViratKohli

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் இருக்கும் குரூப் போட்டோவில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் இடம் பெற்றுள்ளது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. #ViratKohli #AnushkaSharma #TeamIndia
  லண்டன்:

  இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்திய அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று இந்திய கிரிக்கெட் அணி, தூதரகத்திற்கு சென்றது. 

  இறுதியாக ஒட்டுமொத்த அணியும், தூதரக கட்டிடத்திற்கு முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டது. இந்த புகைப்படத்தில் பாலிவுட் நடிகையும் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவும் போஸ் கொடுத்தார். 

  இந்த போட்டோவை கண்ட ட்விட்டர் வாசிகள், அனுஷ்கா சர்மா என்ன இந்திய அணியில் ஒருவரா? அவர் ஏன் இந்திய அணியுடன் புகைப்படத்திற்கு போஸ் தருகிறார். பிசிசிஐ இதனை எப்படி அனுமதித்தது? மற்ற வீரர்களின் மனைவிகள் எங்கே? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.  

  ஏற்கனவே வீரர்கள் தங்களது மனைவி, தோழிகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதை குறைத்து, போட்டிகளில் கவனத்தை செலுத்துமாறு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா சர்மா, நெசவாளர்களுக்காக நாடு முழுவதும் பயணிக்க இருக்கிறார். #AnushkaSharma
  அனுஷ்கா சர்மா விராட் கோலியை திருமணம் செய்த பிறகும் இந்தி சினிமாவில் பிசியாக இருந்து வருகிறார். வருண் தவானுடன் அனுஷ்கா நடித்து இருக்கும் சுய்தாகா மேட் இன் இந்தியா என்ற படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

  இந்த படத்தில் வருண் தவான் தையல் காரராகவும் அனுஷ்கா ‌ஷர்மா தையல் வேலைப்பாடு செய்பவராகவும் நடித்துள்ளனர். நெசவாளர்கள் பற்றிய படம் என்பதால் தேசிய கைத்தறி தினமான வரும் 7-ம் தேதி முதல் விளம்பர பணிகளை தொடங்க உள்ளனர்.  இதற்காக நாடு முழுக்க வருண், அனுஷ்கா ஜோடி பயணிக்க உள்ளனர். தயாரிப்பாளர் மனீஷ் சர்மா இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கைப் படமான ‘சஞ்சு’ படத்தில் பெண்களை தவறாக சித்தரித்திருப்பதாக, படத்தில் நடித்துள்ள ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Sanju #RanbirKapoor
  பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கை ‘சஞ்சு’ என்ற பெயரில் படமாகி இன்று திரைக்கு வருகிறது. இதில் சஞ்சய்தத் வேடத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ளார். சஞ்சய்தத் தாய் நர்கீஸ் கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா வருகிறார். அனுஷ்கா சர்மாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் மும்பையில் நேற்று நடிகர்-நடிகைகளுக்கு சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டப்பட்டது.

  சஞ்சய் தத்துக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்புகள், போதை பழக்கத்துக்கு அவர் அடிமையானது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தது என்று அவரது வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் இதில் காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியானபோது அதில் சிறைச்சாலையில் கழிவறை நிரம்பி வழிவதுபோன்ற காட்சி இடம்பெற்று இருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது.

  சிறைச்சாலையை தவறாக சித்தரித்து இருப்பதாக தணிக்கை குழுவில் மனு அளிக்கப்பட்டது. இப்போது படத்தில் இன்னொரு சர்ச்சை காட்சி இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சஞ்சய்தத் பல பெண்களுடன் தவறான தொடர்பு வைத்து இருந்ததாகவும் அவர்களை காதலிப்பதாக ஆசைக்கு பயன்படுத்தியதாகவும் காட்சி வைத்துள்ளனர்.  மூத்த நடிகைகள், இளம் நடிகைகள் என்று 350-க்கும் மேற்பட்ட காதலிகள் அவருக்கு இருந்ததாக படத்தில் கூறப்பட்டு உள்ளது. இதற்கு சமூக ஆர்வலர் கவுரவ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். பெண்களுக்கு எதிரான வசனங்கள் படத்தில் உள்ளன. நடத்தைகளை தவறாக சித்தரித்து உள்ளனர்.

  எனவே படத்தில் நடித்துள்ள ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்து இருக்கிறார். #Sanju #RanbirKapoor #AnushkaSharma

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷர்மாவின் மொத்த சொத்த மதிப்பு எவ்வளவு என்பது குறித்து மதிப்பிடப்பட்டுள்ளது. #AnushkaSharma
  இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்த பிறகு அவரது புகழ் மேலும் கூடியது. திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்கிறார். தூய்மை இந்தியா திட்டத்தில் தூதுவராக இருக்கிறார்.

  சமீபத்தில் சொகுசு காரில் பயணித்தபடி சாலையில் குப்பையை வீசியவரை காரிலேயே விரட்டிச்சென்று கண்டித்து கணவர் மூலம் அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டார்.

  இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவின் சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளன. இவருக்கு இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகிகளாக இருக்கும் தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத்துக்கு இணையாக பட வாய்ப்புகள் குவிகின்றன.  ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என்று பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார். விளம்பரங்களிலும் சம்பாதிக்கிறார். ஒரு படத்தில் நடிக்க ரூ.9 கோடி சம்பளம் வாங்குகிறார். இது தென்னிந்திய நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகம். விளம்பர படத்தில் நடிக்க ரூ.4 கோடி வாங்குகிறார்.

  மும்பையில் அனுஷ்கா சர்மா வசிக்கும் வீட்டின் மதிப்பு ரூ.9 கோடி. இந்த வீடு 2014-ல் ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டது. அனுஷ்கா சர்மாவின் தற்போதைய மொத்த சொத்து ரூ.220 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. #AnushkaSharma

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குப்பை கொட்டும் நபரை அனுஷ்கா சர்மா திட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவில் உள்ள நபர் தற்போது கோலி - அனுஷ்கா தம்பதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
  புதுடெல்லி:

  கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது காதல் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் டெல்லியில் வசித்து வருகிறார். சமீபத்தில் கோலியும் அனுஷ்காவும் தங்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை பதிவேற்றி இருந்தனர். அதில் காரில் வந்து குப்பை கொட்டிய இளைஞர் ஒருவரை அனுஷ்கா திட்டுவதாக காட்சி இருந்தது. அவரிடம் ‘‘ஏன் இப்படி குப்பை கொட்டுகிறீர்கள்’’ என்று அனுஷ்கா கோபமாக கேட்டு இருந்தார்.

  இந்த வீடியோவைப் பார்த்து பலரும் அவர்களை பாராட்டினர். இதற்கிடையே, இந்த வீடியோவால் அவர் களுக்கு சிக்கல் 
  ஏற்பட்டுள்ளது. வீடியோவில் அனுஷ்கா திட்டிய வாலிபர் தொழில் அதிபர் ஒருவரின் மகன் அர்ஹான் சிங் என்று தெரியவந்தது.

  அந்த வீடியோவை பார்த்த அர்ஹான் சிங் கோபம் அடைந்தார். தன்னை அனுஷ்கா திட்டும் காட்சியை வெளியிட்டு அவமானப்படுத்தியதாக உணர்ந்தார். இதையடுத்து அவர் தன்னை இருவரும் அவமானப்படுத்தியது ஏன் என்று விளக்கம் கேட்டு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்துள்ளார்.

  இதுபற்றி அர்ஹான் சிங் கூறுகையில், ‘‘என்னைப் பற்றி கோலியும் அனுஷ்காவும் சமூக வலைதளம் மூலமாக பொதுவில் அவமானப் படுத்தி விட்டார்கள். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். கோர்ட்டு தான் இதில் தீர்ப்பளிக்க வேண்டும்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெருவில் குப்பை போடுவதை கண்டித்து கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா ஒருவரை திட்டும் வீடியோவும் அவரது எதிர்பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. #AnushkaSharma
  மும்பை:

  மும்பை தெருவில் விலையுயர்ந்த காரில் சென்ற ஒருவர் ஜன்னல் கண்ணாடி வழியாக பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசுவதை தனது கணவர் கோலியுடன் வேறொரு காரில் செல்லும் அனுஷ்கா சர்மா பார்த்து விடுகிறார்.

  குப்பை வீசிய நபரை கண்டிக்கும் வகையில் திட்டும் அனுஷ்கா, குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுமாறும் அறிவுறுத்துகிறார். இந்த காட்சிகளை அவரது கணவர் விராட் கோலி வீடியோவாக படம் பிடித்து, அந்த 17 வினாடி வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  தனது மனைவியின் சமூக உணர்வையும், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வையும் அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

  இந்த பதிவு வெளியானதும் அனுஷ்காவிடம் திட்டு வாங்கிய நபர் தற்போது எதிர்வினை ஆற்றியுள்ளார். அர்ஹான் சிங் என்னும் அந்நபர் இந்த சம்பவம் தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

  நான் காரில் இருந்து அந்த குப்பையை வேண்டுமென்று தெரிந்தே சாலையில் வீசவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டும் சாலையில் போகும் வழிப்போக்கர்களைப்போல் அனுஷ்கா சர்மா என்னை அநாகரிகமாக திட்டியதை அருகில் இருந்து படம் பிடித்த விராட் கோலி இதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

  எனது கார் கண்ணாடி வழியாக வெளியேறிய குப்பையைவிட விராட் கோலி காரில் இருந்து வந்த அனுஷ்காவின் வசைமொழியும், இதை வீடியோ பதிவாக வெளியிட்ட விராட் கோலியின் செயலும் படுகுப்பையாக உள்ளது என அர்ஹான் சிங் குறிப்பிட்டுள்ளார். #AnushkaSharma #Garbage #viral

  https://twitter.com/imVkohli/status/1007952358310055937
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது மனைவி மற்றும் நடிகையான அனுஷ்கா சர்மா உடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். #AnushkaSharma #ViratKohli

  புதுடெல்லி:

  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் தற்போது பெங்களூருவில் அடுத்த தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

  கிரிக்கெட்டில் எப்போதும் பிசியாக இருக்கும் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் அவர்களின் துறையில் பிசியாக இருந்த போதும், தங்களின் வாழ்க்கைகாகவும் நேரம் செலவிட தவறுவதில்லை.   இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் உடற்பயிற்சி செய்கிறார். அந்த வீடியோவில், என்னைவிட அனுஷ்கா நன்றாக உடற்பயிற்சி செய்வார் என கூறியுள்ளார். மேலும் இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்வது மிகச்சிறப்பானது, என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை கோலி மற்றும் அனுஷ்காவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். #AnushkaSharma #ViratKohli
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo