என் மலர்
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஒசாகா முதல் செட்டை 7-6 (7-4) என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட அனிசிமோவா அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் அனிசிமோவா முதல் முறையாக அமெரிக்க ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவா, சபலென்காவுடன் மோதுகிறார்.
Next Story






