என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமண்டா அனிஸ்மோவா"

    • போலந்தின் இகா ஸ்வியாடெக் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
    • அனிஸ்மோவா முதல் முறையாக டாப் 5 பட்டியலுக்கு முன்னேறியுள்ளார்.

    சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா முதலிடத்திலும், போலந்தின் இகா ஸ்வியாடெக் இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    அமெரிக்காவின் கோகோ காப் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 5வது இடத்தில் உள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் அமென்டா அனிஸ்மோவா 4-வது இடம் பிடித்து தனது சிறந்த தரநிலையைப் பதிவு செய்துள்ளார்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் அமென்டா அனிஸ்மோவா அசுர வளர்ச்சி கண்டுள்ளார். 2023-தரவரிசையில் 359வது இடத்தில் இருந்த அவர் கடந்த ஆண்டு டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
    • சபலென்கா அரையிறுதியில் அமெரிக்காவின் அனிசிமோவாவை இன்று சந்திக்கிறார்.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அனிசிமோவா, இத்தாலியின் ஜெசிகா பெகுலா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் ரிபாகினா, பெகுலாவை சந்திக்கிறார். இரண்டாவது அரையிறுதியில் சபலென்கா, அனிசிமோவாவை சந்திக்கிறார்.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
    • 3வது சுற்றில் அமெரிக்காவின் அனிசிமோவா வெற்றி பெற்றார்.

    ரியாத்:

    ஒவ்வொரு ஆண்டும் 8 முன்னணி வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது.

    செரீனா பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா மற்றும் மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், 3வது சுற்றில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை இகா ஸ்வியாடெக் போராடி 7-6 (7-3) என வென்றார்.

    இதில் சுதாரித்துக் கொண்ட அனிசிமோவா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் அரையிறுதிக்கும் தகுதிபெற்றார்.

    ஏற்கனவே கஜகஸ்தானின் எலினா ரிபாகினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இறுதிப் போட்டியில் நோஸ்கோவாவும், அனிசிமோவாவும் மோதினர்.
    • இதில் 2வது செட்டை நோஸ்கோவா கைப்பற்றினார்.

    பீஜிங்:

    சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடைபெற்றது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.

    பரபரப்பான இந்த போட்டியில் முதல் செட்டை அனிசிமோவாவும் 2-வது செட்டை நோஸ்கோவாவும் கைப்பற்றினர். சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் கடைசி செட்டை அனிசிமோவா 6-2 என கைப்பற்றினார்.

    இறுதியில் அனிசிமோவா 6-0, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    • அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தோல்வி அடைந்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஒசாகா முதல் செட்டை 7-6 (7-4) என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட அனிசிமோவா அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் அனிசிமோவா முதல் முறையாக அமெரிக்க ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவா, சபலென்காவுடன் மோதுகிறார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • அமெரிக்க வீராங்கனை அனிசிமோவா 3வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் நம்பர் 5 வீராங்கனையான அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.

    இதில் கலின்ஸ்கயா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் அமெண்டா அனிசிமோவா 3வது சுற்றுடன் வெளியேறினார்.

    அமெண்டா அனிசிமோவா விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக் ஒரு இடம் முன்னேறி 3வது இடம் பிடித்தார்.
    • அனிசிமோவா 5 இடங்கள் முன்னேறி முதல் முறையாக டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் மகளிர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதனையடுத்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா முதலிடத்திலும், அமெரிக்காவின் கோகோ காப் இரண்டாவது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.

    விம்பிள்டன் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்நிலையில், விம்பிள்டன் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த அமெரிக்காவின் அமென்டா அனிசிமோவா 5 இடம் முன்னேறி சிறந்த தரநிலையாக 7-வது இடம் பிடித்துள்ளார்.

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • அரையிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஜெர்மனியின் தத்ஜனா மரியா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மரியா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் குயின்வென் ஜெங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவா, மரியா உடன் மோதுகிறார்.

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • காலிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை எம்மா நவாரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • இதன் அரையிறுதியில் அமெரிக்காவின் அனிசிமோவா காயத்தால் விலகினார்.

    வாஷிங்டன்:

    சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சக நாட்டு வீராங்கனை அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.

    இதில் சோபியா கெனின் 5-2 என முதல் செட்டில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது அனிசிமோவா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

    இதையடுத்து சோபியா கெனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சோபியா கெனின், ஜெசிகா பெகுலாவை சந்திக்கிறார்.

    • கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    டொரண்டோ:

    கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிஸ்மோவா உடன் மோதினார்.

    இதில் அனிஸ்மோவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் அனிஸ்மோவா, சக நாட்டு வீராங்கனை எம்மா நவாரோவை சந்திக்கிறார்.

    நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ரஷிய வீராங்கனை டயானா ஸ்னெய்டர், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொள்கிறார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை அமண்டா சாம்பியன் பட்டம் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்க வீராங்கனையான அமண்டா அனிஸ்மோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனிஸ்மோவா 6-4, 6-3 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    ×