என் மலர்
நீங்கள் தேடியது "Miracle Baby"
- இத்தாலி மலைப்பகுதி கிராமத்தில் பிறந்நத பெண் குழந்தைக்கு லாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- லாராவின் பிறப்பு அந்தக் கிராமத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இத்தாலியின் அப்ரஸோ மலைப்பகுதியில் அமைந்துள்ள பாக்லியாரா டெய் மார்சி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்துள்ள செய்தி உலகம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கிராமத்தில் வசிக்கும் மரியா மற்றும் ஆன்டோனியோ ஆகியோருக்கு பிறந்த இந்த பெண் குழந்தைக்கு லாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த 1990-களின் நடுப்பகுதிக்குப்பிறகு (சுமார் 30 ஆண்டுகளாக) இந்தக் கிராமத்தில் எந்தக் குழந்தையும் பிறக்கவில்லை. லாராவின் பிறப்பு அந்தக் கிராமத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
பாக்லியாரா டெய் மார்சி ஒரு மிகச்சிறிய கிராமம். இங்கு நிரந்தரமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதாவது, தகவல்களின்படி 20-க்கும் குறைவானவர்களே வசிக்கின்றனர். இத்தாலியின் பல மலைக் கிராமங்களைப் போலவே, இங்கும் இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்குச் சென்றுவிட்டதால், முதியவர்கள் மட்டுமே வசித்து வந்தனர்.
இந்நிலையில், லாராவின் பிறப்புச் செய்தி பரவியதும், அக்கம் பக்கத்து கிராமத்தினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எனப் பலரும் அந்தக் குழந்தையைப் பார்க்கவும், அக்குடும்பத்திற்கு வாழ்த்துச் சொல்லவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இத்தாலிய ஊடகங்கள் இக்குழந்தையை "மிராக்கிள் பேபி" என்று கொண்டாடுகின்றன. ஏனெனில், மக்கள் தொகை குறைந்து வரும் இத்தாலிய கிராமங்களுக்கு இது ஒரு புதிய உயிர்ச்சக்தியைத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
- குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
- டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
பாட்னா:
பீகார் மாநிலம், சாப்ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்தவர் பிரசுதா பிரியா தேவி.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர்.
இதில் அந்த பெண், அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். காரணம் அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன. இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த குழந்தையை டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். என்றாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 20 நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்தது.
இதற்கிடையே இரண்டு இதயம் மற்றும் 4 கால், கைகளுடன் பிறந்த குழந்தை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த மக்கள், அந்த குழந்தை கடவுளின் குழந்தை என்றும், அதனை பார்க்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டனர். இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த ஆஸ்பத்திரி முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குழந்தை இறந்த தகவலை டாக்டர்கள் தெரிவித்த பின்னர், அங்கு திரண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.






