அட்லீ இயக்கத்தில் தெலுங்கில் அறிமுகமாகும் விராட் மனைவி?

அனுஷ்கா சர்மா அட்லீ இயக்கத்தில் தெலுங்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அட்லீ இயக்கத்தில் தெலுங்கில் அறிமுகமாகும் விராட் மனைவி?
Published on: 

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உறுதியான அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படமாக இது இருக்கும்.

இப்படத்தில் ஏற்கனவே தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அனுஷ்காவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதைதவிர ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாகூர் ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது.

AA22xA6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் அடுத்த மாதம் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.

அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் விராட் கோலியை மணந்தபின் படங்களில் நடிப்பதை தவிர்த்துவருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2022-ல் வெளியான திரிப்தி டிம்ரியின் காலா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com