search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Austria"

    • அமெலியா 1945ல் ஆஸ்திரியா நாட்டில் பிறந்து ஸ்லோவேனியாவில் வளர்ந்தவர்
    • தனது தாயாரை ஒரு இரும்பு பெண்மணி என குறிப்பிட்டுள்ளார், மெலனியா

    முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் (Melania Trump).

    மெலனியா டிரம்பின் தாயார் 78 வயதான அமெலியா நாவ்ஸ் (Amalija Knavs). ஸ்லோவேனியா நாட்டில் தொழிற்சாலை ஊழியராக பணி புரிந்து வந்த நாவ்ஸ், தனது மகள் மெலனியா, டிரம்பை திருமணம் செய்து கொண்டதால், அவர் கணவர் விக்டருடன் இணைந்து இருவரும் 2018ல் அமெரிக்க குடியுரிமை பெற்றனர்.

    1945, ஜூலை மாதம் 9 அன்று ஆஸ்திரியா நாட்டில் பிறந்த அமேலியா ஸ்லோவேனியாவில் வளர்ந்தார். அவரது தந்தை காலணி தொழிலாளியாக இருந்து பிறகு வெங்காய விற்பனையாளராக மாறியவர்.

    2024 ஜனவரி 1, புத்தாண்டு நிகழ்ச்சியின் போது, புளோரிடா (Florida) மாநில பாம் பீச் (Palm Beach) பகுதியில் உள்ள தனது மார்-அ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் டிரம்ப் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார்.

    அப்போது டிரம்பிடம் அவர் மனைவி இல்லாதது குறித்து கேட்கப்பட்ட போது, தனது மாமியார் உடல் நிலை சரியில்லாததால் மியாமி (Miami) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மெலனியா அங்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நாவ்ஸ் உயிரிழந்தார்.

    இத்துயர செய்தியை மெலனியா தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் மெலனியா, "அமெலியா ஒரு இரும்பு பெண்மணி. கணவர், குழந்தைகள், மருமகன் ஆகியோரிடம் மிகுந்த பாசம் உடையவர். அவரை நாங்கள் இழந்து விட்டோம். அவர் நினைவை நாங்கள் என்றென்றும் போற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.


    • வடமேற்கு ஆஸ்த்ரியாவின் பிரௌனாவ் அம் இன் பகுதியில் அடோல்ஃப் ஹிட்லர் பிறந்தார்.
    • 2019 ஆண்டு இந்த கட்டிடம் காவல் நிலையமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அடோல்ஃப் ஹிட்லர் வசித்து வந்த வீடு மனித உரிமைகள் பயிற்சி மையமாக மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய அறிவிப்பை ஆஸ்த்ரியாவின் உள்கட்டமைப்பு துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டது.

    இந்த வீடு நாஜிக்கள் யாத்திரை மேற்கொள்ளும் அளவுக்கு புனித தளமாக மாறுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய ஆலோசனை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    வியென்னாவில் இருந்து 284 கிலோமீட்டர்கள் கிழக்கு திசையில் அமைந்திருக்கும் வடமேற்கு ஆஸ்த்ரியாவின் பிரௌனாவ் அம் இன் பகுதியில் உள்ள கட்டிடத்தில் அடோல்ஃப் ஹிட்லர் பிறநதார். ஹிட்லரின் மூன்றாவது வயது வரை அவர் அங்கு வசித்து வந்தார்.

    இந்த கட்டிடத்தின் உரிமையாளர் கெர்லிண்ட் பொம்மர். ஹிட்லர் பிறக்கும் முன் அந்த கட்டிடத்தை இந்த குடும்பம் தான் வைத்திருந்தது. 2016 ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த கட்டிடத்தை கையகப்படுத்தியது. 2019 ஆண்டு இந்த கட்டிடம் காவல் நிலையமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், அறிவிப்பின் படி இந்த கட்டிடம் காவல் நிலையமாக மாற்றப்படவில்லை.

    அந்த வகையில் தான் ஹிட்லரின் வீடு ஆஸ்த்ரியாவின் மிகப்பெரும் மனித உரிமைகள் ஆணைய அலுவலகம் மற்றும் பயிற்சி மையமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஆஸ்திரியா அதிபர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் அறிவித்துள்ளார்.
    வியன்னா:

    ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதில் ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரியா, ஆஸ்திரேலியாவிலும் பாதிப்பு அதிகமாகி இருக்கிறது. 

    ஆஸ்திரியாவில் இதுவரை 4 அலைகளாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஐந்தாவது அலையும் உருவாகலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, தடுப்பூசி போடாத மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய் தொற்று ஏற்படலாம் என கருதப்படும் பகுதிகளில் உள்ள வெளியே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஆஸ்திரியா பிரதமர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் அறிவித்துள்ளார். 

    இந்த ஊரடங்கு குறைந்தது 10 நாட்கள் நீடிக்கும் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

    இதேபோல் தடுப்பூசி போடப்படாதவர்களுக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை தொடங்கும் என்று ஸ்லோவாகியா பிரதமர் எட்வர்ட் ஹெகர் அறிவித்தார். மேலும் செக் குடியரசு அரசாங்கமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் பிரேசில், ஆஸ்திரியா மோதின. இந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது. #FIFO2018 #Brazil #Austria
    வியன்னா:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, தனது முதலாவது லீக்கில் சுவிட்சர்லாந்தை 17-ந்தேதி சந்திக்கிறது.

    இதையொட்டி பிரேசில் அணி தனது கடைசி பயிற்சி ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரியாவுடன் வியன்னா நகரில் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் வசமே பந்து அதிகமாக (65 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் கேப்ரியல் ஜீசஸ் 36-வது நிமிடத்திலும், நெய்மார் 63-வது நிமிடத்திலும், பிலிப் காட்டினோ 69-வது நிமிடத்திலும் கோல் போட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினர். இறுதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை எளிதில் வீழ்த்தியது. நெய்மார், பிரேசில் அணிக்காக அடித்த 55-வது கோல் இதுவாகும். இதன் மூலம் அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் ரொமாரியோவை சமன் செய்தார். பிரேசில் அணி கடைசியாக ஆடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி உலக கோப்பை போட்டிக்குள் நுழையும் பிரேசிலுக்கு புத்துணர்ச்சியையும், கூடுதல் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

    மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, துனிசியாவை எதிர்கொண்டது. முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி, முதல் பாதியில் இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை. எப்படியோ 84-வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் லகோ அஸ்பாஸ் அடித்தகோலின் உதவியுடன் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. #FIFO2018 #Brazil #Austria
    ×