'மாமனிதன்' படத்திற்கு ரஷ்ய அரசாங்கம் கொடுத்த அங்கீகாரம்.. உற்சாகத்தில் படக்குழு..

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாமனிதன்’.இப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாமனிதன்
மாமனிதன்
Published on

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர்.

மாமனிதன்

யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 'மாமனிதன்' திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்வதேச விருதுகளை குவித்தது. மேலும், பல திரைப்பிரபலங்களும் இப்படத்தை பார்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மாமனிதன்

இந்நிலையில், 'மாமனிதன்' திரைப்படத்தை ரஷ்ய அரசாங்கம் திரையிடவுள்ளது. அதாவது, ரஷ்யாவின் 45-வது மாஸ்கோ சர்வதே திரைப்பட விழா வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதியிலிருந்து 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் உலக சினிமா பிரிவில் 'மாமனிதன்' திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இதற்கான அழைப்பிதழை மாஸ்கோ சர்வதே திரைப்பட குழு தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குனர் சீனுராமசாமிக்கு அனுப்பியுள்ளனர். இதனை சீனுராமசாமி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com