search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்தி"

    • விவசாயிகளுக்கும் உதவிகளை செய்து வருகிறார்.
    • இந்த மருத்துவமனைக்கு நடிகர் கார்த்தி சென்று வந்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் கார்த்தி. தொடர்ச்சியாக வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வரும் கார்த்தி பல்வேறு சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். மேலும் விவசாயிகளுக்கும் உதவிகளை செய்து வருகிறார்.

    சமீபத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான மெய்யழகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ஜீவன் அறக்கட்டளை நடத்தும் மயோபதி மருத்துவமனையின் குழந்தைகளின் அவசர தேவையை அறிந்து படுக்கை வசதிகளை நடிகர் கார்த்தி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். கொம்பன் திரைப்பட படப்பிடிப்பு சமயங்கள் மற்றும் பல முறை இந்த மருத்துவமனைக்கு நடிகர் கார்த்தி சென்று வந்துள்ளார்.

     


    அப்படியாக மருத்துவமனை குழந்தைகளுக்கு தேவை என்ற தகவல் கிடைத்ததும், நடிகர் கார்த்தி குழந்தைகள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 35 படுக்கைகளை வாங்கி கொடுத்துள்ளார். இதற்கு மயோபதி மருத்துவமனையின் மருத்துவர் டேனியல் மற்றும் குழந்தைகள் நடிகர் கார்த்திக்கு நன்றி தெரிவித்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருக்கிறது.
    • படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கிறார்.

    இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' படத்தில் முன்னணி நடிகரான கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி செட்டி, ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி. எம். சுந்தர், ரமேஷ் திலக், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    வா வாத்தியார் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருக்கிறது.

    சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கிறார். இப்படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரைக்குக் கொண்டு வர உள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இந்நிலையில் இந்த படத்தில் வித்தியாசமான வில்லனாக சத்யராஜ் நடதுள்ளார். மேலும் அவர் இரண்டு ரோல்களில் நடித்திருக்கிறார். டீசரில் ஒரு கெட்டப்தான் காண்பிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

    • சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
    • நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நடிகர் கார்த்தி இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் 'மெய்யழகன்' படத்தில் நடித்திருந்தார். தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2' திரைப்படத்திலும் நடித்து வருகிறார் கார்த்தி. இவர் அடுத்ததாக 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்தியின் 26வது படமான இந்த படத்திற்கு 'வா வாத்தியார்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரேட் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரைக்குக் கொண்டு வர உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், கார்த்தி நடித்த 'வா வாத்தியார்' படத்தின் டீசர் இன்று வெளியானது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
    • நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நடிகர் கார்த்தி இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் 'மெய்யழகன்' படத்தில் நடித்திருந்தார். தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2' திரைப்படத்திலும் நடித்து வருகிறார் கார்த்தி. இவர் அடுத்ததாக 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்தியின் 26வது படமான இந்த படத்திற்கு 'வா வாத்தியார்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரேட் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



    இப்படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரைக்குக் கொண்டு வர உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

    இந்த நிவையில், கார்த்தி நடித்த 'வா வாத்தியார்' படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

    'வா வாத்தியார்' படத்தின் டீசரை நாளை கங்குவா வெளியாகும் திரையரங்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
    • சில விமர்சனங்களை சந்தித்ததை தொடர்ந்து சில காட்சிகள் கட் செய்யப்பட்டது.

    '96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இளைவெளிக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கியுள்ளார். இது கார்த்தியின் 27-வது படமாகும். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



    இந்த நிலையில், 'மெய்யழகன்' திரைப்படம் வருகிற 27-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு சில விமர்சனங்களை சந்தித்ததை தொடர்ந்து சில காட்சிகள் கட் செய்யப்பட்டது.

    தற்போது ஓடிடி தளத்தில் கட் செய்யப்படாத காட்சிகளுடன் முழுமையாக படம் வெளியாக உள்ளது.

    முன்னதாக இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வருகிற 25-ந்தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது ௨ நாட்கள் கழித்து ஓடிடி தளத்தில் வெளியாகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த வாரம் பிளாக் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • நாயகனாக ஜீவா நடித்துள்ளார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

    மாநகரம், மான்ஸ்டர், டானாக்காரன், இறுகப்பற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் அடுத்ததாக ஜீவா நடித்துள்ள பிளாக் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். டைம் லூப் திரைப்படமாக இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

    கடந்த வாரம் பிளாக் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியுள்ளார். இதில் நாயகனாக ஜீவா நடித்துள்ளார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் கார்த்தி படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் " வாழ்த்துக்கள் ஜீவா ப்ரோ. ப்ளாக் திரைப்படம் முழுவதுமாகவே பார்ப்பவர்களை த்ரில்லிங்கான அனுபவத்தை அடிக்கடி கொடுத்த வண்ணம் இருந்தது. மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். ஒரு பெரிய அறிவுசார்ந்த விஷயத்தை மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் அமைத்ததற்கு பாராட்டுகள்" என பதிவிட்டுள்ளார்.

    நீண்ட நாளுக்கு பிறகு ஜீவாவுக்கு ஒரு கம் பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்திற்கு பிறகு பிரியா பவானி சங்கருக்கு மேலும் ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மெய்யழகன் படத்தின் இரண்டாம் பாதி சற்று நீளமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.
    • மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை

    96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் படத்தின் இரண்டாம் பாதி சற்று நீளமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.

    இந்நிலையில்தான் இப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பிரேம் குமார் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பால் உருவான மெய்யழகனுக்கு பேரன்பை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. திரைமொழியின் வழக்கமான பாணியில் இருந்து விலகிய ஒரு திரை அனுபவத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி. ஏராளமான அனுபவ பகிர்வுகள் இந்த படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன. மெய்யழகனை உணர்ந்து புரிந்துகொண்ட பெரும்பாலானோரின் அன்பும், ரசனையும் பிரமிக்க வைக்கின்றன.

    படத்தின் நீளம் குறித்து மட்டும் சில அக்கறை குரல்கள் வெளிப்பட்டு வந்த நிலையில், ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது. எல்லோரது திருப்தியும் எனக்கு முக்கியம். அதுவே மெய்யழகனின் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நான் செய்யும் கைம்மாறு.

    எனவே இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை" என தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன்.
    • படத்தை பார்த்த நடிகர் நாகர்ஜுனா படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது.96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் நாகர்ஜுன்  படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் " அன்புள்ள தம்பி கார்த்தி, உங்கள் படமான மெய்யழகன் திரைப்படத்தை பார்த்தேன். நீங்களும் அரவிந்த் சாமி இருவரும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாய். இப்படம் பார்க்கும் பொழுது என் முகத்தில் ஒரு புன் சிரிப்பு இருந்துக் கொண்டே இருந்தது. இப்படம் என்னுடைய சிறுவயது நினைவுகளை நினைவுப்படுத்தியது. உன்னுடைய நடித்த தோழா திரைப்பட நியாபகங்கள் வந்தது. முழு படக்குழுக்கும் எனது பாராட்டுகள்." என கூறினார்.

    நாகர்ஜூனா தற்பொழுது ரஜினிகாந்துடன் கூலி மற்றும் துனுஷுடன் இணைந்து குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லட்டு விவகாரத்தில் பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்க, உடனே நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார்.
    • கார்த்தி பேசியதற்கு பவன் கல்யாண் கோவப்படுவதில் அர்த்தமில்லை என்று சீமான் தெரிவித்தார்.

    திருப்பதி லட்டில் மாட்டுக்கறி கொழுப்பு கலந்த விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதம் இருந்து வருகிறார். கோவிலின் படிக்கட்டுகளை பவன் கல்யாண் சுத்தம் செய்யும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகியது.

    இந்நிலையில் மெய்யழகன் படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அப்போது கார்த்தியின் பிரபல காமெடி காட்சியான கண்ணா லட்டு தின்ன ஆசையா காமெடியின் புகைப்படத்தை திரையில் போட்டு காண்பித்து கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு கார்த்தி, "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் 'என கூறினார்.

    இதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்க, உடனே நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார். இதனையடுத்து நடிகர் கார்த்தியின் மெய்யழகன் படத்திற்கு பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்தார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமானிடம் கார்த்தி - பவன் கல்யாண் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த சீமான் , "கார்த்தியிடம் நெறியாளர் லட்டு பற்றி கேட்டிருக்க கூடாது. ஆனாலும் அந்த கேள்விக்கு கார்த்தி நாகரீகமாக பதில் சொல்கிறார். அவரது பேச்சு யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் இல்லை. இதற்கு பவன் கல்யாண் கோவப்படுவதில் அர்த்தமில்லை.

    உடல் எடையை குறைக்க தான் பவன் கல்யாண் விரதம் இருக்கிறார் என்று அவர் கிண்டலாக தெரிவித்தார். 

    • அனைவரும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம்.
    • இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவே விரும்பினேன்.

    சினிமா சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கார்த்தியின் பிரபல காமெடி காட்சியான கண்ணா லட்டு தின்ன ஆசையா காமெடியின் புகைப்படத்தை திரையில் போட்டு காண்பித்து கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு கார்த்தி, "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் 'என கூறினார்.

    இதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்க, உடனே நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார். இந்த நிலையில், நடிகர் கார்த்திக்கு பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்தார்.



    இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "உங்கள் அன்பான உணர்வையும் விரைவான பதிலையும், எங்கள் மரபுகளுக்கு நீங்கள் காட்டிய மரியாதையை நான் மனதாரப் பாராட்டுகிறேன். திருப்பதி மற்றும் அதன் உயர்வான லட்டுகள் போன்ற நமது புனிதத்தன்மை பற்றிய விஷயங்கள் கோடிக் கணக்கான பக்தர்களின் ஆழ்ந்த உணர்ச்சிகளை கொண்டுள்ளன. மேலும் இதுபோன்ற தலைப்புகளை நாம் அனைவரும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம்."

    "எந்த நோக்கமும் இல்லாமல் இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவே விரும்பினேன். மேலும் நிலைமை தற்செயலாக இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். பொது நபர்களாக நாம் ஒற்றுமை மற்றும் மரியாதையை வளர்ப்பது மற்றும் நமது கலாச்சாரம், ஆன்மீக விஷயங்களுக்கு மரியாதை அளிப்பது நம் பொறுப்பு. சினிமா மூலம் தொடர்ந்து ஊக்கமளிக்கும் அதே வேளையில் இந்த விஷயங்களை உயர்த்த எப்போதும் பாடுபடுவோம்."

    "அர்ப்பணிப்பும் திறமையும் கொண்டு சினிமாவை வளப்படுத்தி வரும் நடிகர்களாக உங்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும், சூர்யாவுக்கும், ஜோதிகா மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் குழுவினர் அனைவருக்கும் மெய்யழகன்/ சத்யம் சுந்தரம் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். இந்தப் படம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • மெய்யழகன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது.
    • இப்படமும் 96 திரைப்படத்தைப்போல் ஓர் இரவில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைந்துள்ளது.

    96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தின் இசை சில வாரங்களுக்கு முன் வெளியானது.

    இப்படமும் 96 திரைப்படத்தைப்போல் ஓர் இரவில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் ஒரு ஃபீல் குட் திரைப்படமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    மெய்யழகன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது. திரைப்படத்தின் நேர அளவு 2 மணிநேரம் 57 நிமிடங்களாகும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • திருப்பதியில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
    • லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம் என்று கார்த்தி கூறியது சர்ச்சையானது.

    கார்த்தி - அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் படம் தெலுங்கு மொழியில் 'சத்யம் சுந்தரம்' என்ற பெயரில் வெளியாகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார்.

    அப்போது கார்த்தியின் பிரபல காமெடி காட்சியான கண்ணா லட்டு தின்ன ஆசையா காமெடியின் புகைப்படத்தை திரையில் போட்டு காண்பித்து கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு கார்த்தி, "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் 'என கிண்டலாக கூறினார்.

    லட்டு குறித்து கார்த்தி கிண்டலாக பேசியதற்கு ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "நான் தற்போது ஒரு சினிமா நிகழ்ச்சியில் பார்த்தேன். லட்டு குறித்து பேசினால் சர்ச்சையாகும் என கூறியுள்ளனர். அவ்வாறு சொல்லக் கூடாது. நான் உங்களை நடிகர்களாக மதிக்கிறேன். ஆனால் சனாதன தர்மத்தை பற்றி பேசும் போது, ஒன்றுக்கு 100 முறை யோசித்து பேச வேண்டும்" என தெரிவித்தார்.

    இதனையடுத்து லட்டு குறித்து பேசியதற்கு கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், "மரியாதைக்குரிய பவன் கல்யாண் அவர்களே, லட்டு குறித்து நான் பேசியதால் ஏற்பட்ட தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். திருப்பதி பெருமாளின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நமது மரபுகளை கடைப்பிடித்து வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியின் போது விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால் ஏழுமலையான் கோவிலில் நேற்று மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×