மனிதத்தை வெளிப்படுத்தும் திரைப்படம் 'மாமனிதன்' - எல்.முருகன் பாராட்டு

விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.இப்படம் பல திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது.
மாமனிதன் திரைப்படம் பார்த்த எல். முருகன்
மாமனிதன் திரைப்படம் பார்த்த எல். முருகன்
Published on

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

மாமனிதன்

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்துள்ளது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 'மாமனிதன்' திரைப்படத்தை இயக்குனர் சீனுராமசாமியுடன் இணைந்து பார்த்துள்ளார்.

மாமனிதன் திரைப்படம் பார்த்த எல். முருகன்

இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் மாமனிதன்..! இப்படத்துக்கு சர்வதேச விருதுகள் மற்றும் மக்கள் அளித்த வெற்றி என உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் இது போன்ற படைப்புகளை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com