என் மலர்
டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சபலென்கா
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் பெலாரசின் சபலென்கா வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பெலாரசின் சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா முதல் செட்டை 7-6 (7-1) என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். பதிலுக்கு 2வது செட்டை ஸ்வியாடெக் 6-4 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-0 என வென்ற சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Next Story






