என் மலர்
நீங்கள் தேடியது "US Open Tennis"
- இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் இருவரும் சந்திப்பது இது 3-வது முறையாகும்.
- ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரசுக்கு ரூ.43½ கோடி பரிசாக வழங்கப்பட்டது.
நியூயார்க்:
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று அரங்கேறியது. இதில் நடப்பு சாம்பியன் ஜானிக் சின்னர், கார்லஸ் அல்காரசுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜானிக் சின்னரை வீழ்த்தி, கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு ரூ.43½ கோடியும், 2-வது இடம் பெற்ற ஜானிக் சின்னருக்கு ரூ.21¾ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் இருவரும் சந்திப்பது இது 3-வது முறையாகும். முந்தைய இரு மோதல்களில் ஜூன் மாதம் நடந்த பிரெஞ்சு ஓபனில் அல்காரசும், ஜூலை மாதம் நடந்த விம்பிள்டனில் ஜானிக் சின்னரும் வெற்றி பெற்றிருந்தனர். இதுவரை இருவரும் 14 முறை நேருக்கு நேர் மோதி இருந்தனர். இதில் அல்காரஸ் 9-5 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்தார்.
2004 முதல் 2008-ம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்து முன்னாள் ஜாம்பவான் ரோஜர் பெடரர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை தொடர்ச்சியாக வென்று இருந்தார். அதன் பிறகு யாரும் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை தக்கவைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஒசாகா முதல் செட்டை 7-6 (7-4) என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட அனிசிமோவா அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் அனிசிமோவா முதல் முறையாக அமெரிக்க ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவா, சபலென்காவுடன் மோதுகிறார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, பிரிட்டனின் நீல் கப்ஸ்கி-ஜோ சாலிஸ்பெரி ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை7-6 (7-2) என வென்றது. இதில் சுதாரித்துக் கொண்ட பிரிட்டன் ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் யூகி பாம்ப்ரி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நமப்ர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை சந்தித்தார்.
லஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 4-6 என இழந்த சபலென்கா, அடுத்து அதிரடியாக ஆடினார்.
இதனால் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி அபார வெற்றி பெற்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, அமெரிக்காவின் ராஜீவ் ராம்-குரேஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்பரி ஜோடி 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் யூகி பாம்ப்ரி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் இத்தாலி வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சின்னர், சக நாட்டு வீரரான லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் இத்தாலியின் சின்னர் கனடாவின் பெலிக்ஸ் ஆகரை சந்திக்கிறார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஒசாகா 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் ஒசாகா அமெரிக்காவின் அனிசிமோவாவை சந்திக்கிறார்.
- சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
- ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்றில் கஜகஸ்தானை சேர்ந்த 23-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர் கொண்டார்.
இதில் சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 21 நிமிட நேரமே தேவைப்பட்டது.
மற்ற 4-வது சுற்று ஆட்டங்களில் 8-வது வரிசையில் உள்ள அலெக்ஸ் டி மினாவுர் ( ஆஸ்திரேலியா), 10-ம் நிலை வீரர் லாரென்சோ முசெட்டி ( இத்தாலி) ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதியில் நுழைந்தனர்.
15-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) அதிர்ச்சிகரமாக தோற்றார். கனடாவை சேர்ந்த 25-ம் நிலை வீரரான பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் 7-5, 6-3,6-4 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 4-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை சந்தித்தார். இதில் ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 4 நிமிட நேரமே தேவைப்பட்டது.
பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், 3-வது வரிசையில் உள்ள வருமான கோகோ கவூப் ( அமெரிக்கா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். 23-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான் ) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனான கவூப்பை வீழ்த்தினார்.
8-ம் நிலை வீராங்கனை அமண்டா அனிஸ்மோவாவும் ( அமெரிக்கா) கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் ஸ்வியாடெக்குடன் மோதுகிறார்.
- ஜோகோவிச் 6-3, 6-3 ,6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.
- சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 7-ம் நிலை வீரருமான ஜோகோவிச் ( செர்பியா) 4-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஜான் லெனார்ட் ஸ்ட்ரப்பை சந்தித்தார்.
இதில் ஜோகோவிச் 6-3, 6-3 ,6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 49 நிமிட நேரமே தேவைப்பட்டது.
மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள டெய்லர் பிரீட்ஸ் (அமெரிக்கா), ஜிரி லெஹெக்கா (செக் குடியரசு) ஆகியோரும் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான சபலென்கா ( பெலாரஸ்) 4-வது சுற்றில் ஸ்பெயினை சேர்ந்த கிறிஸ்டினா புக்சாவை எதிர் கொண்டார்.
இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 13 நிமிட நேரமே தேவைப்பட்டது.
மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் கிரஜ்கோவா ( செக் குடியரசு) வெற்றி பெற்றார்.
செக் குடியரசுவை சேர்ந்த வோண்ட் ரூகோவா 6-4, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ரைபகினாவை தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் ரிண்டர்னெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-3), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான ஆன் லி உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 3-வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரி, பிரேசிலின் ஹதாத் மையா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பிரேசில் வீராங்கனை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதனால் மரியா சக்காரி தொடரில் இருந்து வெளியேறினார்.
இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-4 என முதல் செட்டை வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெலிக்ஸ் ஆகர் அடுத்த 3 செட்களை 7-6 (9-7), 6-4, 6-4 என கைப்பற்றி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 3 வீரரான ஸ்வரேவ் அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. தற்போது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நம்பர் 1 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், கனடாவின் டேனிஸ் ஷபோவலோவ் உடன் மோதினார்.
முதல் செட்டை 5-7 என இழந்த சின்னர், அதிரடியாக ஆடி அடுத்த மூன்று செட்களை 6-4, 6-3, 6-3 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் போலந்தின் மக்டலேனாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 3-வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் நம்பர் 5 வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டவுன்செண்ட் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதனால் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா தொடரில் இருந்து வெளியேறினார்.






