என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jessica Pegula"

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
    • 3வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா எளிதில் வெற்றி பெற்றார்.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

    ஸ்டெபிகிராப் பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரமான பெலாரசின் அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடந்த 3வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய பெகுலா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.

    • அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா, லிண்டா நோஸ்கோவா மோதினர்
    • இந்த போட்டியில் முதல் செட்டை நோஸ்கோவாவும் 2-வது செட்டை பெகுலாவும் கைப்பற்றினர்.

    சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) லிண்டா நோஸ்கோவா (செக்) ஆகியோர் மோதினர்.

    பரபரப்பான இந்த போட்டியில் முதல் செட்டை நோஸ்கோவாவும் 2-வது செட்டை பெகுலாவும் கைப்பற்றினர். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் நோஸ்கோவா 7-6 (8-6) 3-வது செட்டை கைப்பற்றினார்.

    இதனால் 6-3, 6-1, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நோஸ்கோவா முன்னேறினார். இறுதிப்போட்டியில் நோஸ்கோவாவும் அனிசிமோவாவும் நாளை மோதுகின்றனர்.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது.
    • நான்காவது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, செக் நாட்டின் மேரி பவுஸ்கோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜாஸ்மின் பவுலினி 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-7 (4-7), 6-1 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் ரிண்டர்னெக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-3), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான ஆன் லி உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ், பென் ஷெல்டன் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
    • பெகுலா (அமெரிக்கா), ஜாஸ்மின் பயோலினி (இத்தாலி), ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    நியூயார்க்:

    ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது.

    24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், 7-ம் நிலை வீரருமான ஜோகோவிச் ( செர்பியா) முதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த லேனர் டியனை எதிர் கொண்டார். இதில் ஜோகோவிச் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    4-ம் நிலை வீரரான டெய்லர் பிரிட்ஸ், 6-வது வரிசையில் உள்ள பென் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    மகளிர் ஆட்டங்களில் 4-ம் நிலை வீராங்கனை பெகுலா (அமெரிக்கா), 7-வது வரிசையில் உள்ள ஜாஸ்மின் பயோலினி (இத்தாலி), 10-ம் நிலை வீராங்கனை ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    • ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்தது.
    • இதில் அமெரிக்காவின்ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்தது.

    இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார்.

    இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • முதல் செட்டை நோஸ்கோவா 7-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
    • நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் பெகுலா, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் மோதவுள்ளார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மற்றும் செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா மோதினர்.

    இதில் முதல் செட்டை நோஸ்கோவா 7-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். அடுத்த இரண்டு செட்டுகளை பெகுலா கைப்பற்றினார். இதன் மூலம் 2-7, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் பெகுலா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் பெகுலா, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் மோதவுள்ளார்.

    • ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் எம்மா நவாரோ காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான எம்மா நவாரோவை எதிர்கொண்டார்.

    இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-4 என முதல் செட்டை வென்றார். பதிலடி கொடுக்கும் விதமாக நவாரோ 6-1 என 2வது செட்டைக் கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பெகுலா 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடைபெற்ற 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பெலாரசின் விக்டோரியா அசரென்கா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக் வீராங்கனை சினியாகோவாவை எதிர்கொண்டார். இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் வெற்றி பெற்றார்.
    • பெண்களுக்கான 4-வது சுற்றில் மேடிசன் கீஸ், கோகோ காப், மிர்ரா ஆண்ட்ரீவா ஆகிய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மன்) டாலன் கிரீஸ்பூர் (டச்சு) ஆகியோர் மோதினர்.

    இதில் அலெக்சாண்டர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். 2-வது செட் 3-0 என்ற செட் கணக்கில் இருக்கும் போது டாலன் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் அலெக்சாண்டர் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), லோயிஸ் போய்சன் (பிரெஞ்சு) ஆகியோர் மோதினர். இதில் முதல் செட்டை பெகுலா கைப்பற்றினார். அடுத்த இரண்டு செட்டுகளை போய்சன் வென்று பெகுலாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

    மற்றொரு ஆட்டங்களில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கோகோ காப் (அமெரிக்கா), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா) ஆகிய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    • சின்னர் 6-0, 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    • மற்ற ஆட்டங்களில் ஜாக் டிராப்பர் (பிரிட்டிஷ்), டாலன் கிரீஸ்பூர் (டச்சு), ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் நாட்டின் ஜிரி லெஹெக்கா உடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் 6-0, 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் 4-வது சுற்றில் ரூப்லெவ் உடன் மோத உள்ளார்.

    மற்ற ஆட்டங்களில் ஜாக் டிராப்பர் (பிரிட்டிஷ்), டாலன் கிரீஸ்பூர் (டச்சு), ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, செக் வீராங்கனை மார்கெட்டா வோண்ட்ரூசோவாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை இழந்த பெகுலா அடுத்த இரண்டு செட்டை கைப்பற்றினார். இதனால் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பெகுலா வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டிகளில் அலெக்ஸாண்ட்ரோவா (ரஷ்யா), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா), டாரியா கசட்கினா (ரஷ்யா), லோயிஸ் போய்சன் (பிரெஞ்சு) ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். 

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
    • பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் கோகோ காப் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், செக் வீராங்கனை டெரேசா வேலன்டோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-2, 6-4 என்ற செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 7-6 (7-3) என்ற செட்கணக்கில் சக நாட்டு வீராங்கனை ஆன் லீயை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ×