தளபதி 67 படத்தில் இணைவது உறுதியா? நடிகர் கார்த்தி பேட்டி

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சர்தார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது.
கார்த்தி
கார்த்தி
Published on

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சர்தார்
சர்தார்

சர்தார்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சர்தார் - கார்த்தி
சர்தார் - கார்த்தி

சர்தார் - கார்த்தி

இந்நிலையில் சர்தார் படத்தின் வெற்றியைத் கொண்டாடும் வகையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது 'கைதி 2' எப்பொழுது வரும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அடுத்த வருடம் படத்திற்கான பணிகளை ஆரம்பிக்க உள்ளதாக கார்த்தி தெரிவித்தார்.

கார்த்தி
கார்த்தி

கார்த்தி

மேலும் லோகேஷ் கனகராஜ் தன் முந்தைய படத்தின் கதாபாத்திரங்களை அடுத்த படத்திலும் தொடர்ச்சியாக கொண்டு வருகிறார். அதேபோல் 'தளபதி 67' படத்தில் நீங்கள் இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, "அது தெரியவில்லை. அது எளிதும் கிடையாது. நாம் ஆசைப்படலாம். இரண்டு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் வேறு. அது தயாரிப்பாளர்கள் கையில் தான் இருக்கிறது" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com