என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "stalin"
- இன்றைய இளைஞர்கள் வேறு விதமான நபர்களை வீரர்கள் என நினைத்து கொண்டிருக்கின்றனர்.
- அரை நூற்றாண்டாக தி.மு.க.வினர் கடிதம் மட்டும்தான் எழுதுகின்றனர்.
சென்னை:
வீரன் அழகுமுத்துக் கோன் சிலைக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அவர் நெஞ்சுக்கு நேராக பீரங்கிகள் வைத்து போரிட்ட போதும் தையரிமாக எதிர் கொண்டவர்.
இன்றைக்கு விசாரணை என்று அணுகியவுடன் ஒருவருக்கு நெஞ்சுவலி வந்து விட்டது. அவரை போல் அழகு முத்துக்கோன் இல்லை.
இன்றைய இளைஞர்கள் வேறு விதமான நபர்களை வீரர்கள் என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவரை போல் உள்ளவர்கள் தான் வீரர்கள்.
புதுச்சேரியில் கியாஸ் சிலிண்டர் மானியமாக ரூ.300 கொடுக்க உள்ளதாக அரசாணை வெளியாகிவிட்டது. ஆனால் தமிழகத்தில் ரூ.100 கொடுக்க உள்ளதாக கூறினார்கள்.
இன்னும் அதைபற்றி சத்தம் எதுவும் இல்லை. இத்தனை வருடம் ஆட்சிக்கு வந்த பிறகும் இவர்கள் திட்டங்கள் மட்டும்தான் அறிவித்திருக்கின்றனர்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து உதவி தொகை விடுப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும்.
இங்குள்ள நிலைமையை எடுத்து சொல்ல கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. இதே போல 50 வருடங்களுக்கு முன்பாக கலைஞர் கருணாநிதி கவர்னர் வேண்டாம் என கடிதம் எழுதினார். அரை நூற்றாண்டாக தி.மு.க.வினர் கடிதம் மட்டும்தான் எழுதுகின்றனர்.
கவர்னருக்கு அரசியல் சாசனத்தின் கீழ் கருத்து சொல்ல அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது நடவடிக்கை பிடிக்காவிட்டால் கருத்துக்கள் சொல்லலாம்.
ஆனால் ஒவ்வொரு நிகழ்விலும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது சிறிதளவும் நியாயம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சீனுராமசாமி.
- இவர் இயக்கிய ’மாமனிதன்’ திரைப்படம் பல விருதுகளை பெற்றது.
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விருதுகளை குவித்தது.
இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், "தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள், சினிமா மற்றும் தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை தடை விதித்தல் செய்திட மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள்
— Seenu Ramasamy (@seenuramasamy) June 23, 2023
சினிமா &
தனி இசை பாடல்கள்
எதுவாயினும்
அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில்
ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை +தடை…
- உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விஷயம் கிசுகிசுவாக பேசப்பட்டது.
சென்னை:
தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வான 1½ வருடத்தில் கடந்த டிசம்பர் 14-ந் தேதி அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரானார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அவரை தலைவராக கட்சி நிர்வாகிகள் பார்க்கிறார்கள். 'சின்னவர்' என்று பவ்யமாக அழைக்கின்றனர்.
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மூத்த கட்சி நிர்வாகிகளின் துணையின்றி டெல்லி சென்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவிட்டு வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது அரசியலில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க தொடங்கியது.
சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து சம்பவங்களை பார்வையிட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் சென்றிருந்தனர். இதிலும் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கு உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிக்கும் சென்று பிரசாரம் செய்ய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் அவரது உழைப்புக்காக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.
ஆனால் இப்போது திடீரென அவருக்கு முன்கூட்டியே துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுவிடும் என்று பேசப்படுகிறது.
சில நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விஷயம் கிசுகிசுவாக பேசப்பட்டது.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி இப்போதே கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- மத்திய அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியும் தெலுங்கானா வளர்ச்சி அடையாமல் இருக்க காரணம் முதல்வரின் செயல்பாடுதான் என்று விளாசினார்.
- சந்திரசேகரராவுக்கு தி.மு.க. மீது லேசாகவாது சந்தேக கோடு விழ வைக்கலாம்.
அரசியல்வாதிகள் என்றாலே அதிரடி, பல்டி, அந்தர்பல்டி... என்று களத்தில் எந்த பக்கம் நின்றாலும் எப்படியும் அடித்து ஆடக்கூடியவர்கள்.
அப்படி இருக்கும் போது ஒட்டுமொத்தமாக இந்திய அரசியல் களத்தில் விளையாடும் மோடியின் அரசியல் கில்லாடித் தனத்தை சாதாரணமாக எடைபோட்டு விட முடியுமா...?
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தெலுங்கானா மற்றும் தமிழ் நாட்டில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பிரதமர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் அந்த அந்த மாநில முதலமைச்சர் கலந்துகொள்வது மரபு. ஆனால் தெலுங்கானாவில் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் அந்த மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை.
இதை பிரதமர் மோடி தனக்கே உரிய பாணியில் வெளுத்து வாங்கினார். அதாவது அரசு வேறு அரசியல் வேறு. இப்படி ஒரு முதல்வர் அரசு திட்டங்களையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் எப்படி மாநிலம் வளரும்.
மத்திய அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியும் தெலுங்கானா வளர்ச்சி அடையாமல் இருக்க காரணம் முதல்வரின் செயல்பாடுதான் என்று விளாசினார். அங்கிருந்து சென்னைக்கு வந்த மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார். வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்க செல்லும் இடத்துக்கு செல்ல 2 பேட்டரி கார்கள் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன.
அதில் ஒரு காரில் முதல்வர், கவர்னர், அமைச்சர்கள் ஏறியிருந்தனர். ஒரு கார் மோடி ஏறுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் மோடியோ தனது காருக்கு வரும்படி மு.க.ஸ்டாலினையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். கொடி அசைத்தபோதும் மு.க.ஸ்டாலினை தன் அருகில் நிற்க வைத்து கொண்டார்.
இதன்மூலம் அரசியலில் இருவரும் மோடியின் எதிரிகளாக இருந்தாலும் சந்திரசேகரராவை விட மு.க.ஸ்டாலின் மக்கள் நலனுக்காக பாடுபடுகிறார் என்று உணர வைத்து மக்கள் மத்தியில் சந்திரசேகரராவின் செல்வாக்கை சாய்ப்பதற்கான யுக்தி ஒன்று.
இன்னொரு விதத்தில் பார்த்தால் சந்திரசேகர ராவ் அமைக்கும் கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினும் செல்வார் என்று எதிர் பார்க்கும் நிலையில் தன்னுடன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொண்டால் சந்திரசேகரராவுக்கு தி.மு.க. மீது லேசாகவாது சந்தேக கோடு விழ வைக்கலாம்.
மூன்றாவதாக என்ன தான் தி.மு.க. மோடியை வசை பாடினாலும் அவரது பெருந்தன்மையை பார் என்று தமிழக மக்கள் யோசிப்பார்கள். அதன் மூலம் மோடியின் இமேஜ் வளரவும் வாய்ப்பு உண்டு.
அதாவது ஒரே கல்லில் இரண்டுக்கும் மேற்பட்ட மாங்காய்களை மோடி வீழ்த்தி இருக்கிறார். அரசியலில் மோடி கில்லாடி தான்.
+2
- அரசு மனநலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
- ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம்- சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினையும் வெளியிட்டார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ.22.84 கோடி மதிப்பீட்டில் 75 அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட புதிய அவசரகால ஊர்திகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்து, அவசரகால ஊர்திகளை பார்வையிட்டு, வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு 'மன நல நல்லாதரவு மன்றங்கள்' அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மனநல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மனநலத் துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி, உடனடியாக மன நல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகை யில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று, 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பள்ளி மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் 'மனநல நல்லாதாரவு மன்றங்கள் (மனம்)" மற்றும் "நட்புடன் உங்களோடு மனநல சேவை (14416)" ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் முதல் கட்டமாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் விரி வுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை அரசு மனநலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
அனைத்து வகையான மனநல சேவைகளையும் ஓரிடத்தில் வழங்கும் வகையில், ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மனநலக் காப்பகம் தரம் உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு மனநலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனமாக தொடங்கப்பட உள்ளது. இங்கு மனநல சேவையுடன் கூடுதலாக நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளும் வழங்கப்பட உள்ளது.
மாநிலத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் மனநல ஆலோசனை பெற, தொலை மருத்துவத்திற்கான மின்னணு மையம் உருவாக்கப்படும். இந்த ஒப்புயர்வு மையத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், மனநல உளவியல் மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் மனநலப் பயிற்சி பெறும் வசதிகள் ஏற்படுத்தப்படும். மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையத்திற்கு 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டிடத்தின் முப்பரிமாண வரைபடத்தை முதலமைச்சர் வெளியிட்டார். ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம் சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினையும் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் வெற்றியழகன், தாயகம் கவி, மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- டாக்டர் மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
- என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராகவும், என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர் என்று முதலமைச்சர் கூறினார்.
சென்னை:
தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளரும், தமிழக சிறுபான்மை வாரிய துணைத் தலைவருமான முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் நேற்றிரவு சென்னையில் இருந்து காரில் கூடுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தார். அவரது உறவினர் காரை ஓட்டிச் சென்றதாக தெரிகிறது.
அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், நெஞ்சு வலி ஏற்பட்டு வலிப்பு வந்ததாக கூறி அவரை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அதற்குள் மஸ்தான் பரிதாபமாக இறந்துவிட்டார்.
அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிய வந்ததால் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
டாக்டர் மஸ்தான் உடல் திருவல்லிக்கேணி பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப் பட்டது.
தகவல் அறிந்ததும் தி.மு.க. நிர்வாகிகள் விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு உள்பட ஏராளமானோர் மஸ்தான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
டாக்டர் மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மஸ்தான் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பயணித்து வந்த டாக்டர் மஸ்தான் என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளராக - அந்த அணியின் பணி சிறக்க தன்னை முழு மூச்சாக அர்ப்பணித்துக் கொண்டவர். இப்தார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து மிகச் சிறப்புற நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே.
சிறுபான்மையினர் நலன் மட்டுமின்றி, அனைத்துச் சமுதாய நலனிற்காகவும் முன்னின்று செயலாற்றும் ஒப்பற்ற ஒரு களப்பணியாளரை இன்றைக்கு நான் இழந்து தவிக்கிறேன்.
அண்ணா அறிவாலயம் செல்கின்ற நேரங்களில் எல்லாம் அங்கே நின்று என்னை இன்முகத்துடன் வரவேற்கும் அவர் சில நாட்களுக்கு முன்புதான் என்னை இல்லத்தில் நேரில் சந்தித்து தனது மகனின் நிச்சயதார்த்தத்திற்கு அன்போடு அழைத்தார். மனித நேயராக, சமூக சேவகராக - தீவிர கழகத் தொண்டராக பணியாற்றிய டாக்டர் மஸ்தானின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - கழகத்தினருக்கும் - சிறு பான்மையினச் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அனுதாபத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.
- இவரின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

செல்வராகவனை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், செல்வராகவன் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள இயக்குனர் செல்வராகவன் "மாண்புமிகு முதல்வர் எங்கள் குடும்பத்தை சந்தித்தபோது... என்ன ஒரு சிறப்பான சந்திப்பு" என குறிப்பிட்டுள்ளார்.
When honourable C.M visited our family 😍😍 what a special meeting 🙏🏼🙏🏼 pic.twitter.com/kuLKoLD7k8
— selvaraghavan (@selvaraghavan) September 26, 2022
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
- பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம்.
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

பொன்னியின் செல்வன்
முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன்
இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "பொன்னியின் செல்வன் -1" திரைப்பட விழா வருகிற செப்டம்பர் 6-ந் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாகவும் அதில் படத்தின் டிரைலரை வெளியிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கிறது.
- இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 2.500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த விளம்பரத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான், அதிதீ சங்கர் என பலர் நடித்திருக்கும் இந்த டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#ChessChennai2022@chennaichess22 pic.twitter.com/7LoD3dmSNJ
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 15, 2022