என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரூர் துயர சம்பவம்: நிலைமை குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் போனில் விசாரித்த ராகுல் காந்தி
    X

    கரூர் துயர சம்பவம்: நிலைமை குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் போனில் விசாரித்த ராகுல் காந்தி

    • தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மொத்தமாக ரூ.1 கோடி இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி நேற்றிரவு இரங்கல் தெரிவித்திருந்தார்.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

    பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மொத்தமாக ரூ.1 கோடி இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கரூர் சம்பவ நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

    இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ராகுலுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவில், "கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு நன்றி!" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி நேற்றிரவு இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×