என் மலர்
நீங்கள் தேடியது "பிரெஞ்சு ஓபன்"
- முதல் இரு செட்டை சின்னரும், அடுத்த இரு செட்டை அல்காரசும் கைப்பற்றினர்.
- ஐந்தாவது செட்டும் அனுமார் வால்போல் நீண்டு கொண்டே போனது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆகியோர் மோதினார்.
முதல் இரு செட்டை சின்னரும், அடுத்த இரு செட்டை அல்காரசும் கைப்பற்றினர்.
அனுமார் வால்போல் நீண்டு கொண்ட போன இந்த செட்டிலும் முடிவை அறிய டைபிரேக்கர் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. இதில் சாதுர்யமாக ஆடிய அல்காரஸ் வெற்றிக்கனியை பறித்தார்.
சுமார் 5 மணி 29 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் அல்காரஸ் 4-6, 6-7 (4-7), 6-4, 7-6 (7-3), 7-6 (10-2) என்ற செட் கணக்கில் சின்னரை தோற்கடித்து பிரெஞ்சு ஓபனை தக்க வைத்துக் கொண்டார்.
இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடந்த இறுதிப்போட்டியாக இது பதிவானது. அதாவது பிரெஞ்சு ஓபனில் 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த முதல் இறுதி ஆட்டம் இது தான்.
22 வயதான அல்காரசுக்கு இது 5-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்தது. அவருக்கு ரூ.24¾ கோடியும், 2-வது இடம் பிடித்த சின்னருக்கு ரூ.12½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்றது.
- இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அபார வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் முதல் இரு செட்களை 6-4, 7-6 (7-4) என வென்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-3) என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை என 7-6 (10-2) கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்.
இந்தப் போட்டி சுமார் ஐந்தரை மணி நேரம் நடைபெற்றது. கடந்த ஆண்டும் பிரெஞ்சு ஓபனில் அல்காரஸ் சாம்பியன் பட்டம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்றது.
- பெண்கள் இரட்டையரில் இத்தாலி ஜோடி வெற்றி பெற்றது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.
பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ருனிக்-கஜகஸ்தானின் அன்னா டேனிலினா ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி 6-4, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இதில் ஆண்கள் இரட்டையரில் பிரிட்டன் ஜோடி தோல்வி அடைந்தது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-ஜோ சாலிஸ்பரி ஜோடி, அர்ஜென்டினாவின் ஹொரெசியோ ஜெபெல்லோஸ்-ஸ்பெயினின் மார்செல் கிரனோலர்ஸ் ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய ஹொரெசியோ-மார்செல் ஜோடி 6-0, 6-7 (5-7), 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
- முதல் செட்டை 6(5)-7(7) என கடும் போராட்டத்திற்குப் பின் கோகோ காஃப் இழந்தார்.
- பின்னர் சூப்பர் கம்பேக் கொடுத்து 2ஆவது மற்றும் 3ஆவது செட்டை கைப்பற்றினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் சபலென்காவும், 2ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃபும் பலப்பரீட்சை நடத்தினர்.
முதல் செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இதனால் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சபலென்கா 7(7)- 6(5) என முதல் செட்டை கைப்பற்றினார்.
2ஆவது செட்டில் கோகோ காஃப் அபாரமாக விளையாடினார். கோகோ காஃப் ஆட்டத்திற்கு சபலென்காவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 5-2 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 6-2 என 2ஆவது செட்டை எளிதாக கைப்பற்றினார்.
இதனால் ஆட்டம் 3ஆவது செட்டிற்கு நீடித்தது. சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் இந்த செட்டிலும் காஃப் ஆதிக்கம் செலுத்தினார். கோகோ காஃப் 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 5-3 என முன்னிலைப் பெற்றார். 9ஆவது கேம்-ஐ சபலென்கா கைப்பற்றினார். இதனால் காஃப் 5-4 என முன்னிலைப் பெற்றிருந்தார்.
10ஆவது கேமிற்கான சர்வீஸை காஃப் தொடங்கினார். இந்த கேம் "ஏஸ்" வரை சென்றாலும் காஃப் கைப்பற்றினார். இதனால் 2-1 {6(5)-7(7), 6-2, 6-4} என அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என முசெட்டி வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 6-0 என வென்றார்.
4-வது செட்டில் அல்காரஸ் 2-0 என முன்னிலை பெற்றிருந்தபோது முசெட்டி போட்டியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இதில் கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் கலப்பு இரட்டையரில் இத்தாலியின் சாரா எரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, நான்காம் நிலை ஜோடியான அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்-இவான் கிங் ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி 6-4, 6-2 என வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினர்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் கோகோ காப் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், பிரான்சின் லூயிஸ் போய்சன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-2, 6-2 என்ற செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கோகோ காப், சபலென்கா உடன் மோதுகிறார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் பெலாரசின் சபலென்கா வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பெலாரசின் சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா முதல் செட்டை 7-6 (7-1) என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். பதிலுக்கு 2வது செட்டை ஸ்வியாடெக் 6-4 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-0 என வென்ற சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையரில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னணி வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, தரவரிசையில் 361வது இடத்தில் உள்ள பிரான்சின் லூயிஸ் போய்சன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய போய்சன் 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நடப்பு தொடரில் இருந்து மிர்ரா ஆண்ட்ரீவா வெளியேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் போய்சன், கோகோ காப்பை எதிர்கொள்கிறார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் கோகோ காப் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு மேடிசன் கீஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 7-6(8-6) என்ற செட் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
இதில் சுதாரித்துக் கொண்ட கோகோ காப் அடுத்த இரு சுற்றுகளை 6-4, 6-1 என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் முதல் இரு செட்களை 7-6 (10-8), 6-3 என வென்றார். 3வது செட்டை பென் ஷெல்டன் 6-4 என கைப்பற்றினார்.
4-வது செட்டை அல்காரஸ் 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதுகிறார்.






