search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஒரு கை எழுதுக்கு மறுகை நிலத்துக்கு.. சூர்யா, கார்த்தி குறித்து சீனுராமசாமியின் நெகிழ்ச்சி பதிவு..
    X

    சீனுராமசாமி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    "ஒரு கை எழுதுக்கு மறுகை நிலத்துக்கு".. சூர்யா, கார்த்தி குறித்து சீனுராமசாமியின் நெகிழ்ச்சி பதிவு..

    • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • விருமன் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    விருமன்

    யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (03-08-2022) மதுரையில் நடைபெற்றது. விருமன் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி விருமன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு கை எழுதுக்கு மறுகை நிலத்துக்கு, இளையோன் வயித்துக்கு மூத்தவர் அறிவுக்கு, இருவரும் தமிழர் வாழ்விற்கு.. விருமனுக்கும் விருதுகளுக்கும் வாழ்த்துக்கள்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×