என் மலர்
டென்னிஸ்

வியன்னா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர்
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்றது.
- ஒற்றையர் பிரிவின் இறுதியில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.
வியன்னா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்றது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.
இதில் சின்னர் 3-6 என முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட சின்னர் அடுத்த இரு செட்களை 6-3, 7-5 என வென்று சாம்பியன் பட்டம் வென்றார். வியன்னா ஓபன் தொடரில் இவரது 2வது பட்டமாகும்.
Next Story






