என் மலர்
நீங்கள் தேடியது "French city"
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இதில் கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் கலப்பு இரட்டையரில் இத்தாலியின் சாரா எரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, நான்காம் நிலை ஜோடியான அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்-இவான் கிங் ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி 6-4, 6-2 என வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினர்.
- பிரெஞ்சு-இந்திய வம்சாவழி நகரமன்ற உறுப்பினர்கள் குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- புதுவையில் சில தொகுதிகளை தத்தெடுத்து பல சேவைகள் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
புதுச்சேரி:
பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின்போது புதுவை அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கு பிரான்ஸ் திருவள்ளுவர் கலைக் கூடம், பிரெஞ்சு-இந்திய வம்சாவழி நகரமன்ற உறுப்பினர்கள் குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் இந்திய வம்சாவழியை சார்ந்த மோங்மாங்கி நகரமன்ற உறுப்பினர் செல்வா அண்ணாமலை, புதுவையில் சில தொகுதிகளை தத்தெடுத்து பல சேவைகள் செய்ய இருப்பதாக தெரிவித்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், பிரான்சிற்கும், புதுவைக்கும் உள்ள தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் சில சுற்றுலா திட்டங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசு செயல்படுத்தவிரும்புவதாக தெரிவித்தார்.
புதுவை எம்.எல்.ஏ.க்களும், பிரான்ஸ் வம்சாவழி நகரமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒரு குடையின் கீழ் ஓர் பொதுவான அமைப்பைத் தொடங்கி புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் பல பயனுள்ள திட்டங்களை எளிதாக செய்யமுடியும். அதன் மூலம் பிரான்சிலிருந்து புதுவைக்கு அதன் நிர்வாகிகளும், புதுவையிலிருந்து பிரான்சிற்கு எம்.எல்.ஏ.க்களும் வந்து பல கலாச்சார விழாக்களை ஏற்பாடு செய்து கொண்டாடலாம், பல திட்டங்களை செய்து முடிக்க ஏதுவாக அமையும் என்றார்.
பிரெஞ்சு தூதரகத்தால் மட்டுமே கொண்டாடப்பட்டு வரும் பாஸ்டில் தின விழாவை புதுவை அரசு- பிரான்ஸ் இந்திய வம்சாவழி நகரமன்ற உறுப்பினர்களோடு சேர்ந்து கொண்டாடலாம். புதுவை மக்களால் மறக்கப்பட்டு வரும் பிரான்சின் பாரம்பரிய சிறப்புகளை மீட்டெடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் புதுவை அரசு கொறடா ஏ.கேடி.ஆறுமுகம் , எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், பிரெஞ்சு இந்திய வம்சா வழி நகரமன்ற உறுப்பினர்கள் , பிரெஞ்சு இந்திய கழகங்களை சேர்ந்த மதியழகன், பிரபுராம், கமல்ராஜ், மன்சூர், கோபால கிருஷ்ணன், ஆதித்தன், பேராசிரியர் சக்திபுயல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






