என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jasmine Paolini"

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது.
    • காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அனிசிமோவா 6-7(4-7), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது.
    • நான்காவது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, செக் நாட்டின் மேரி பவுஸ்கோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜாஸ்மின் பவுலினி 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-7 (4-7), 6-1 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, ரஷியாவின் வெரோனிகா குடர்மெடோவா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பவுலினி முதல் செட்டை 6-3 என வென்றார். இதற்கு பதிலடியாக ரஷிய வீராங்கனை 2வது செட்டை 7-6 (7-2) என போராடி கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை 6-3 என கைப்பற்றிய ஜாஸ்மின் பவுலினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் உடன் மோதுகிறார்.

    • ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
    • காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜாஸ்மின் பயோலினி மற்றும் பீட்ரிஸ் ஹடாட் மையா ஆகியோர் மோதினர்.

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி மற்றும் பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாட் மையா ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் ஜாஸ்மின் பயோலினி 7-5, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    • ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீராங்கனை 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடைபெற்ற 2வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, கனடாவின் லைலா பெர்னாண்டசுடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பவுலினி 7-6 (10-8), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் இத்தாலி வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    இன்று நடந்த ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஒன்ஸ் ஜபேர் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
    • பெண்கள் ஒற்றையரில் இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரொமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 7-5 என்ற செட்களில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-4, 6-1 என்ற செட்கணக்கில் உக்ரைனின் யூலியா ஸ்டாரோடப்சேவாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
    • பெண்கள் ஒற்றையரில் இகா ஸ்வியாடெக் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பிரிட்டனின் எம்மா ராடுகானு உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-3, 6-3 என்ற செட்கணக்கில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிக்கை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்றது.
    • இறுதிச்சுற்றில் இத்தாலி ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, ஜெர்மனியின் எலைஸ் மெர்டன்ஸ்- ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவா ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய பவுலினி ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    ஏற்கனவே பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜாஸ்மின் பவுலினி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இறுதிச்சுற்றில் இத்தாலி வீராங்கனை பவுலினி வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.

    இதில் பவுலினி 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    40 ஆண்டுக்குப் பிறகு இத்தாலி வீராங்கனை இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் இத்தாலி வீராங்கனை பவுலினி வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் பெடன் சியர்ன்ஸ் உடன் மோதினார்.

    இதில் பவுலினி 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • காலிறுதி சுற்றில் இத்தாலி வீராங்கனை பவுலினி வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.

    இதில் 7-6 (7-1) என முதல் செட்டை இழந்த பவுலினி, அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ×