என் மலர்
நீங்கள் தேடியது "இத்தாலி ஓபன்"
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்றது.
- இறுதிச்சுற்றில் இத்தாலி ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, ஜெர்மனியின் எலைஸ் மெர்டன்ஸ்- ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவா ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய பவுலினி ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
ஏற்கனவே பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜாஸ்மின் பவுலினி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்றது.
- இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
3 மாத தடைக்குப் பிறகு களமிறங்கிய முதல் தொடரிலேயே ஜானிக் சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- இறுதிச்சுற்றில் இத்தாலி வீராங்கனை பவுலினி வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.
இதில் பவுலினி 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
40 ஆண்டுக்குப் பிறகு இத்தாலி வீராங்கனை இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- அரையிறுதி சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டாமி பால் முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சின்னர் 6-0 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை சின்னர் 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோத உள்ளார்.
3 மாத தடைக்குப் பிறகு களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஜானிக் சின்னர் இறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதுகிறார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று இரவு நடந்த அரையிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனும், 8-ம் நிலை வீராங்கனையுமான சீனாவின் கின் வென் ஜாங், அமெரிக்காவின் கோகோ காப்பை எதிர்கொண்டார்.
இதில் கோகோ காப் முதல் செட்டை 7-6 (7-3) என போராடி வென்றார். இரண்டாவது செட்டை கின் வென் ஜாங் 6-4 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை கோகோ காப் 7-6 (7-4) என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இந்தப் போட்டி சுமார் 3 மணி நேரம் 39 நிமிடங்கள் நீடித்தது.
நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் கோகோ காப், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினியை எதிர்கொள்கிறார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- அரையிறுதி சுற்றில் இத்தாலி வீராங்கனை பவுலினி வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் பெடன் சியர்ன்ஸ் உடன் மோதினார்.
இதில் பவுலினி 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் ஸ்வரேவ் தோல்வி அடைந்தார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டியுடன்
மோதினார்.
இதில் முசெட்டி 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- காலிறுதி சுற்றில் இத்தாலி வீராங்கனை பவுலினி வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.
இதில் 7-6 (7-1) என முதல் செட்டை இழந்த பவுலினி, அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- 4வது சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை அல்காரஸ் 6-3 என வென்றார். 2வது செட்டை கச்சனாவ் 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அல்காரஸ் 7-5 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- 4வது சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் முசெட்டி 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதனால் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள டேனில் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- 2வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா ஒசாகா வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் பொடபோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.