என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் மேடிசன் கீஸை வெளியேற்றிய அமெரிக்க வீராங்கனை
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் மேடிசன் கீஸை வெளியேற்றிய அமெரிக்க வீராங்கனை

    • 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ்- ஜெசிகா பெகுலா மோதினார்கள்.
    • பெகுலா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 9-ம் நிலை வீராங்கனையுமான மேடிசன் கீஸ் ( அமெரிக்கா)- ஆறாவது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மோதினார்கள்.

    இதில் கீஸ் தோற்று வெளியேறினார். பெகுலா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 18 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    பெகுலா கால் இறுதியில் 4-வது வரிசையில் உள்ள அமன்டா அனிஸ்மோவா (அமெரிக்கா) அல்லது சின்யு வாங்கை (சீனா) சநதிக்கிறார்.

    Next Story
    ×