முஸ்லிம்களுக்கு தொழுகை விரிப்பு

முஸ்லிம்களுக்கு தொழுகை விரிப்பை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார். ரம்ஜான் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., முஸ்லிம்களுக்கு தொழுகை விரிப்புகளை வழங்கினார். 
ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., முஸ்லிம்களுக்கு தொழுகை விரிப்புகளை வழங்கினார். 
Published on

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா, ரம்ஜான் பண்டிகையையொட்டி திருப்பரங்குன்றம் பெரியரதவீதியில் உள்ள சிக்கந்தர்தர்ஹா பள்ளி வாசல் நிர்வாகிகளான சீனியர் ஒஜீர்கான், செயலாளர் ஆரிப்கான், துணைச் செயலாளர் மாபூப்பாட்ஷா, ஆகியோர் உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தொழுகை விரிப்புகள் மற்றும் மலைமீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்ஹாவின் புகைப்படத்தை யும் ரம்ஜான் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றியசெயலாளர் நிலையூர்முருகன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கவிஞர் ப.மோகன்தாஸ், கலைப்பிரிவு இணைச்செய லாளர்கள் பாலகிருஷ்ணன், சவுந்தரம், சிறுபான்மை பிரிவு செயலாளர் அக்பர் அலி மற்றும் சாகுல்ஹமிது, இளைஞரணி சேக்முகமது நஜீர், பைசல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com