search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SeenuRamasamy"

    • இயக்குனர் சீனுராமசாமி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது வெளியாக தயாராகி உள்ளது.


    இதைத்தொடர்ந்து இயக்குனர் சீனுராமசாமி 'கோழிப் பண்ணை செல்லதுரை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி முன்னாள் நடிகரும் தற்போதைய அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இன்று தேனி கோடாங்கிபட்டியில் எனது இயக்கத்தில் கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பூத்திருந்த தூதுவளை சிறு மலரால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைய தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்துகிறேன். அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.


    • சீனு ராமசாமியுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று நடிகை மனீஷா தெரிவித்துள்ளார்.
    • என்னை மரியாதை குறைவாக நடத்திய ஒருவருடன் நான் ஏன் பணியாற்ற வேண்டும்?

    திரையுலகில் நடிகைகள் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை எதிர்கொண்டது பற்றி பல பிரபலங்கள் வெளிப்படையாக கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர், தமிழ் சினிமா இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டினார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகை மனிஷா யாதவ் தனக்கு நன்றி தெரிவித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட இயக்குனர் சீனு ராமசாமி, மனிஷா யாதவ் தன் படத்தில் நடிப்பார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதையடுத்து நடிகை மனிஷா யாதவ் இனி சீனு ராமசாமியுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "சீனு ராமசாமியின் படத்தில் நான் நடிக்கிறேனா? இதனை இப்போது தான் முதல் முறையாக கேட்கிறேன். விழா மேடையில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தை போன்று தான் அவருக்கும் நான் நன்றி தெரிவித்தேன். இது எதையும் மாற்றிவிடாது.


    ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறிய கருத்தில் இன்றும் உறுதியாகவே இருக்கிறேன். என்னை மரியாதை குறைவாக நடத்திய ஒருவருடன் நான் ஏன் பணியாற்ற வேண்டும்? சீனு ராமசாமி சார், நீங்கள் கூறும் கருத்துகளில் உண்மை இருப்பதை உறுதிப்படுத்துக் கொள்ளுங்கள்," என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி நடிகை மனிஷாவிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "சில கேள்விகள் flash back

    1) இடம் பொருள் ஏவல்

    படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள்

    ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மணிஷா,

    2) படப்பிடிப்பு தளத்தில்

    உதவிட வந்த மூத்த நடிகையர் வடிவுக்கரசி அவர்களிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே ஏன்?

    3) விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பீலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது

    ஏன் மறுத்தார் ?

    4) என் சம்பளத்தில் ஒரு

    லட்சம் நஷ்ட ஈடாக பெற்றாரே ஏன்..?

    5) மூன்று நாட்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தந்த ஹோட்டலில்

    தன் தயாருடன் தங்கிருந்த மனிஷா அவர்களை கடைசி

    ஒரு நாள் காலையில் படப்பிடிப்பில் சந்தித்தேன்.

    6) அந்த 28 டேக் மேக்கிங் வீடியோவுக்கு காத்திருக்கிறேன்.

    தெய்வம் அருளனும்

    இருப்பினும் உங்களோடு திரும்ப பணி புரிய விரும்பினேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் சீனுராமசாமி பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான 'மாமனிதன்' திரைப்படம் இன்று வரை பல விருதுகளை குவித்து வருகிறது.


    இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி நீட் தேர்வு தேவையா என பரிசீலிக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் "சகோதரர் அண்ணாமலைக்கு வணக்கம். அரசின் திட்டங்கள் எல்லாமே வெற்றி பெறுவதில்லை, சில திரும்ப பெறப்பட்டுள்ளன. நடைமுறையில் நீட் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆகவே பொதுக்

    கருத்துக்கணிப்பு எடுத்து நீட் தேர்வு தேவையா என பரிசீலிக்க கலைஞனாக வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.




    • தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சீனுராமசாமி.
    • இவர் இயக்கிய ’மாமனிதன்’ திரைப்படம் பல விருதுகளை பெற்றது.

    கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'.


    இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விருதுகளை குவித்தது.

    இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், "தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள், சினிமா மற்றும் தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை தடை விதித்தல் செய்திட மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.



    • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாமனிதன்’.
    • இப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர்.


    மாமனிதன்

    யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 'மாமனிதன்' திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்வதேச விருதுகளை குவித்தது. மேலும், பல திரைப்பிரபலங்களும் இப்படத்தை பார்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.


    மாமனிதன்

    இந்நிலையில், 'மாமனிதன்' திரைப்படத்தை ரஷ்ய அரசாங்கம் திரையிடவுள்ளது. அதாவது, ரஷ்யாவின் 45-வது மாஸ்கோ சர்வதே திரைப்பட விழா வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதியிலிருந்து 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் உலக சினிமா பிரிவில் 'மாமனிதன்' திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இதற்கான அழைப்பிதழை மாஸ்கோ சர்வதே திரைப்பட குழு தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குனர் சீனுராமசாமிக்கு அனுப்பியுள்ளனர். இதனை சீனுராமசாமி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


    • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நீர்ப்பறவை’.
    • இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

    இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நீர்ப்பறவை'. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார். மேலும், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.


    நீர்ப்பறவை

    இந்நிலையில், இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் சீனுராமசாமி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "நீர்ப்பறவை பாகம் இரண்டு தொடங்கப்படும், நீர்ப்பறவை அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடுகட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைப்பெருமக்களுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.


    நீர்ப்பறவை

    சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் பல திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது.

    இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.


    மாமனிதன்

    இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்துள்ளது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 'மாமனிதன்' திரைப்படத்தை இயக்குனர் சீனுராமசாமியுடன் இணைந்து பார்த்துள்ளார்.


    மாமனிதன் திரைப்படம் பார்த்த எல். முருகன்

    இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் மாமனிதன்..! இப்படத்துக்கு சர்வதேச விருதுகள் மற்றும் மக்கள் அளித்த வெற்றி என உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் இது போன்ற படைப்புகளை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.



    • இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'மாமனிதன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
    • இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    2007-ஆம் ஆண்டு வெளியான 'கூடல் நகர்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதைத்தொடர்ந்து, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், தனது இரண்டாவது படத்தில் தேசிய விருது வென்று சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றார்.


    சீனுராமசாமி

    இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான 'மாமனிதன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இயக்குனர் சீனுராமசாமி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பிறந்தநாள் பரிசாக அவரது மனைவி இவரின் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கி கொடுத்துள்ளார். இதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.

    இது குறித்து சீனுராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் "அனைவருக்கும் அன்பான வணக்கம் எழுதுவது சீனுராமசாமி. எனக்கு ஆச்சர்ய பரிசு தர இது நாள்வரை நான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து எனக்குத் தெரியாமல் நூலாக்கி 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை' என அந்நூலுக்கு என் கவிதையையே தலைப்பிட்டு பிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர்.


    சீனுராமசாமி

    இந்நூலுக்கு வாழ்த்துமடல் மாண்புமிகு நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கணவனுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை தொகுப்பிற்கு ஊக்கமளித்து பாராட்டி ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா? அல்லது என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயப்பூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை.

    அய்யா? என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதல்வரின் கனிந்த இதயத்திற்கு முன் வணங்கி நிற்கிறேன். மேலும் அணிந்துரை தந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.. கவிஞரும் தன் பங்களிப்பாக ஆயிரம் மலர்களை சொற்களாக்கி சூடிவிட்டார்.


    சீனுராமசாமி பதிவு

    உங்கள் கருத்த கைகளை முத்தமிடுகிறேன் கவிஞரே.. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அம்மா எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய சீனாஜான்சன் என் வாழ்நாளில் சிறப்பான நினைவு பரிசினை தந்த உங்களுக்கு இதய நன்றிகள்.

    நூலினை வீட்டிற்கே வந்து வெளியிட்டவர் நடிகர் மோகன் அவர்கள் அதுவும் தீடீரென்று.. என் காதலுக்குரியவர் அவர் மோகன் சாருக்கு இதய நன்றிகள். ஆச்சர்யம் அதிர்ச்சியாயிற்று. திக்குமுக்காடிப்போனேன். வாழ்த்திய அனைவருக்கும் அன்பு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை வென்றது.
    • இவரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

    2007-ஆம் ஆண்டு வெளியான 'கூடல் நகர்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதைத்தொடர்ந்து, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், தனது இரண்டாவது படத்தில் தேசிய விருது வென்று சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றார்.


    சீனுராமசாமி

    இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான 'மாமனிதன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றது. இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் இயக்குனர் சீனுராமசாமிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    மாதம்பட்டி ரங்கராஜ்

    அந்த வகையில் 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், சீனுராமசாமிக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சீனுராமசாயின் அடுத்த படத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் 'மெஹந்தி சர்க்கஸ்' போலவே இப்படமும் ஒரு அழகான காதல் கதையாக இருக்கும் எனவும் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.   

    • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாமனிதன்.
    • மாமனிதன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "மாமனிதன்".


    மாமனிதன்

    இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

    இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் டோக்கியோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் எனும் கோல்டன் விருதினையும் தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் மூன்று விருதுகளையும் பெற்றது.


    மாமனிதன் படக்குழு

    இந்நிலையில், "மாமனிதன்" திரைப்படம் மீண்டும் ஒரு விருதினை பெற்றுள்ளது. அதன்படி, 16-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் விருது பெற்றுள்ளது. மேலும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் இயக்குனர் சீனுராமசாமி பகிர்ந்துள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • விருமன் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    விருமன்

    யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (03-08-2022) மதுரையில் நடைபெற்றது. விருமன் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி விருமன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு கை எழுதுக்கு மறுகை நிலத்துக்கு, இளையோன் வயித்துக்கு மூத்தவர் அறிவுக்கு, இருவரும் தமிழர் வாழ்விற்கு.. விருமனுக்கும் விருதுகளுக்கும் வாழ்த்துக்கள்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

    பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக வெற்றி கூட்டணியில் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார். #VijaySethupathi
    விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘96’ திரைப்படம் வெற்றிகரமா திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை அடுத்து இவரது நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட பல படங்கள் உருவாகி அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், அடுத்ததாக சீனுராமசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்க இருக்கிறார். மேலும் யுவன் சங்கர் ராஜாவுடன் இளையராஜாவும் இணைந்து இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. 



    ஏற்கனவே சீனுராமசாமி, விஜய் சேதுபதி, யுவன் கூட்டணியில் ‘தர்மதுரை’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. 
    ×