என் மலர்
டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 2வது சுற்றில் நம்பர் 2 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரியாத்:
54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
செரீனா பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா மற்றும் மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 3-6 என இழந்த ரிபாகினா அடுத்த இரு செட்களை 6-1, 6-0 என வென்றார். இதன்மூலம் நம்பர் 2 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார்.
Next Story






