என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alexander Zverev"

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
    • ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக விளையாடிய சின்னர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலைறுதியில் நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் விலகியதால் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஸ்பெயினின் டேவிடோவிச் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 7-5, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் கொரண்டின் மவுடெட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் மெத்வதேவ், ஸ்வரேவை சந்திக்க உள்ளார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 3-வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரி, பிரேசிலின் ஹதாத் மையா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பிரேசில் வீராங்கனை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதனால் மரியா சக்காரி தொடரில் இருந்து வெளியேறினார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-4 என முதல் செட்டை வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெலிக்ஸ் ஆகர் அடுத்த 3 செட்களை 7-6 (9-7), 6-4, 6-4 என கைப்பற்றி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 3 வீரரான ஸ்வரேவ் அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லூகா நார்டி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார். இதில் முதல் செட்டை ஸ்வரேவ் 7-5 என கைப்பற்றினார். 2வது செட்டில் 3-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, கச்சனாவ் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து ஸ்வரேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
    • ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதியில் வெற்றி பெற்றார்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையரில் நடந்த காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரின் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-7 (8-10) எனஇழந்த ஸ்வரேவ் அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் கரன் கச்சனாவ், அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்சல்சனை 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
    • ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையரில் நடந்த 4வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-4 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டில் 1-0 என ஸ்வரேவ் முன்னிலை பெற்றபோது, அர்ஜெண்டினா வீரர் போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஸ்வரேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் பிலிப் மிசோலிக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-2, 7-6 (7-4) 6-1 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பிளாவியோ கோபோலியை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் ஸ்வரேவ் தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டியுடன்

    மோதினார்.

    இதில் முசெட்டி 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • 4வது சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை அல்காரஸ் 6-3 என வென்றார். 2வது செட்டை கச்சனாவ் 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அல்காரஸ் 7-5 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • மூன்றாவது சுற்றில் ஜெர்மன் வீரர் ஸ்வரேவ் தோல்வி அடைந்தார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 5-7, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • இரண்டாவது சுற்றில் ஜெர்மன் வீரர் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர், ஸ்பெயின் வீரர் டேவிடோவிச் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 2-6 என இழந்த ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 7-6 (7-0) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினா வீரர் ஜுவான் மேனுவலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • முதல் சுற்றில் ஜெர்மன் வீரர் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர், ஸ்பெயின் வீரர் ராபர்டோ பவுடிஸ்டா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ×