என் மலர்
நீங்கள் தேடியது "Iga Swiatek"
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி உடன் மோதினார்.
சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் முதல் செட்டை 6-2 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மரியா சக்காரி அடுத்த இரு செட்களை 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2வது சுற்றில் வென்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் பிரிவு காலிறுதி சுற்றுக்கு இகா ஸ்வியாடெக், ரிபாகினா ஆகியோர் முன்னேறினர்.
இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில் அதிரடியாக ஆடிய கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, சீனாவின் குயின்வென் ஜெங்குவை 2-6, 6-2,
7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் சுற்றில் வென்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் பிரிவு 2வது சுற்றுக்கு இகா ஸ்வியாடெக், ரிபாகினா ஆகியோர் தேர்வாகினார்.
இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக் இந்தோனேசியாவின் ஜேனிஸ் டென்னை 6-0, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில் அதிரடியாக ஆடிய கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, சீனாவின் வாங் ஜின் யுவை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா இரண்டாவது சுற்றில் வென்றார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் செலக்மெடேவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பெகுலா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயாவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா இரண்டாவது சுற்றில் வென்றார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை கெஸ்லர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பெகுலா 6-0, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் செக் வீராங்கனை மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரியாத்:
54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
செரீனா பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா மற்றும் மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 3-6 என இழந்த ரிபாகினா அடுத்த இரு செட்களை 6-1, 6-0 என வென்றார். இதன்மூலம் நம்பர் 2 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் தொடங்கியது.
- முதல் சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் எளிதில் வெற்றி பெற்றார்.
ரியாத்:
ஒவ்வொரு ஆண்டும் 8 முன்னணி வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்நிலையில், 54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது.
ஸ்டெபிகிராப் பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரமான பெலாரசின் அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
செரீனா பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா மற்றும் மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
முதல் சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.
- வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி காலிறுதியில் வென்றார்.
பீஜிங்:
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் நம்பர் 2 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய பவுலினி 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 2 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தொடரில் இருந்து வெளியேறினார்.
- சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது.
- நான்காவது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், பிரிட்டனின் எம்மா நவாரோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எம்மா நவாரோ 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- போலந்தின் ஸ்வியாடெக் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் போலந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக், கொலம்பியாவின் எமிலியானா அரங்கோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்யாடெக் 6-1 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் தத்ஜனா மரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடந்த காலிறுதியில் இகா ஸ்வியாடெக், காஸ்பர் ரூட் ஜோடி வெற்றி பெற்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக்-நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, அமெரிக்காவின் கேட்டி மெக்னல்லி-இத்தாலியின் லாரன்சோ முசெட்டி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இகா ஸ்வியாடெக்-காஸ்பர் ரூட் ஜோடி 4-1, 4-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த ஜோடி நாளை நடைபெறும் அரையிறுதியில் ஜாக் டிராபர்-ஜெசிகா பெகுலா ஜோடியை எதிர்கொள்கிறது.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.






