என் மலர்
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் அரையிறுதிக்கு முன்னேறிய இகா ஸ்வியாடெக் ஜோடி
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடந்த காலிறுதியில் இகா ஸ்வியாடெக், காஸ்பர் ரூட் ஜோடி வெற்றி பெற்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக்-நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, அமெரிக்காவின் கேட்டி மெக்னல்லி-இத்தாலியின் லாரன்சோ முசெட்டி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இகா ஸ்வியாடெக்-காஸ்பர் ரூட் ஜோடி 4-1, 4-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த ஜோடி நாளை நடைபெறும் அரையிறுதியில் ஜாக் டிராபர்-ஜெசிகா பெகுலா ஜோடியை எதிர்கொள்கிறது.
Next Story






