என் மலர்
நீங்கள் தேடியது "Rybakina"
- மியாமி ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடந்தது.
- இதில் ரிபாகினா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெகுலாவுடன் மோதினார்.
இதில் ரிபாகினா 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
- மியாமி ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் நடந்தது.
- இதில் ரிபாகினா வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, இத்தாலி வீராங்கனை மார்ட்டினா டிரெவிசனுடன் மோதினார்.
இதில் ரிபாகினா 6-3, 6-0 என்ற நேர்செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- மியாமி ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் நடந்தது.
- இதில் ரிபாகினா வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா, பெல்ஜியம் வீராங்கனை எலைஸ் மெர்டன்சுடன் மோதினார்.
இதில் ரிபாகினா 6-4, 6-3 என்ற நேர்செட்டில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் இத்தாலி வீராங்கனை மார்ட்டினா டிரெவிசனுடன் ரிபாகினா மோதுகிறார்.
- இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சபலென்கா, ரிபாகினா இறுதிக்கு முன்னேறினர்.
- நேற்று நடந்த அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.
முதல் ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ரிபாகினா இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.
இதில் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சபலென்கா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா, ரிபாகினாவுடன் மோத உள்ளார்.