என் மலர்
ஆஸ்திரியா
- ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
- இதில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
வியன்னா:
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது.
இந்நிலையில், பள்ளி விடுமுறையைக் கொண்டாடும் விதமாக ஏராளமானோர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.
இந்த பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
- பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தபோது, கோவில் மீது தாக்குதல் நடத்தியிருந்தது தெரியவந்தது.
- நடவடிக்கை எடுக்கும்படி விக்டோரியா மாநில முதல்வர் மற்றும் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவில் மீது நேற்று தாக்குதல் நடத்திய நபர்கள், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி உள்ளதாக ஆஸ்திரேலிய இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. தமிழர்களால் மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தபோது, கோவில் மீது தாக்குதல் நடத்தியிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக உஷா செந்தில்நாதன் என்ற பக்தர் கூறுகையில், 'நாங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் சிறுபான்மையினர். இது எனது வழிபாட்டுத் தலம். காலிஸ்தான் ஆதரவாளர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தங்கள் வெறுப்புச் செய்திகளால் கோவிலை நாசப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. விக்டோரியாவில் உள்ள இந்து சமூகத்தினரை அச்சுறுத்த நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி விக்டோரியா மாநில முதல்வர் மற்றும் காவல்துறைக்கு வலியுறுத்தி உள்ளேன்' என்றார்.
இதேபோல், மெல்போர்ன் நகரில் சுவாமி நாராயண் என்ற இந்து கோவில் மீது கடந்த 12ம்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதியது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரியா நாட்டில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாதத்தின் மையம் அமைந்துள்ளது என பாகிஸ்தானை சாடினார்.
வியன்னா:
ஆஸ்திரியா நாட்டில் மத்திய வெளிவிவகாரத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அந்நாட்டின் வெளிவிவகார மந்திரியான அலெக்சாண்டர் ஸ்காலென்பர்க்கை சந்தித்துப் பேசினார். அதன்பின் இரு நாட்டு மந்திரிகளும் கூட்டாகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:
பயங்கரவாதத்தினால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை பற்றி ஆஸ்திரிய நாட்டு தலைவர்களுடன் பேசினேன். எல்லை கடந்த பயங்கரவாதம், வன்முறை, தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் உள்ளிட்டவற்றை பற்றியும் நாங்கள் விரிவாக பேசினோம்.
போதை பொருட்கள், சட்டவிரோத ஆயுத விற்பனை மற்றும் பிற வடிவிலான சர்வதேச குற்றங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று ஆழ்ந்த தொடர்பில் இருக்கும்போது, மேற்குறிப்பிட்ட பயங்கரவாத விளைவுகளை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அடக்கிவிட முடியாது.
இந்த பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு மிக அருகே அமைந்துள்ளது. எங்களுடைய அனுபவங்கள் மற்றும் பார்வைகள் பிறருக்கு பயனுள்ளவையாக இருக்கும் என தெரிவித்தார்.
- பாலியல் விவகாரத்தில் குணதிலகா சிக்கி கொள்வது இது முதல் முறையல்ல.
- குணதிலகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்து இருந்தது.
சிட்னி:
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தனுஷ்கா குணதிலகா. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இவர் இடம் பெற்று உள்ளார்.
31 வயதான குணதிலகா உலக கோப்பையில் கடைசியாக நமீபியாவுக்கு எதிராக கடந்த 16-ந்தேதி நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் விளையாடினார். அதன் பிறகு அவர் காயம் அடைந்தார். இதனால் அவருக்கு பதிலாக அஸ்கென் பண்டாரா அணியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் அவர் அணியோடு ஆஸ்திரேலியாவில் இருந்தார்.
இந்த நிலையில் கற்பழிப்பு வழக்கில் தனுஷ்கா குணதிலகாவை சிட்னியில் போலீசார் இன்று கைது செய்தனர்.
29 வயதான பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டி இருந்தார். கடந்த 2-ந்தேதி ஒரு வீட்டில் வைத்து நடந்தது. டேட்டிங் செயலி மூலம் அந்த பெண்ணுடன் குணதிலகா அறிமுகமானார். தனது அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக அவர் மீது அந்த பெண் 4 குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.
கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவை சிட்னி போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள்.
20 ஓவர் உலக கோப்பையில் இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. அந்த அணி இன்று அங்கிருந்து கொழும்பு புறப்பட்டது. குணதிலகா இல்லாமல இலங்கை அணி சொந்த நாடு திரும்பியது.
8 டெஸ்ட், 47 ஒரு நாள் போட்டி, 46 இருபது ஓவர் என 101 சர்வதேச போட்டிகளில் விளையாடி 2641 ரன்கள் எடுத்துள்ளார். 15 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
பாலியல் விவகாரத்தில் குணதிலகா சிக்கி கொள்வது இது முதல் முறையல்ல. 2018-ம் ஆண்டு இலங்கையில் நார்வே நாட்டு பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக அவரையும், அவரது நண்பரையும் போலீசார் விசாரித்தனர். இதனால் குணதிலகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்து இருந்தது.
ஆனாலும் இந்த விவகாரத்தில் குணதிலகா கைதாகவில்லை. அவருக்கு தனிப்பட்ட தொடர்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். அவரது நண்பர் மட்டுமே கைதாகி இருந்தார்.
- ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
- டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பெர்த்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
பெர்த்தில் இன்று நடக்கும் ஆட்டத்தில், இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் சற்று நேரத்திற்கு முன்பு போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.