என் மலர்

  நீங்கள் தேடியது "Sivakumar"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமாரின் வீடியோ வைரலாகி வருகிறது. #Sivakumar
  சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது. அந்த வீடியோவில் ரசிகர் சிவகுமார் முன்பாக செல்போனை நீட்டியபடி செல்பி எடுக்க முயற்சிப்பதும், அதனை சிவக்குமார் தட்டிவிடும்படியாகவும் அந்த வீடியோ முடிகிறது.

  முன்னதாக மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுத்த இளைஞர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன.   இதையடுத்து அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்திருந்த சிவக்குமார், அந்த இளைஞருக்கு புதிய செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Sivakumar

  ரசிகரின் செல்போனை சிவக்குமார் தட்டிவிடும் வீடியோ:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச தயாராக இருப்பதாக கர்நாடக நீர் பாசன மந்திரி சிவக்குமார் கூறினார். #MekedatuDam #KarnatakaMinister
  பெங்களூர்:

  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் மேலும் ஒரு பிரமாண்ட அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடகா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ரூ.5912 கோடியில் மேகதாது அணையை கட்டி முடிப்பதற்கு வரைவுத் திட்டம் ஒன்றை கர்நாடகா அரசு தயாரித்துள்ளது.

  மேகதாது என்ற இடம் ஒகேனக்கல்லுக்கு முன்பாக சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அது அடர்ந்த காட்டுப் பகுதியாகும். அங்கு இயற்கையாக இரு பக்கங்களிலும் அமைந்துள்ள பிரமாண்ட மலைகளுக்கு மத்தியில் காவிரி ஆறு பொங்கி வருகிறது.

  அந்த இரு பக்க மலையும் சுமார் 1000 அடி உயரம் கொண்டது. ஒற்றைக்கல் என்று அழைக்கப்படும் அந்த மலைகளுக்கு இடையேதான் புதிய அணையை கட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டு விட்டால், தமிழ்நாட்டுக்குள் காவிரி தண்ணீர் சுத்தமாக வராது.

  இத்தகைய அபாயத்தை உணர்ந்து தமிழக மக்கள் மேகதாது திட்டத்துக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் வரைவுத் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 22-ந்தேதி திடீரென ஒப்புதல் வழங்கியது. மின்சாரம் தயாரிக்கவே இந்த அணையை கட்டுவதாக கூறி கர்நாடகா அரசு ஒப்புதலை பெற்றுள்ளது.

  இது தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் வரும் 4-ந்தேதி திருச்சியில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.

  இந்த நிலையில் மேகதாது பகுதியில் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது. மனு மீதான விசாரணை முடியும் வரை மேகதாது அணை தொடர்பான எந்த அடுத்தக்கட்ட பணிகளையும் கர்நாடகா அரசு மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி உள்ளது.

  தமிழக அரசின் நடவடிக்கையால் கர்நாடகா அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழக அரசை சமரசம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் உதவியை நாடவும் கர்நாடக அரசு திட்டமிட்டு இருக்கிறது.

  இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

  மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகா-தமிழ்நாடு சுமூக தீர்வு ஏற்பட மத்திய அரசு உதவ வேண்டும். இரு மாநில அரசுகளும் இது தொடர்பாக பேச மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசுடன் பேச கர்நாடகா தயாராக இருக்கிறது.

  மேகதாது அணை பற்றிய விரிவான திட்ட அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் தயாராகி விடும். அந்த அறிக்கையை தமிழகத்திடம் கொடுக்க விரும்புகிறோம். அதன் அடிப்படையில் இந்த திட்டத்தை பற்றி தமிழக அரசிடம் பேச உள்ளோம். இதற்காக தமிழக அரசிடம் பேச நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

  மத்திய அரசு நீர்வளத் துறை மந்திரியும் இத்தகைய ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து உதவ வேண்டும்.  மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசும், தமிழக அரசும் மோதிக்கொள்ள தேவையில்லை என்று நான் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த திட்டம் பற்றிய விரிவான அறிக்கை வந்ததும் தமிழக அரசு அதை பார்வையிடலாம்.

  இந்த திட்டத்தால் கர்நாடக அரசுக்கு பெரிய அளவில் எந்த லாபமும் இல்லை. தமிழக அரசுக்குதான் உண்மையில் லாபமாக இருக்கும்.

  காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக பருவ மழை பெய்யும்போது ஏராளமான டி.எம்.சி. தண்ணீர் கடலில்தான் வீணாக சென்று கலக்கிறது. அத்தகைய தண்ணீரை இந்த அணையில் சேமித்து வைத்து பயன்படுத்த முடியும்.

  இவ்வாறு கர்நாடக நீர் பாசன மந்திரி சிவக்குமார் கூறினார். #MekedatuDam #KarnatakaMinister


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சிவகுமார், சூர்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone
  தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சூறையாடிய கஜா புயலின் தாக்கம் இன்னமும் நீங்கவில்லை. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கஜா புயலின் கோர தாண்டவத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. வீடு, தொழில்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

  திருத்துறைப்பூண்டி, பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்பட பல ஊர்கள் கடுமையான சேதத்தை சந்தித்திருப்பதால், மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

  கஜா புயலால் வீடுகள், பயிர்கள், மரங்கள், கால்நடைகள், மின்சார கம்பங்கள் என அனைத்து தரப்பிலும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 150 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கிராமங்களில் மக்கள் உணவு, குடிநீரின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  இவ்வாறாக கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பலரும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தொண்டு நிறுவனத்தின் மூலம் ரூ.50 லட்சம் நிதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCycloneRelief #GajaCyclone  #LetsAllJoinHands #prayfordelta #Suriya #Sivakumar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டி விட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக உளமாற நான் வருத்தம் தெரிவித்து கொள்வதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார். #Sivakumar
  மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. எனவே அந்த சம்பவத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில், நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில், வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

  அதில் சிவக்குமார் கூறியிருப்பதாவது,

  `ஆர்வம் மிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் அதை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவக்குமார், செல்போனை தட்டிவிட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக உளமாற நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்'. என்று பேசினார். #Sivakumar

  சிவகுமார் பேசிய வீடியோவை பார்க்க: 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகர் சிவக்குமாருடன் செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை தட்டிவிட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். #Sivakumar
  மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. எனவே அந்த சம்பவத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில், நடிகர் சிவகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த வி‌ஷயம். பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள், பாதுகாப்பிற்கு வரும் ஆட்களைக்கூட ஓரம் தள்ளிவிட்டு 20, 25 பேர் செல்பி எடுத்து நடக்கக்கூட முடியாமல் செய்வது நியாயமா? தங்களை புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீர்களா? வி.ஐ.பி. என்றால், தான் சொல்லும்படிதான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?  ஆயிரக்கணக்கான மக்களுடன் புகைப்படம் எடுத்துள்ளேன். நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப் போல் நானும் ஒரு மனிதன் தான். எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு பின்பற்றுங்கள் என்று கூறவில்லை. அடுத்தவர்களை எந்த அளவுக்கு துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பாருங்கள்.

  இவ்வாறு நடிகர் சிவகுமார் கூறியுள்ளார். #Sivakumar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குட்கா ஊழல் வழக்கில் கைதான சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #GutkhaScam #CBI
  சென்னை:

  தமிழகத்தின் மிக முக்கிய ஊழல் வழக்குகளில் ஒன்றாக பார்க்கப்படும் குட்கா வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர்கள் உட்பட பல முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுவதால் இந்த வழக்கு மிகத்தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

  பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கூறப்படும் இந்த வழக்கில் மாதவராவ் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கடந்த மாதம் சிபிஐ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்.  இதையடுத்து, சமீபத்தில் ஜாமீன் கோரி சிவக்குமார் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு குறித்து சிபிஐ தனது பதிலை சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. அதில் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

  இந்நிலையில், சிபிஐ தரப்பு பதிலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBI
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு என்று நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #Sivakumar #Sabarimala
  சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர்.

  இவர்களை நுழைய விடாமல் தடுக்கும் போராட்டம் வலுத்த நிலையில் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இன்று ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இரு பெண்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

  இது தொடர்பாக நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது. எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர். 

  பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை. தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது. 

  இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்’.

  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். #GutkhaScam
  சென்னை:

  தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தனர். இதற்காக பெரும் தொகை அமைச்சர், டி.ஜி.பி., போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்டோருக்கு லஞ்சம் வழங்கப்பட்டது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

  இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

  இதன் அடிப்படையில், சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த செப்டம்பர் 5ந்தேதி குட்கா கிடங்கு உரிமையாளர்கள், மாதவராவ், சீனிவாசராவ், பங்குதாரர் உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ணன் பாண்டியன் ஆகியோரை முதலில் கைது செய்தனர்.

  பின்னர், கடந்த மாதம் 25-ந்தேதி, திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளரும், முன்னால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியுமான சிவக்குமாரை கைது செய்தனர். பின்னர், இவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த நிலையில், விசாரணை முடிந்து, இன்று காலையில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில், சிவக்குமாரை ஆஜர்படுத்தினர். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். #GutkhaScam
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்லடத்தில் பொன்னி ஆஸ்பத்திரி புதிய கட்டிடத்தை திறந்து வைத்த நடிகர் சிவகுமார், டீ, காபி குடிப்பதை யார் கற்றுத்தந்தது என்று பேசியிருக்கிறார். #Sivakumar
  பல்லடத்தில் உள்ள பொன்னி ஆஸ்பத்திரி தனது மருத்துவ சேவையை மேலும் பல சிறப்பு வசதிகளுடன் விரிவாக்கம் செய்து புதிய கட்டிடத்தை 100 படுக்கைகளுடன் நவீன வசதிகளுடன் அமைத்துள்ளது.

  இதன் திறப்புவிழா நடைபெற்றது பொன்னி ஆஸ்பத்திரி டாக்டர் கே.சிவக் குமார் அனைவரையும் வரவேற்றார். புதிய கட்டி டத்தை நடிகர் சிவகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது,-

  பல்லடம் நகரில் பெரிய ஆஸ்பத்திரியை பொன்னி ஆஸ்பத்திரி நிர்வாகம் உருவாக்கி உள்ளது.உங்கள் ஆரோக்கியம் உங்களிடம் தான் உள்ளது நமது முன் னோர்கள் பழைய சோறு சாப்பிட்டனர். நாம் காபி, டீ குடிக்கிறோம். யார் கற்றுத்தந்தது இந்த பழக்கம். காலையில் பழைய சோறுடன் மோர் கலக்கி 5 வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் குடல் நோய் நீங்கும். காபி, டீ குடித்தால் பின்னாளில் வயிறு கெட்டுப்போகும். சாப்பிடும்போது தரையில் அமர்ந்து சம்மனம் போட்டு சாப்பிட வேண்டும்,  குனிந்து கோலமிட வேண்டும், மாவு ஆட்ட வேண்டும், இவையெல்லாம் அடிப்படையான நமது வழக்கங்கள். இவைகளை மறந்துபோனதால் உடல் நலம் கெட்டது.

  இவ்வாறு நடிகர் சிவகுமார் பேசினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித் மற்றும் ஷாலினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #AjithKumar
  சென்னை:

  காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

  இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
  இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித், நடிகை ஷாலினி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #AjithKumar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
  சென்னை:

  காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

  இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Suriya #Sivakumar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin