என் மலர்
நீங்கள் தேடியது "Sabalenka"
- சபலென்கா 62 பாயிண்ட்கள் வென்ற நிலையில், கோஸ்ட்யூக் 47 புள்ளிகள் வென்றிருந்தார்.
- சபலென்கா 3/8 பிரேக் பாயிண்ட், கோஸ்ட்யூக் 1/3 பிரேக் பாயிண்ட் பெற்றனர்.
ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரஸின் அரீனா சபலென்காவும், 16-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மர்தா கோஸ்ட்யூக்கும் பலப்பரீட்சை நடத்தினார். இதில் சபலென்கா 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
அரையிறுதியில் கோஸ்ட்யூக் அமெரிக்காவின் பெகுலாவை 6-0, 6-3 என வீழ்த்தியிருந்தார். சபலென்கா ரஷியாவின் செக்குடியரசின் முச்சோவாவை 6-3, 6-4 என வீழ்த்தியிருந்தார்.
சபலென்கா முதல் சர்வீஸ் மூலம் 80 சதவீதம் வெற்றியை பெற்றார். கோஸ்ட்யூக் 57 சதவீதம் வெற்றிகளை பெற்றார். சபலென்கா 3/8 பிரேக் பாயிண்ட், கோஸ்ட்யூக் 1/3 பிரேக் பாயிண்ட் பெற்றனர்.
சபலென்கா 62 பாயிண்ட்கள் வென்ற நிலையில், கோஸ்ட்யூக் 47 புள்ளிகள் வென்றிருந்தார்.
- முதல்தர வீராங்கனையாக சபலென்கா 2-0 என எளிதாக வெற்றி பெற்றார்.
- அமெரிக்காவின் பெகுலா 6-3, 7(7)-6(3) என வெற்றி பெற்றார்.
ஆஸ்திரேலியா ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.
ஒரு காலிறுதி போட்டியில் முதல்தர வீராங்கனையாக சபலென்கா அமெரிக்காவைச் சேர்ந்த மேடிசன் கீய்ஸை எதிர்கொண்டார். இதில் சபலென்கா 6-3, 6-3 நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் பெகுலா, சம்சோனோவை எதிர்கொண்டார். இதில் 4-ம் நிலை வீராங்கனையான பெகுலா 6-3, 7(7)-6(3) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான ரைபாகினா, ரஷியாவின் கரோலினா முட்சோவைவை எதிர்கொண்டார். இதில் 11-ம் நிலை வீராங்கனையான முட்சோவா முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட ரைபாகினா 2-வது செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் போட்டிப்போட்டு விளையாடினர். என்றாலும் முட்சோவா 6-4 என 3-வது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.
- பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது.
- சபலென்கா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் புதிய சீசனை வெற்றியோடு தொடங்கினார்.
பிரிஸ்பேன்:
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய 'நம்பர் ஒன்' வீராங்கனை பெலாரசின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாவை சந்தித்தார்.
தனது அதிரடியான ஷாட்டுகளால் கிறிஸ்டினாவை திணறடித்த சபலென்கா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் புதிய சீசனை வெற்றியோடு தொடங்கினார். இந்த வெற்றிக்கு அவருக்கு 48 நிமிடங்களே தேவைப்பட்டது. தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் கஜகஸ்தானின் எலினா ரைபகினா 6-3, 7-5 என்ற நேர் செட்டில் சீனாவின் சூவாய் ஜாங்கை வெளியேற்றினார்.
எகதெரினா அலெக்சாண்ட்ரா, டயானா ஸ்னைடர் (ரஷியா), கரோலின் முச்சோவா (செக்குடியரசு), சோரனா கிர்ஸ்டியா (ருமேனியா), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
இதன் ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் பாப்லோ காரெனோ பஸ்தாவை (ஸ்பெயின்) விரட்டினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவாசெவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் உள்ளூர் நட்சத்திரம் நிக் கிரியாசுக்கு அதிர்ச்சி அளித்தார்.
- டென்னிஸ் தொடர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற்றது.
- சபலென்கா (பெலா ரஸ்)-ரைபகினா (கஜகஸ் தான்) மோதினார்கள்.
டபிள்யூ. டி. ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற்றது.
இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனை யான சபலென்கா (பெலா ரஸ்)-ரைபகினா (கஜகஸ் தான்) மோதினார்கள்.
இதில் ரைபகினா 6-3, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் சபலென்காவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
- வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா அரையிறுதியில் வென்றார்.
பீஜிங்:
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை சபலென்கா 6-2 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஜெசிகா பெகுலா அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-2) என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஜோகோவிச் 6-3, 6-3 ,6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.
- சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 7-ம் நிலை வீரருமான ஜோகோவிச் ( செர்பியா) 4-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஜான் லெனார்ட் ஸ்ட்ரப்பை சந்தித்தார்.
இதில் ஜோகோவிச் 6-3, 6-3 ,6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 49 நிமிட நேரமே தேவைப்பட்டது.
மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள டெய்லர் பிரீட்ஸ் (அமெரிக்கா), ஜிரி லெஹெக்கா (செக் குடியரசு) ஆகியோரும் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான சபலென்கா ( பெலாரஸ்) 4-வது சுற்றில் ஸ்பெயினை சேர்ந்த கிறிஸ்டினா புக்சாவை எதிர் கொண்டார்.
இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 13 நிமிட நேரமே தேவைப்பட்டது.
மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் கிரஜ்கோவா ( செக் குடியரசு) வெற்றி பெற்றார்.
செக் குடியரசுவை சேர்ந்த வோண்ட் ரூகோவா 6-4, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ரைபகினாவை தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் தொடங்குகிறது.
- பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பிரிட்டனின் எம்மா ராடுகானு 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானின் இனா ஷிபஹராவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் நேரடியாக 2வது சுற்று ஆட்டத்துக்கு தகுதிபெற்றார்.
இன்று நடந்த 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அனஸ்தசியா பொடபோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் தேதி நடைபெறும் அடுத்த சுற்றில் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை மார்ட்டா கோஸ்டியூக் உடன் மோதுகிறார்.
- 2ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார்.
- முதல் செட் மற்றும் 3ஆவது செட்டை 6-4 என இழந்து தோல்வியடைந்தார்.
விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் அரையிறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான சபலென்கா, 13ஆம் நிலை வீராங்கனையான அனிசிமோவோவை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6-4 என அனிசிமோவா கைப்பற்றினார். 2ஆவது செட்டில் சபலென்கா பதிலடி கொடுத்தார். அவர் 2ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது செட்டில் இருவரும் மல்லு கட்டினர். ஆனால் அனிசிமோவை ஆட்டத்திற்கு சபலென்காவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 3ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் 8ஆம் நிலை வீராங்கனையான ஸ்வியாடெக், தரநிலை பெறாத பென்சிக்கை எதிர்கொள்கிறார்.
சபலென்கா 4 முறையும், அனிசிமோவா 5 முறையும் டபுள் ஃபால்ட்ஸ் செய்தனர். சபலென்கா முதல் சர்வீஸ் மூலம் 68 சதவீதமும், அனிசிமோவா 63 சதவீதமும் பாயின்ட்ஸ் பெற்றனர்.
2ஆவது சர்வீஸ் மூலம் அனிசிமோவா 69 பாயின்ட்ஸ், சபலென்கா 50 சதவீதம் பாயின்ட்ஸ் பெற்றனர். சபலென்காவின் பிரேக் பாயின்ட்ஸ் 3/14, அனிசிமோவாவின் பிரேக்ஸ் பாயின்ட்ஸ் 4/11 ஆகும். சபலென்கா 106 பாயின்ட்ஸ், அனிசிமோவா 108 பாயின்ட்ஸ் பெற்றனர்.
சபலென்கா 14 கேம்ஸ்களையும், அனிசிமோவா 16 கேம்ஸ்களையும் வென்றனர்.
- உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ரூப்லதேவ் உடன் மோதினார்.
- உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோதினார்.
ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ரூப்லதேவ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-7 (5), 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோதினார்.
இப்போட்டியில் 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் வென்று சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
- ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது அரையிறுதிச் சுற்று போட்டிகள் நடந்தன.
இன்று நடந்த ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, செக் வீராங்கனை மார்கெட்டா வாண்ட்ரசோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மார்கெட்டா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதனால் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது காலிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.
இன்று நடந்த ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா முதல் செட்டை 7-6 (8-6) என கைப்பற்றினார். 2வது செட்டை ரிபாகினா 6-3 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சபலென்கா 7-6 (8-6) என போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் முன்னணி வீராங்கனையான ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.






