என் மலர்
டென்னிஸ்

2025-ம் ஆண்டின் வளர்ச்சி கண்ட வீராங்கனை விருது பெற்ற அமெண்டா அனிசிமோவா
- 2025-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெலாரசின் சபலென்கா தேர்வு செய்யப்பட்டார்.
- சபலென்கா 2025-ம் ஆண்டு முழுவதும் உலகத் தரவரிசையில் நம்பர்-1 வீராங்கனையாக நீடித்தவர்.
பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் (டபிள்யு.டி.ஏ.) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. உலகின் பல்வேறு மீடியாக்கள் இணைந்து இவர்களைத் தேர்வு செய்கின்றன.
இந்நிலையில், சிறப்பான வளர்ச்சி கண்ட வீராங்கனையாக அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா (24), தேர்வு செய்யப்பட்டார்.
இரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர்.
2025-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெலாரசின் சபலென்கா (27), தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், போலந்தின் இகா ஸ்வியாடெக்கிற்கு அடுத்து, தொடர்ந்து 2-வது ஆண்டாக இவ்விருது பெற்ற வீராங்கனை ஆனார் சபலென்கா.
சபலென்கா 2025-ம் ஆண்டு முழுவதும் உலகத் தரவரிசையில் நம்பர்-1 வீராங்கனையாக நீடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






