search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெசிகா பெகுலா"

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.
    • 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் சபலென்கா 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    2-வது முறையாக அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா தனது முதல் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

    கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்யிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் செட்டை 1-6 என கரோலினா கைப்பற்றினார்.
    • அடுத்த 2 செட்டுகளை ஜெசிகா வென்று அசத்தினார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் செக் குடியரசு வீராங்கனையான கரோலினா முச்சோவாவும் மோதின.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கரோலினா கைப்பற்றினார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா அடுத்த இரண்டு செட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெசிகா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் இறுதிபோட்டியில் சபலென்கா மற்றும் ஜெசிகா பெகுலா மோதவுள்ளனர். முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு பெகுலா தகுதி பெற்றுள்ளார்.


    • கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக்கும் ஜெசிகா பெகுலாவும் மோதின.
    • இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார்.

    ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கும் 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் மோதின.

    இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார். இகா 2-6, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். ஜெசிகா பெகுலா முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.

    • ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் பெர்லின் ஓபன் சாம்பியனான பெகுலா தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இங்கிலாந்தின் எம்மா ராடுகானுவை சந்தித்தார்.

    இதில் எம்மா ரானுகாடு 4-6, 7-6 (8-6), 7-5 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஜெசிகா பெகுலா சமீபத்தில் நடந்த பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது.
    • இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை காலின்ஸ்கயா தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.

    இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா, அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை காலின்ஸ்கயா 7-6 (7-0) என கைப்பற்றினார். 2வது செட்டை பெகுலா 6-4 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை பெகுலா 7-6 (7-3) என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ஜெசிகா பெகுலா பெறும் 5-வது சாம்பியன் பட்டம் இது என்பதும், இந்த ஆண்டில் இது முதல் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் 3-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா தோற்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக் நாட்டு வீராங்கனை மேரி போஸ்கோவாவுடன் மோதினார்.

    இதில் போஸ்கோவா 6-4, 6-0 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் சாம்சனோவாவுடன் மோதினார்.

    டொரண்டோ:

    கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அங்குள்ள டொரண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடைபெற்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் சாம்சனோவாவுடன் மோதினார். இதில் பெகுலா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் சாம்சனோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    ×