என் மலர்
நீங்கள் தேடியது "Karanbir Singh Natt"
- கரன்பீர் சிங் இந்த ஆண்டில் 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார்.
- ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து உலக சாதனை படைத்தார்.
வியன்னா:
ஆஸ்திரியா அணி ருமேனியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் ஆஸ்திரியா வெற்றி பெற்றதுடன், 3-1 என தொடரைக் கைப்பற்றியது.
இதில் முதலாவது ஆட்டத்தில் 57 ரன் எடுத்த ஆஸ்திரிய தொடக்க ஆட்டக்காரர் கரன்பீர் சிங் 2-வது ஆட்டத்தில், 90 ரன்னும், 3-வது ஆட்டத்தில் 74 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 27 ரன்னும் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில், கரன்பீர் சிங் இந்த ஆண்டில் இதுவரை 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து உலக சாதனை
படைத்துள்ளார்.
முதல் இரு இடத்தில் இருந்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (2021-ம் ஆண்டில் 1,326 ரன்), இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (2022-ம் ஆண்டில் 1,164 ரன்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார்.
- ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
- இதில் படுகாயமடைந்து 8 ஆண்டு கோமாவில் இருந்த ராணுவ வீரர் மரணமடைந்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் ஹாஜி நகா கிராமத்தில் 2015, நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் இந்திய ராணுவம் ஒரு ஆபரேஷனை நடத்தியது. குப்வாராவின் கலரூஸ் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கர்னல் கரன்பீர் சிங் நாட் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கர்னல் கரன்பீர் சிங் கோமா நிலைக்குச் சென்றார்.
தனது கணவர் கண் விழிப்பார் என அவரது மனைவியும், அவரது குழந்தைகளும் 8 ஆண்டாகக் காத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று கர்னல் கரன்பீர் சிங் நாட் காலமானார். அவர் 20 ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார். சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இவர், கடந்த 1998-ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார். அங்கு பல்வேறு பிரிவுகளில் 14 ஆண்டு பணிபுரிந்த இவர் அதன்பின் பிராந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக சேவை புரிந்தார்.
கர்னல் கரன்பீர் சிங் நாட் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






