என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    வியன்னா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் சின்னர், ஸ்வரேவ்
    X

    வியன்னா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் சின்னர், ஸ்வரேவ்

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
    • ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சக நாட்டு வீரர் பிளேவியோ கோபாலி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக விளையாடிய சின்னர் 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×