search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "greeting"

    • மகளிர் அணி பொறுப்பாளர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • சரவணகுமார், பழனிவேல், ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் தகவல் தொழில்நுட்ப அணியின் களப்பணிகள் ஒருங்கிணைப்பாளர்கள், சமூக வலைதள பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் இரா. ஜனகராஜ், மாநில ஆதிதிராவிட நலக்குழு இணைச் செயலாளர் செ.புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலாளர் தயா. இளந்திரையன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வளவனூர் ப. அன்பரசு, துணை அமைப்பாளர்கள் சாம்பசிவம், கிருஷ்ணராஜ், பாலாஜி, சசி ரேகா பிரபு, தொகுதி நிர்வாகிகள் தேவா, குரு ராமலிங்கம், மகாலட்சுமி செந்தில், ரகுபதி, கதிரவன், நாராய ணமூர்த்தி, குமரவேல், மூகாம்பிகை நாராயணன், புளிச்சப்பள்ளம் ராதிகா சித்தானந்தன், கோட்டக்குப்பம் ஜாகிர், திருக்கோயிலூர் தொகுதி விக்னேஷ், ஆசைத்தம்பி பரிமளம், திருநாவுக்கரசு, மேகநாதன், நவீன் குமார், விக்னேஷ், அகமது ஷெரிப், சுப ஸ்ரீ, செல்வகுமார், தேவன், மோகன், ராஜேஷ், சசிகலா கபிரியேல், அபுபக்கர், கோமதி பாஸ்கர், சந்திரசேகர், செல்வகுமார், அருண், வள்ளி ராஜேஷ், முத்தமிழ், இராமு, சுப்புலட்சுமி மணிகண்டன், அரவிந்தன், கபிலன், புஷ்பராஜ், மனோஜ் குமார், மணிகண்டன், பூவராகவன், சரவணன், யுவராஜ், சரவணகுமார், பழனிவேல், ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • ரம்ஜான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.
    • பசும்பொன் பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் நோன்பிருந்து அறநெறியுடன் பிறருக்கு ஈதல் வேண்டும் என்ற அடிப்படையில் நபிகள் நாயகம் போதித்த நன்நெறிகளை கடைபிடித்து ரம்ஜான் பெருநாளை திருநாளாக கொண்டாடி வருகிறார்கள். அனை வருக்கும் எனது சார்பிலும், அ.தி.ம.மு.க. சார்பிலும் ரம்ஜான் வாழ்த்துக்களை உவகையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திராவிட மண்ணில் மத நல்லிணக்கத்தோடு திராவிட இயக்கம் ரம்ஜான் திருநாளை கொண்டாடி வருகிற சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக திகழ்ந்து வருகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்களோடு இணைந்து சமய நல்லிணக்கத்தை பேணிக்காத்து வருவது திராவிட இயக்கங்களின் தலையாய கடமையாகும்.தமிழ் மண்ணில் திராவிட மாடல் அரசை திறம்பட நடத்தி வருகிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்து வருவதோடு குறிப்பாக சிறுபான்மை மக்களான கிறிஸ்துவ, இஸ்லாமிய, பழங்குடி, பட்டியல் இன மக்களை பாதுகாப்பதில் தி.மு.க. அரசு அரணாக, கேடயமாக, பாதுகாப்பு கவசமாக திகழ்ந்து வருகிறது,

    சாதி, சமய மோதல்களை தவிர்த்து ஒன்றுபட்ட திராவிட சமூகமாக சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட, மனிதநேயம் மலர்ந்திட சபதமேற்று ரம்ஜான் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டா டுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முஸ்லிம்களுக்கு தொழுகை விரிப்பை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • ரம்ஜான் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா, ரம்ஜான் பண்டிகையையொட்டி திருப்பரங்குன்றம் பெரியரதவீதியில் உள்ள சிக்கந்தர்தர்ஹா பள்ளி வாசல் நிர்வாகிகளான சீனியர் ஒஜீர்கான், செயலாளர் ஆரிப்கான், துணைச் செயலாளர் மாபூப்பாட்ஷா, ஆகியோர் உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தொழுகை விரிப்புகள் மற்றும் மலைமீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்ஹாவின் புகைப்படத்தை யும் ரம்ஜான் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றியசெயலாளர் நிலையூர்முருகன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கவிஞர் ப.மோகன்தாஸ், கலைப்பிரிவு இணைச்செய லாளர்கள் பாலகிருஷ்ணன், சவுந்தரம், சிறுபான்மை பிரிவு செயலாளர் அக்பர் அலி மற்றும் சாகுல்ஹமிது, இளைஞரணி சேக்முகமது நஜீர், பைசல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • புத்தாண்டே வருக... புதுவாழ்வு தருக...

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கதில் அவர் கூறியிருப்பதாவது,

    அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம். புத்தாண்டே வருக... புதுவாழ்வு தருக... இணையற்ற இளைய ஆற்றல் வெல்க.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆலய மணிகள் ஒலிக்க, உன்னதங்களிலே ஓசானா பாடல் பாடப்பட்ட போது இயேசுநாதர்பிறந்தார்.
    • அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி வழங்கினார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பேராலயம் பூண்டி மாதா பேராலயம். பூலோகம் போற்றும் புதுமைமாதா என்று பக்தர்களால் அழைக்கப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் இயேசுநாதர் பிறந்தது குறிக்கும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

    கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.கிறிஸ்துமஸ் விழா நள்ளிரவு சிறப்பு திருப்பலி 11.45 மணிக்குதொடங்கியது. பேராலய மேடையில் பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் சிறப்பு திருப்பலியில் பங்கு கொண்டனர்.

    .சரியாக 12 மணிக்கு ஆலய மணிகள் ஒலிக்க, உன்னதங்களிலே ஓசானா பாடல் பாடப்பட்ட போது இயேசுநாதர்பிறந்தார் என்பதை அறிவிக்கும் விதமாக பேராலயஅதிபர் சாம்சன் குழந்தை இயேசு சுரூபத்தை உயர்த்தி காண்பித்தார். அதன் பின்னர் குழந்தை இயேசு சுரூபத்தை துணை அதிபர் பெற்று அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை இயேசு சுரூபத்தை வைத்து புனிதம் செய்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இயேசுநாதரின் சிறப்புகளையும் இயேசுநாதர் பிறப்பால் உலகம் பெற்ற நன்மைகளையும் பேராலய அதிபர் சாம்சன் திருப்பலியின் போது எடுத்துக் கூறி அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்து அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

    இன்று கிறிஸ்துமஸ் திருப்பலிகள் காலை, மதியம், மற்றும் பிற்பகலில் நடைபெறுகிறது. இன்று நாள் முழுவதும் பூண்டி மாதா பேராலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து மாதாவை தரிசித்து அருள் தந்தையரிடம் ஆசி பெற்று சென்றனர். விழாவிற்கு விரிவான ஏற்பாடுகள் பேராலய நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தது. திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிற குழந்தைகளை கலெக்டர் அவரது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்தினார்.
    • விழா ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முருகன் செய்திருந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்ற குழந்தைகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவரது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்தினார்.

    இந்த விழாவை அறிவியல் இயக்க மாநில துணை தலைவர் பேராசிரியர் டாக்டர்.சுகுமாரன் தலைமை யேற்று நடத்தினார்.

    முதன்மை கல்வி அலுவலர்சிவக்குமார்மு ன்னிலை வகித்தார்.இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் பள்ளி மாணவிகள் ஆராதனா , அபர்னிகா. பயிற்சி ஆசிரியை பிரியதர்சினி, மற்றும் தலைமை அறங்காவலர் தோழர்.சோமசுந்தரம் தாளாளர் தோழர்.ஜி.பாலசந்திரன், அறங்காவலர் தோழர்.சொக்கலிங்கம், ஆகியோர் பங்கேற்றனர்.

    விழா ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முருகன் செய்திருந்தார்.

    மீலாதுன் நபி விழாவை கொண்டாடும் மகிழ்ச்சியான தருணத்தில் அனைத்து முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை கவர்னர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். #MiladUnNabi
    சென்னை:

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீலாதுன் நபி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    இறை தூதர் முகமது நபியின் பிறந்தநாள் மீலாதுன் நபி விழாவாக கொண்டாடப்படுகிறது. இறைதூதர் மனிதர்களின் மிக உயரிய பண்புகளான ஒழுக்கம், அன்பு, கருணை மற்றும் தர்ம சிந்தனையுடன் திகழ்ந்தார். மீலாதுன் நபி விழாவை கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைத்து முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இறை தூதரின் சிறந்த கொள்கைகளான அன்பு மற்றும் சகிப்பு தன்மையை வியாபித்து நமது வாழ்வை சமூகத்தில் மேம்படுத்துவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MiladUnNabi #TNGovernor #BanwarilalPurohit
    நம் குடும்பங்களில் வளமும், வளர்ச்சியும் பெற்று அனுபவிக்க, நாம் வாழ்வில் புதிய சக்தி தொடங்க, வரப்போகும் விஜயதசமி வழிகாட்ட வேண்டும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். #Ayudhapooja #BanwarilalPurohit #Greeting
    சென்னை:

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தீய சக்திகளை நல்ல சக்திகள் வெற்றி பெற்றதை அடையாளப்படுத்தும் நாளாக ஆயுதபூஜை தமிழ்நாடு முழுவதும் மிகுந்த உவகையோடும், மகிழ்ச்சி பெருக்கோடும் கொண்டாடப்படுகிறது. இந்த மங்களகரமான திருநாளில் தாங்கள் மேற்கொண்டுள்ள தொழிலில் மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற வகையில் இந்த பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    நாம் உண்மையும், நற்பண்புகளும், நேர்மையும் நிலைநிறுத்தி இதுவரை இல்லாத அளவில் நம் குடும்பங்களில் வளமும், வளர்ச்சியும் பெற்று அனுபவிக்க, நாம் வாழ்வில் புதிய சக்தி தொடங்க, வரப்போகும் விஜயதசமி வழிகாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #Ayudhapooja #BanwarilalPurohit #Greeting
    ஆசிரியர் தின விருதுகளைப் பெறும் ஆசிரியர்களுக்கும், பண்பட்ட சமுதாய உணர்வுகளை உருவாக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். #TeachersDay #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திடும் அறிவுசார்ந்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு தி.மு.க. சார்பில் இதயம் நிறைந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமுதாய மறுமலர்ச்சி, சாதி பேதமற்ற சமத்துவ உணர்வு, மத பேதமற்ற மானிட சமுதாயத்தின் மாண்பு அனைத்திற்கும் தேவையானது ஆசிரியர்கள் நடத்தும் கல்விப்புரட்சி என்பதை நானறிவேன்.

    ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வியை வழங்கிட தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, அறிவு மணிகளைக் கோர்த்தெடுத்து வருங்கால தலைமுறையை உருவாக்கும் மாமணிகளாகத் திகழும் தியாக உணர்வுமிக்க ஆசிரியர்களை இந்த நாடே ஓரணியில் நின்று மனமார வாழ்த்துகிறது; மதித்துப் பாராட்டிக் கொண்டிருக்கிறது.

    ஆகவே, அந்த பாராட்டுதலில் தி.மு.க.வும் இணைந்து, இன்றைய தினம் ஆசிரியர் தின விருதுகளைப் பெறும் ஆசிரியர் பெருமக்களை வாழ்த்தி, பண்பட்ட சமுதாய உணர்வுகளை உருவாக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர் சமுதாயத்திற்காக அவர்களின் சீரிய நலன்களுக்காக தி.மு.க. எந்நாளும் துணை நிற்கும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TeachersDay #MKStalin
    நாடு முழுவதும் ஆசிரியர் தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுவை ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #TeachersDay
    புதுச்சேரி:

    நாடுமுழுவதும் ஆசிரியர் தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி புதுவை ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    நற்கல்வி நற்சமுதாயத்தை உருவாக்குகிறது. இதை கருத்தில்கொண்டு புதுவை அரசு ஆண்டுதோறும் 15 சதவீதத்திற்கும் அதிகமாக நிதியை கல்விக்காக செலவு செய்கிறது. ஆசிரியர்கள் வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் உன்னத சேவையை செய்து வருகின்றனர்.

    மாணவர்களின் கல்வித்திறன் மேம்படுத்துவது மட்டுமின்றி அவர்களை நல்வழியில் செம்மைப்படுத்தி மெருகேற்றும் மிக முக்கிய பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளது.

    தலைசிறந்த விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல்கலாம் தன்னை ஒரு ஆசிரியராக நினைவு கூர்வதையே விரும்புவதாக தெரிவித்தது ஆசிரியர் பணியின் மேன்மைக்கு சான்று.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியர் பணியை மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் அனைவரையும் கவுரவித்து நினைவுகூறும் பொருட்டு செப்டம்பர் 5-ம் நாள் முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இந்நன்னாளில் ஆசிரியர் சமுதாயம் எல்லா வளமும் பெற உளமாற வாழ்த்துகிறேன். ஆசிரியர் பணி என்றென்றும் சிறக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TeachersDay
    தி.மு.க. தலைவராக தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அண்ணா திராவிட கழக பொதுச்செயலாளர் திவாகரன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். #MKStalin #Dhivakaran

    சென்னை:

    அண்ணா திராவிட கழக பொதுச்செயலாளர் திவாகரன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  திராவிட முன்னேற்ற கழகத்தின் 50 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது தலைவராக தேர்வாகியுள்ள மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.

    கட்சியின் வளர்ச்சியில் அடிமட்ட தொண்டனாக தனது பாதையை தொடங்கி படிப்படியாக வளர்ந்து இன்று தலைவராக வளர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    அவர் திராவிட இயக்கத்தின் வளர்ச்சி பாதைக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். #MKStalin #Dhivakaran

    தி.மு.க. தலைவராக தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Vijayakanth #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதற்கு தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் பாதையில் ஸ்டாலினும் பயணித்து திராவிட முன்னேற்ற கழகத்தை சீரும், சிறப்புமாக அந்த தலைவர்கள் வழியில் வழி நடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் தேர்ந்தெடுத்தமைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தாங்கள் இயக்கத்திற்கு பெருமையையும், புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் அது பாராட்டுக்குறியது. அவர் நாளைய தமிழகம் தலை நிமிர்ந்து நிற்க வழிவகை செய்ய உறுதுணையாக இருப்பார்.

    தமிழர்களின் கனவு நனவாகும் காலம் விரைவாக நெருங்கி கொண்டே இருக்கிறது. தி.மு.க.விற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் தலைமை தாங்க வாருங்கள் என வேண்டி விரும்பி பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் அழைக்கின்றேன்.

    தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம்:-

    திராவிட பாரம்பரியத்தில் உதித்த புதிய சூரியனே, தளபதியாய் வீற்றிருந்தது செயல் தலைவராய் பணியாற்றி இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான மு.க.ஸ்டாலினை விஜிபி குடும்பத்தின் சார்பில் வாழ்த்தி பெருமையடைகின்றோம்.

    தந்தை கலைஞர் வழியில் நின்று தடம் புரளாமல் தடைகளையும், கரடு முரடான பாதைகளையும் மிசா கொடுமையை அனுபவித்து, காவல் தெய்வம் முத்தமிழ் அறிஞரின் வாரிசாக தேர்வு செய்யப்பட்டு மக்களுக்கு மிகச் சிறந்த சேவையை செய்ய வேண்டுமென எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #DMK #MKStalin #Vijayakanth
    ×