என் மலர்
நீங்கள் தேடியது "Australian Open Tennis"
- அரையிறுதியில் ஜெசிகா பெகுலா ரைபகினாவுடன் மோதினார்.
- இறுதிபோட்டியில் ரைபகினா - சபலென்கா நாளை மறுநாள் மோதவுள்ளனர்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் 6-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா கஜகஸ்தானை சேர்ந்த 5-வது வரிசையில் உள்ள ரைபகினாவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ரைபகினா 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிபோட்டியில் ரைபகினா - சபலென்கா நாளை மறுநாள் மோதவுள்ளனர்.
- பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் அரீனா சபலென்கா மற்றும் எலினா ஸ்விடோலினா மோதினர்.
- தொடர்ச்சியாக 7-வது முறையாக கிராண்ட்சிலாம் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு சபலென்கா முன்னேறியுள்ளார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலருசியா வீராங்கனை அரீனா சபலென்கா மற்றும் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-2, 6-3 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் தொடர்ச்சியாக 7-வது முறையாக கிராண்ட்சிலாம் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு சபலென்கா முன்னேறியுள்ளார்.
- காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி, செர்பியாவின் ஜோகோவிச் மோதினர்.
- முதல் 2 செட்டுகளை முசெட்டி சிறப்பாக விளையாடி வென்றார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி, செர்பியாவின் ஜோகோவிச் மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை முசெட்டி சிறப்பாக விளையாடி வென்றார். அடுத்து ஒரு செட்டை கைப்பற்றினால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் தொடர்ந்து விளையாடிய முசெட்டி காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
இதனால் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஜோகோவிச் தகுதி பெற்றார். வெற்றி பெற வேண்டிய போட்டியில் காயம் காரணமாக வெளியேறியதால் கண்ணீருடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மைதானத்தில் இருந்து இத்தாலி வீரர் முசெட்டி வெளியேறினார். அவருக்கு ரசிகர்கள் கைதட்டி வழியனுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் பெகுலா- அமென்டா அனிஸ்மோவாவுடன் மோதினர்.
- இந்த ஆட்டம் 1 மணி 35 நிமிட நேரம் நடைபெற்றது.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் 6-வது வரிசையில் உள்ள பெகுலா 6-2, 7-6 (7-1) என நேர்செட் கணக்கில் சகநாட்டை சேர்ந்த 4-ம் நிலை வீராங்கனையான அமென்டா அனிஸ்மோவாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 1 மணி 35 நிமிட நேரம் நடைபெற்றது.
ஜெசிகா பெகுலா அரை இறுதியில் கஜகஸ்தானை சேர்ந்த 5-வது வரிசையில் உள்ள ரைபகினாவுடன் மோதவுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு முதல் முறையாக பெகுலா தகுதி பெற்றுள்ளார்.
இன்னொரு அரைஇறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்)-சுவிட்டோலினா (உக்ரைன்) மோதுகிறார்கள்.
- காலிறுதி ஆட்டம் ஒன்றில் லெர்னர் டியென், அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர்.
- பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஸ்வெரெவ்-ம் 2-வது செட்டை லெர்னர் டியென் கைப்பற்றினர்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரர் லெர்னர் டியென், ஜெர்மன் வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஸ்வெரெவ்-ம் 2-வது செட்டை லெர்னர் டியென் கைப்பற்றினர். இதனையடுத்து நடந்த 3-வது செட்டை ஸ்வெரெவ் எளிதாக கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து நடந்த 4-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியாக ஸ்வெரெவ் 7-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் 6-3, 6-7 (5-7), 6-1, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஸ்வெரெவ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜானிக் சின்னர் மற்றும் லூசியானோ டார்டேரி மோதினர்.
- முதல் 2 செட்டை சின்னர் எளிதாக வென்றார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் மற்றும் அர்ஜெண்டினா வீரர் லூசியானோ டார்டேரி மோதினர்.
முதல் 2 செட்டை சின்னர் எளிதாக வென்றார். 3-வது செட் பரபரப்பாக சென்றது இறுதியில் அந்த செட்டையும் சின்னர் கைப்பற்றினார். இதன்மூலம் 6-1, 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு சின்னர் முன்னேறினார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் ஆஸ்திரேலியா வீராங்கனை மேடிசன் இங்கிலிஸ் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் ஸ்வியாடெக் 6-0, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
- 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரைபகினா (கஜகஸ்தான்) மெர்டன்ஸ் (பெல்ஜியம்) மோதினர்.
மெல்போர்ன்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள ரைபகினா (கஜகஸ்தான்) 6-1, 6-3 என்ற கணக்கில் மெர்டன்சை (பெல்ஜியம்) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
- 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமண்டா அனிசிமோவா மற்றும் வாங் சின்யு ஆகியோ மோதினர்.
- இந்த ஆட்டத்தில் முதல் செட் பரபரப்பாக சென்றது.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் செக் ஜக்குப் மென்சிக் ஆகியோர் மோத இருந்தனர். ஆனால் செக் வீரர் காயம் காரணமாக விலகியதால் விளையாடமலே ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி, அமெரிக்க வீரரான டெய்லர் ஃபிரிட்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா மற்றும் சீன வீராங்கனை வாங் சின்யு ஆகியோ மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் செட் பரபரப்பாக சென்றது. முதல் செட்டை அமெரிக்க வீராங்கனை 7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட்டும் பரபரப்பாக சென்றது. ஆனாலும் இதிலும் அமெரிக்க வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு அமண்டா அனிசிமோவா தகுதி பெற்றார்.
- 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ்- ஜெசிகா பெகுலா மோதினார்கள்.
- பெகுலா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 9-ம் நிலை வீராங்கனையுமான மேடிசன் கீஸ் ( அமெரிக்கா)- ஆறாவது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மோதினார்கள்.
இதில் கீஸ் தோற்று வெளியேறினார். பெகுலா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 18 நிமிட நேரம் தேவைப்பட்டது.
பெகுலா கால் இறுதியில் 4-வது வரிசையில் உள்ள அமன்டா அனிஸ்மோவா (அமெரிக்கா) அல்லது சின்யு வாங்கை (சீனா) சநதிக்கிறார்.
- சபலென்கா 7-6(7-4), 7-6( 9-7) என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- உலகின் முதல் நிலை வீரரான அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் பிரான்சை சேர்ந்த சேர்ந்த கோரன்டின் மவுடெட்டை சந்தித்தார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ் ) இன்று காலை நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரியாவை சேர்ந்த பொட்டாபோவாவை எதிர் கொண்டார். இதில் சபலென்கா 7-6(7-4), 7-6( 9-7) என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 2 நிமிட நேரம் தேவைப்பட்டது.
மற்றொரு ஆட்டத்தில் 17-வது வரிசையில் உள்ள விக்டோரியா எம்போகோ (கனடா) 7-6 (7-5), 5-7, 6-3 என்ற கணக்கில்14-ம் நிலை வீராங்கனையான கிளாராடவுசனை போராடி வீழ்த்தினார்.
உலகின் முதல் நிலை வீரரான அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் பிரான்சை சேர்ந்த சேர்ந்த கோரன்டின் மவுடெட்டை சந்தித்தார். இதில் அல்காரஸ் 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 5 நிமிட நேரம் தேவைப்பட்டது.
உலகின் 11-நிலை வீரரான மெட்வதேவ் (ரஷியா) 3-வது சுற்றில் அங்கேரியை சேர்ந்த பேபியன் மரோஸ்சனை எதிர் கொண்டார். இதில் மெட்வதேவ் 6-7 ( 5-7), 4-6, 7-5, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் 24-ந்தேதி தொடங்குகிறது.
- முதலாவது சுற்றில் தமிழக வீராங்கனை தியா ரமேஷ் அமெரிக்காவின் அனிதா டூவை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் 24-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான தகுதி சுற்று தற்போது நடந்து வருகிறது. இதன் சிறுமியர் பிரிவின் முதலாவது சுற்றில் தமிழக வீராங்கனை தியா ரமேஷ் அமெரிக்காவின் அனிதா டூவை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
2-வது சுற்றில் தியா ரமேஷ், ஜப்பானின் அஜூனா இச்சியோகாவுடன் மோதுகிறார். இதிலும் தியா வெற்றி பெற்றால் ஜூனியர் பிரதான சுற்றுக்கு தகுதி பெறுவார்.
- சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- மற்ற ஆட்டங்களில் சுவிட்டோலினா (உக்ரைன்) ஸ்னைடெர் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்) இன்று காலை நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் தகுதி நிலை வீராங்கனையான ஹோசியானை (சீனா) எதிர் கொண்டார்.
இதில் சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் சுவிட்டோலினா (உக்ரைன்) ஸ்னைடெர் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 13-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) 6-4, 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் போர்ச்சுகல்லை சேர்ந்த ஜேமிபெரியாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.






