சீனுராமசாமியின் அடுத்த படம்.. சர்ப்ரைஸ் கொடுத்த கதாநாயகன்..

சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை வென்றது.இவரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் - சீனுராமசாமி
மாதம்பட்டி ரங்கராஜ் - சீனுராமசாமி
Published on

2007-ஆம் ஆண்டு வெளியான 'கூடல் நகர்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதைத்தொடர்ந்து, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், தனது இரண்டாவது படத்தில் தேசிய விருது வென்று சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றார்.

சீனுராமசாமி

இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான 'மாமனிதன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றது. இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் இயக்குனர் சீனுராமசாமிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மாதம்பட்டி ரங்கராஜ்

அந்த வகையில் 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், சீனுராமசாமிக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சீனுராமசாயின் அடுத்த படத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் 'மெஹந்தி சர்க்கஸ்' போலவே இப்படமும் ஒரு அழகான காதல் கதையாக இருக்கும் எனவும் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.   

X

Maalai Malar
www.maalaimalar.com