டிரம்பின் மாமியார் காலமானார் - "இரும்பு பெண்மணி" என மெலனியா புகழாரம்

அமெலியா 1945ல் ஆஸ்திரியா நாட்டில் பிறந்து ஸ்லோவேனியாவில் வளர்ந்தவர்தனது தாயாரை ஒரு இரும்பு பெண்மணி என குறிப்பிட்டுள்ளார், மெலனியா
டிரம்பின் மாமியார் காலமானார் - "இரும்பு பெண்மணி" என மெலனியா புகழாரம்
Published on

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் (Melania Trump).

மெலனியா டிரம்பின் தாயார் 78 வயதான அமெலியா நாவ்ஸ் (Amalija Knavs). ஸ்லோவேனியா நாட்டில் தொழிற்சாலை ஊழியராக பணி புரிந்து வந்த நாவ்ஸ், தனது மகள் மெலனியா, டிரம்பை திருமணம் செய்து கொண்டதால், அவர் கணவர் விக்டருடன் இணைந்து இருவரும் 2018ல் அமெரிக்க குடியுரிமை பெற்றனர்.

1945, ஜூலை மாதம் 9 அன்று ஆஸ்திரியா நாட்டில் பிறந்த அமேலியா ஸ்லோவேனியாவில் வளர்ந்தார். அவரது தந்தை காலணி தொழிலாளியாக இருந்து பிறகு வெங்காய விற்பனையாளராக மாறியவர்.

2024 ஜனவரி 1, புத்தாண்டு நிகழ்ச்சியின் போது, புளோரிடா (Florida) மாநில பாம் பீச் (Palm Beach) பகுதியில் உள்ள தனது மார்-அ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் டிரம்ப் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார்.

அப்போது டிரம்பிடம் அவர் மனைவி இல்லாதது குறித்து கேட்கப்பட்ட போது, தனது மாமியார் உடல் நிலை சரியில்லாததால் மியாமி (Miami) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மெலனியா அங்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நாவ்ஸ் உயிரிழந்தார்.

இத்துயர செய்தியை மெலனியா தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில் மெலனியா, "அமெலியா ஒரு இரும்பு பெண்மணி. கணவர், குழந்தைகள், மருமகன் ஆகியோரிடம் மிகுந்த பாசம் உடையவர். அவரை நாங்கள் இழந்து விட்டோம். அவர் நினைவை நாங்கள் என்றென்றும் போற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com